சொர்க்கத்திற்கான தகுதிகள்
விழிப்புணர்வு கட்டுரை
மதுரை கங்காதரன்
உடலை
வைத்துக் கொண்டுதான் உயிர் வாழ முடியும். ஆரோக்கியமான
உடலே சொர்க்க்த்திற்குச் செல்லும் தகுதி கொண்டது. அதுவே
நீண்ட ஆயுளையும், மகிழ்ச்சியையும், நிம்மதியையும்
தரும். உடலிலிருந்து பிரியும் உயிரே (ஆன்மா)சொர்க்கதிற்குச் செல்கிறது. அதிலும் உடல் வலியில்லாமல்
பிரியும் உயிரே உண்மையான சொர்க்கத்திற்குச் செல்லும் தகுதி கொண்டது. இவ்வுலகில் பிறக்கின்ற உயிர்கள் அனைத்தும்
வாழவேண்டியக் கட்டாயத்தில் இருக்கின்றது. அப்படிப்
பிறகின்றபோது பலருக்குக் கூடவே துன்பத்தையும் ஒட்டிக் கொண்டுதான் பிறக்கின்றன.
பொதுவாக குழந்தைகள் பிறக்கின்றபோது ஆரோக்கியமாகவேப் பிறக்கின்றன.
அதற்குக் காரணம், குழந்தைக் கருவாக இருக்கும்போது
தாயின் உயிரானது, அக்குழந்தையைக் காப்பதற்கு அதிக அக்கறையை எடுத்துக்
கொள்கிறது. ஆனால் அதைக் காட்டிலும் குறைவாகவே அக்குழந்தை
வெளிவந்த பிறகு தாயானவள் காட்டுகின்றாள். அதற்குப் பல
காரணங்கள் இருக்கின்றன. விதிவிலக்காகச் சிலர் இருக்கலாம்.
அப்படி
வளர்கின்ற உடலானது தன்னைச் சுற்றிலும் இருக்கும் 'மாயை' என்று சொல்லப்படுகின்ற கவர்ச்சி, அழகு, அன்பு, மயக்கம், இரக்கம், கோபம், பொறாமை,
ஆசை போன்றவற்றால் அளவுக்கு அதிகமாக ஈர்க்கப்படும்போது உடலின் ஆரோக்கியத்தைத்
தடுமாறச் செய்துவிடுகின்றது. வாழ்க்கையின் விதி என்னவென்றால்
'எதிலும் அளவோடு ஆசை இருந்தால் ஆயுள் முழுதும் அனுபவிக்கலாம்'.
அந்த நிலையில்தான் உயிரும் உடலும் சமநிலையில் இயங்கும். ஏதாவது ஒன்றிலோ அல்லது பலவற்றிலோ மனமானது அதிக ஆசைபடும்போது மற்ற
குணங்களின் நிலை தாழ்ந்து விடுகின்றன. அந்தவேளையில்தான் மனதில்
குழப்பங்கள் தோன்ற ஆரம்பிக்கின்றன. மனம் குழப்பத்தில் இருக்கும்போது
உடலின் உள் வெளி உறுப்புகள் சரியானபடி செயல்படுவதில்லை. அதனால்
உடல் தோற்றத்தாலும், ஆரோக்கியத்தாலும் நலிவு அடைய ஆரம்பிக்கின்றது.
அதுவே பல நோய்கள் உண்டாவதற்குக் காரணமாகவும் அமைந்துவிடுக்கின்றது.
இதயநோய், சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு, வயிற்றுவலி, தலைவலி, உடல்வலி
போன்ற உபாதைகள் பெரும்பாலோருக்கு ஆரம்பத்தில் இல்லாமலும் போகப்போக அவைகள் ஏற்பட்டதாகவும்
இருக்கும். அதற்கான காரணங்கள் உங்களுக்கே நன்கு
தெரிந்திருக்கலாம். அல்லது தெரியாமலும் இருக்கலாம். அனைத்திற்கும் காரணம், நாம் உட்கொள்ளும் உணவினால் வந்ததே.
புதிய புதிய பெயரில், புதிய புதிய வடிவில்,
புதிய புதிய இடத்திலிருந்து வரும் உணவுப்பண்டங்களை நாகரீகம்,
கலாச்சாரம் என்கிற பெயரில் நம் உடல் ஒத்துக் கொள்ளுமா? ஒத்துக் கொள்ளாதா? என்பதைக் கூட எண்ணாமல் வாய்க்கு உள்ளே
அனுப்பி, நாக்கு ஆல் சுவைத்து உடலின் ஆரோக்கியத்தைக் கொஞ்சம்
கொஞ்சமாக அழியக் காரணமாய் இருந்தது யார் என்று இப்போது தெரிகின்றதா? உடலுக்கு என்ன வந்தாலும் இருக்கவே இருக்கிறார் மருத்துவர். கடையில் நூறு ரூபாய் சாப்பிட்டதால் மருத்துவருக்கு ஆயிரம் ரூபாய் தண்டம்
செலுத்த நீங்கள் தயாராக இருக்கும்போது அதை யாராவது தடுக்க முடியுமா? எல்லாவற்றையும் அனுபவிக்கத்தான் வேண்டும். புதிதாக உண்ட
உணவு நல்லதோ அல்லது தீயதோ அதன் தாக்கம் சிலருக்கு உடனடியாகத் தெரியும். பலருக்கு நாட்கள் கடந்து தெரியும்
எப்படி
இருந்தாலும் அதிலிருந்து எவ்வளவு விரைவாக விடுபடுகிறீர்களோ அவ்வளவு விரைவாக உங்கள்
உடல் ஆரோக்கியம் அடையும். அவ்வாறு முடியாவிட்டாலும்
பரவாயில்லை. அதைத் தாங்கக் கூடிய அளவிற்குப் பார்த்துக்
கொண்டாலேப் போதுமானது. ஏனெனில் நோய்நொடியில்லாத அல்லது நோய் குறைவாக
இருக்கின்ற உடலே எளிதாகச் சொர்க்கத்தை அடைதற்குத் தகுதி அடைகின்றன.
பொதுவாக
உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது பசிக்கும்போதோ அல்லது வேளாவேளைக்கு எடுத்துக்
கொள்ளும் எளியவகை உணவுகள், இயற்கைக் காய்கனிகள்,
சுத்தமான தண்ணீர், சிறிதளவு உடற்பயிற்சி,
சரியான தூக்கம் ஆகியவைகள் மட்டுமே. வசதியுள்ளவர்கள்
அதிகச் சத்துள்ள விலை அதிகமுள்ள உணவுப்பொருள்களை உட்கொள்கிறார்கள். எவைகளை உட்கொண்டாலும் உடல் ஆரோக்கியம் பெறுவது ஒன்றாகத்தான் இருக்கும்.
இதில் அடங்கியிருக்கும் மிகப்பெரிய உண்மை என்னவென்றால், இவைகளை நல்லவனோ, கெட்டவனோ, தீமை
செய்பவனோ, நன்மை செய்பவனோ, சோம்பேறியோ,
சுறுசுறுப்பானவனோ போன்றவர்கள் யாராக இருந்தாலும் அந்த உடல் ஆரோக்கியம்
ஒரே மாதிரியாகத்தான் கிடைக்கும். அதில் துளியளவும் வேறுபாடு இருக்காது.
ஏனெனில் உடல் அமைப்பானது உட்கொள்கின்ற உணவைப் பொறுத்துதான்
வேலைசெய்கின்றதே தவிர உட்கொள்கின்ற ஆள் பொறுத்தல்ல.
ஏமாற்றுக்காரர்கள், பொய்யர்கள், நல்லவர்கள் போல் பாசாங்கு செய்பவர்கள்,
கொலை கொள்ளைக்காரர்கள், பிறரைத்
துன்புறுத்துபவர்கள் போன்ற பசுந்தோல் போர்த்திய ஆட்கள் சிரித்துக் கொண்டே வலம் வருவதற்குக்
காரணம் அவர்கள் உண்ணும் ஆரோக்கியமான உணவே. அதனால்தான்,
மேற்கொண்டு மேற்கொண்டு தொடந்து பலரை ஏமாற்ற முடிகின்றது. ஆரோக்கியமான உடலைக் கண்டால் அந்த எமன் கூட கண்கானாத இடத்திற்குச்
சென்றுவிடுவான். அந்நிலையில் எமனால் ஒன்றும் செய்ய இயலாது.
ஒருவரின்
உடல் ஆரோக்கியத்தைக் கொண்டு அவரின் ஆயுளை கணக்கிடலாம்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
No comments:
Post a Comment