Pages

Thursday 8 February 2018

மானம் காக்கும் தமிழ் - புதுக்கவிதை

      மானம் காக்கும் தமிழ் 
            புதுக்கவிதை 
      மதுரை கங்காதரன் 

தொன்மையின் சின்னமானத் தமிழ் 
தொழும் முருகக் கடவுளானத் தமிழ் 
தனித்தன்மையின் வெளிப்பாடுத் தமிழ் 
தன்மானத்தின் மொத்தஉருவம் தமிழ்.

பொதுத்தன்மை பரப்புவது தமிழ் 
பொன்னான சொற்களுள்ள தமிழ் 
தாய்மையின் குணமுள்ள தமிழ்
தன்மானத்தின் சிகரம் செந்தமிழ் 

பண்பாடு உணர்த்திடும் தமிழ் 
பல்கலைக் களஞ்சியமே தமிழ் 
இலக்கியவளமிக்க புதையலே தமிழ் 
இனமானத்தின் தாயே இன்பத்தமிழ். 

தமிழர்களின் உரிமைக்குரலே தமிழ் 
தமிழர்களின் அடையாளமே தமிழ் 
தரணியெங்கும் தவழ்வது தமிழ் 
தன்மானத்தில் கவரிமானே கன்னித்தமிழ்.

உயர்சிந்தனை மாண்பே தமிழ்
ஒப்பில்லா உணர்வே தமிழ்
மெய்ஞானத்தின் பிறப்பே தமிழ்  
மொழிமானத்தின் சிறப்பே அமிழ்தமிழ் 

எம்மொழிக்கும் ஏற்ற மொழி தமிழ் 
எம்தமிழர்களின் சுவாசக் காற்றே தமிழ் 
மாண்டாலும் புதையும் மண்ணே தமிழ் 
மானத்தின் உயர்வே செம்மொழி தமிழ்.

     நன்றி, வணக்கம்.

No comments:

Post a Comment