Pages

Monday, 27 May 2019

26.5.19 தமிழகமே தமிழ் மறந்தால் - கவியரங்கம் - மாமதுரைக் கவிஞர் பேரவை



26.5.19 தமிழகமே தமிழ் மறந்தால் - கவியரங்கம் -
 மாமதுரைக் கவிஞர் பேரவை  

அன்று நான் வாசித்தக் கவிதை 
தமிழகமே தமிழ்மறந்தால்
தமிழ்மொழியை யார்படிப்பார்?
          புதுக்கவிதை
 கு.கி.கங்காதரன்  மதுரை  9865642333

மழையை வானம் மறந்தால்
மண்ணின் வளம் என்னாவது?
கதிரவன் ஒளிவீச மறந்தால்
கண்ணான வாழ்வு என்னாவது? 

எழுத்துகளை மொழி மறந்தால்
இயற்றிய நூல்கள் என்னாவது?
தமிழ்பேசத் தமிழன் மறந்தால்
தமிழகப் பெருமை என்னாவது? 

பசி மயக்கம் தணியலாம்
பண மயக்கம் தணியுமா?
தமிழ் மயக்கம் தணியலாம்
ஆங்கில மயக்கம் தணியுமா?

எறும்பு ஊரஊரக் கல்லும் தேயுமாம்
ஆங்கிலம் பேசப்பேச தமிழும் தேயுமே
அகவை ஏறஏற உயிருடம்பு மாயும்
அந்நியச்சொல் சேரசேர தமிழும் மாயும்.

புதைந்து போனத் தனித்தமிழுக்குப்
புத்துயிர் ஊட்ட தமிழகம் தயங்குது
தமிழன் மூளையில் பதிந்த ஆங்கிலத்தைத்
துடைத்திடத் தமிழன் மனம் மறுக்குது.   

******************
விழா - மின்படத் தொகுப்பு 









மேலும் மின்படங்களுக்கு -- கீழுள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும் 



M.V.வெங்கட்ராம் நினைவு சிறுகதைப் போட்டி- 2019 அவ்ராம் அமி- அதிதி


M.V.வெங்கட்ராம் நினைவு 
சிறுகதைப் போட்டி - 2019 
பரிசளிப்பு விழா - அவ்ராம் அமி- அதிதி 








































































நன்றி