Pages

Sunday, 22 September 2019

22.9.19 கம்பர்போல் தமிழ்எழுத்தால் எழுதல் காப்பே!- மாமதுரைக் கவிஞர் பேரவை



அனைத்துத் தமிழ் உள்ளங்களுக்கு வணக்கம்....

நேற்று (22.09.19) மாமதுரைக் கவிஞர் பேரவை, மணியம்மை மழலையர் பள்ளி, மதுரையில் நடந்த தனித்தமிழ் எழுத்து இயக்கத்தின் மூன்றாம் ஆண்டு 9ஆம் திங்கட் கவியரங்கத்தில் 'கம்பர்போல் தமிழ்எழுத்தால் எழுதல் காப்பே !' என்கிற தலைப்பில் வாசித்த கவிஞர்களின் கவிதைகள் மற்றும் மின்படங்கள் (Photos) உங்களுக்காக..

கம்பர்போல் தமிழ் எழுத்தால் எழுதல் காப்பே
                                      புதுக்கவிதை 
                     மதுரை கு.கி. கங்காதரன் 

அழகு தமிழில் இராமாயணம்
அள்ளி வழங்கிய கம்பனாடர்
கவிஞர்களுக்கு இலக்கிய விருந்து
தமிழர்களுக்கு இனிய மருந்து

வடமொழித் தழுவலில் சிறந்தது 
வால்மீகியை மறந்திடச் செய்தது
வளமிக்கத் தமிழை உணர்த்தியது
வாழ்க்கையைக் கவியில் புகட்டியது.

தமிழர் கலாச்சாரம் மெருகூட்டியது
தமிழுக்கான 'கதி'யில் ஒன்றானது.
தமிழெழுத்தால் செதுக்கிய சிற்பமானது
தவத்தாலும் கிடைத்திடாத அற்புதமானது.

தமிழெழுத்தால் மட்டுமே எழுதப்பட்டதாலே
தாங்கிய கிரந்தெழுத்துகள் அறுக்கப்பட்டதாலே
மேன்மையாய் செந்தமிழில் வர்ணிக்கப்பட்டதாலே  
மொழிமாசில்லாமல் தமிழ்க்கற்பு காக்கப்பட்டதே. 

சொல்லாட்சியில் கவிச்சக்கரவர்த்தி 
சொக்கும் அழகில் கவிநுணுக்கவாதி
அசைபோடத் தூண்டும்  இலக்கியவாதி    
அருந்தமிழைத் தங்கமாக்கிய இரசவாதி

மனிதனையும் தெய்வம் ஆக்கினார் கம்பர்  
மந்திகளையும் இதயத்தில் நுழைத்தார் கம்பர் 
உவமையில் வானளவுக்கு உயர்த்தினார் கம்பர்
இலக்கியத்திற்கு அகராதியாய்ப் படைத்தார் கம்பர்..
                                  **********************
























மேலும் 

நன்றி 



Saturday, 14 September 2019

HIDDEN CHEMISTRY IN CLOUDS, PLANTS AND WILDFIRE- மறைத்திருக்கும் வேதியியல் BY K.K.GANGADHARAN


HIDDEN CHEMISTRY IN CLOUDS, PLANTS, 
AND WILDFIRE-
மறைத்திருக்கும் வேதியியல் 
BY K.K.GANGADHARAN, MADURAI,
 TAMIL NADU, INDIA

இந்த கட்டுரையானது உலக அறிவியல் அறிஞர்களுக்கு இதுவரையில் எட்டாத பல கருத்துக்களின் தொகுப்பாகும். அதாவது அறிவியல் ஆய்வாளர்கள் மேம்போக்காக ஊகமாகச் சொல்லிய பல விளக்கங்களை இதில் ஆதாரத்துடன் ஆணித்தரமாக சொல்லப்பட்டுள்ளது. மனிதர்களும் விளங்கினங்களும் உருவாகுவதற்கு முன்பே மிகமிக மூத்ததாக பற்பல ஆண்டுகளுக்கு முன்னமே மரம் செடி கொடி ஆகிய தாவர வகைகள் மலைகளில் நிலத்தில் பள்ளத்தில் காடுகளாக சோலைவனங்களாக இப்பூமியில் பரந்து விரிந்து கிடந்துள்ளது என்பது அறிவியல் ஆய்வாளர்கள் சொல்லும் உண்மை. அத்தகைய தாவர இனமானது இன்றுவரை ஏன் இனி வருங்காலத்திலும் சில கொள்கைகளைத் தவறாது கடைபிடித்து வந்து கொண்டிருக்கின்றது. அவை மீண்டும் மீண்டும் உருவாக்கம் Re-production, மறு சுழற்சி (Recyle), மறுப்பு (Refuse), மறு பயன்பாடு (Reuse), தங்குதல் (Retain), தளருதல் (Reduce) என்பதாகும். அச்செயலுக்கு இயற்கையானது பல உருவங்களில் ஆதரவாகவும் இணக்கமாகவும் உதவியாகவும் இருந்துவருகின்றது என்றால் அது மிகையாகாது. அந்த இயற்கையானது யாதெனில் இடி, மின்னல், சூறாவளி, நிலநடுக்கம், பூகம்பம், வெள்ளம், வறட்சி, எரிமலை, மழை, காற்று, காட்டுத்தீ, பருவகால மாற்றம் என்பவை அதில் அடக்கம்.

தாவரங்கள் தோன்றியபோது மனிதர்கள் இல்லை அல்லது மிகமிகச் சிறிய அளவிலே இருந்திருப்பார்கள். வாகனங்கள், தொழிற்சாலைகள் கட்டாயமாக இருந்திருக்க வாய்ப்பில்லை.,காட்டழிப்பு நடைபெற்று இருக்காது, மேலும் நீர், நிலம், காற்று ஆகியவற்றில் மாசுபாடு இருந்திருக்காது. ஆகையால் புவி வெப்பமயமாதல், ஓசோன் ஓட்டைக்கு வேலையில்லை என்பதை நிச்சயமாக அறிவியல் ஆய்வாளர்கள் ஒத்துக்கொள்வார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இருக்காது என்றும் நம்புகிறேன். அப்போதும் காற்றில் 21% ஆக்ஸிஜன், 78% நைட்ரஜனும் மீதம் 1% இதர வாயுக்கள் மிக சொற்ப அளவில் இருந்திருக்கும். இன்றும் அதன் அளவில் அதிக வித்தியாசம் இல்லாமல் உள்ளது.

நமக்குத் தெரியும், தாவரங்கள் ஒளிச்சேர்கையினால் நீர் (H2O), காற்று (O2), கரியமிலவாயுவின் (CO2) மூலம் சூரிய ஒளியின் (Photosynthesis) உதவியால் 'ஸ்டார்ச்' (Starch – C6H12O6) என்கிற உணவைத் தயாரிக்கின்றது என்பது ஆய்வகத்தின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இனிமேல் தான் நீங்கள் பல கேள்விகளுக்குப்  புதிதாக பல விடைகளைப் பார்க்கப் போகின்றீர்கள்.   

தாவரங்கள் தயாரிக்கும் கரிம வேதிப்பொருளான 'ஸ்டார்ச்' சூரிய ஒளியின் உதவியால் CO2 மற்றும் H2O விணைபுரிந்து உண்டாகின்றது என்று அறிவியல் ஆய்வு சொல்கிறது. ஆனால் மேற்கூறிய இரண்டும் வாயுப் பொருள். பின் எப்படி திடப்பொருளான 'ஸ்டார்ச்' உருவாகும். அதற்கு இதுவரையில் சரியான  விளக்கம் இல்லை. அதேபோல் ஆய்வகத்தில்  CO2 மற்றும் H2O விணைபுரிந்து ஸ்டார்ச் உண்டாகும் என்று நிரூபிக்கப்படவில்லை. இன்னும் சரியாகச் சொல்லப்போனால் எந்த ஒரு கரியமில வாயுவை எரித்தால் CO2 மற்றும் H2O கிடைக்கும் என்று ஒரு நூற்றாண்டுகளாகவே சொல்லி வருகிறார்கள் அறிவியலாளர்கள். அதாவது உதாரணமாக
CH4 (மீத்தேன்) + O2 (காற்று) ------> CO2 + 2H2O

இப்படியே வைத்துக் கொள்வோம். இதில் CO2 தாவரங்களுக்குத் தேவைப்படும் போது அது எப்படி காற்று மாசுக்குக் காரணமாக இருக்கும். அதேபோல் H2O (தண்ணீர்) ஆனது கிட்டத்தட்ட எல்லா உயிரினங்களுக்கும் இன்றியமையான ஒன்றாகும். ஆக கரிமப் பொருட்களான பெட்ரோல், டீசல் எரியும்போது (வாகனம், தொழிற்சாலை வாயிலாக) இவ்விரண்டு வாயுக்கள் வெளிவந்தால் எப்படி காற்று மாசு உண்டாகும்? ஒருவேளை விணைவிளையும் பொருட்கள் இவ்வாறு இருக்கலாமோ!

3CH4 (மீத்தேன்)+ 5O2 (காற்று) -----> C (கரித்துகள் மாசு) + 2CO2 (சிறிதளவு) + 6H2O
இந்த கரித்துகள் மாசு காற்றில் உண்டாகுவதற்கு வாய்ப்பு இருக்கின்றது!

அந்த கரித்துகள்களே மேகங்களில் சேரும்போது கருமேகங்களாக காட்சியளிக்கின்றன. அதுவே கார்பன் இழைகளாக (Electrodes) மாறி மின்னல் தோன்றவும் அதனால் இடியும் உண்டாவதற்குக் காரணமாக இருக்கின்றன. அதோடு அந்த கார்பன் துகள்களே நீரை அட்சார்ப்சன் (Adsorption) முறையில் வெப்பம் மற்றும் அழுத்தம் உதவியால் தன்னுள் வைத்துக்கொள்கின்றது. எப்போது வெப்பம் மற்றும் அழுத்தம் குறையத் தொடங்குகின்றதோ அப்போது கொஞ்சம் கொஞ்சமாக மழையாகப் பொழிய ஆரம்பிக்கின்றது. எந்த அளவுக்கு நீர் ஏற்றி வைத்துக்கொண்டதோ அந்த அளவுக்கு மழை தருகின்றது. கார்பனின் இந்த 'அட்சார்ப்சன்' (Adsorption) காரணத்தினால் தான் நீர் துளித்துளியாக விழுகின்றது. மேகம் எதனால் கருமையாக இருக்கின்றது என்று இதுவரை அறிவியல் சொல்லிவந்த காரணம் என்னவென்றால் மேகத்தின் அடர்த்தி அதிகரித்து இருப்பதால் தான் என்கின்றனர். இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் அது உண்மை அல்லவென்று! ஏனென்றால் மேகம் கொண்டுள்ள நீர் எவ்வித மாசு இல்லாமல் உருவாகும்போது அது எவ்வாறு கருமையாக மாறும். மேலும் மேகங்கள் அடுக்கடுக்காய் தான் உருவாகின்றன. அதனால்தான் சிலவேளையில் மேகங்கள் நகரும்போதும் ஓடும்போதும் மேலடுக்கு மேகங்கள் நிலையாகவும், கீழடுக்கு மேகங்கள் ஓடுவதையும் காணலாம். சிலவேளைகளில் இதற்கு மாறாகவும் நடக்கலாம்.

மேகத்தில் நடப்பது என்னவென்றால், பூமியில் கரிம நீர் (Bio moisture), X-மைக்ரோ ஆர்கானிசம் அதனை எளிதாக ஹைட்ரஜன் தனியேவும், ஆக்சிஜன் தனியேவும் பிரிக்கின்றது. இந்த கரிம நீரானது, தாவரத்தின் இலைகளில் மூலமும், மனிதன் பயன்படுத்தும் நீரின் மூலமும், அணை, ஆறு, குளம், குட்டை முதலிய நன்நீர் மூலமும், மண்ணில் உறிஞ்சப்பட்டுள்ள நீரின் மூலமும் நடக்கிறது. அது எப்படியென்றால் ஒரு கண்ணாடி குடுவை அளவு சூரிய கதிரால் ஹைட்ரஜன் தனியேவும், ஆக்சிஜன் தனியேவும் பிரிக்க மிகவும் கடினம். ஆனால் அதையே அணு அணுவாகப் பிரிக்கப்படும்போது மிகவும் எளிதாக அவ்விரு வாயுவாக பிரிக்கப்படுகிறது. அவ்விரு வாயுவும் காற்றைவிட இலேசாக இருப்பதால் அது பூமியின் மேலடுக்குச் செல்கிறது. அங்கு அவ்விரு வாயுவும் அழுத்தம் மற்றும் வெப்ப மாறுபாட்டால் இந்த இருவாயுவும் இணையும்போது அதிக சப்தம், வெப்பமுடன் (இடி, மின்னல்) நீர் வாயுவாக உருவாக்குகின்றது. அதனால் மேகங்கள் சீராக இல்லாமல் தாறுமாறாக பல உருவங்களில் இருக்கின்றது. மேலும் வாயுக்கள் வெடித்துச் சிதறுவதுபோல் நுரைநுரையாகப் பஞ்சு போல் காணப்படுகின்றது. அந்த வெப்பத்தினால் காற்றில் இருக்கும் நைட்ரஜன் சிதைந்து கார்பன் ஆகவும் ஹைட்ரஜன் ஆகவும் பிரிகின்றது. அந்த கார்பன் இந்த நீர் வாயுவை உறிஞ்சித் தக்கவைத்துக் கொள்கிறது. பிறகு வெப்பச்சலனம் காரணமாக அல்லது பூமியின் மேலடுக்கு சுழற்சி காரணமாக மழையாகப் பொழிகிறது. இந்த நிகழ்வு குளிர்காலத்தில் அதிகமாக நிகழ்கிறது. ஏனெனில் அவ்வேளையில் காற்றில் அதிகமாக கரிம நீர் இருக்கும் அல்லவா. அதனால் மழை அதிகமாகப் பொழிகின்றது.  கோடைகாலத்தில் காற்றில் குறைவாக கரிம நீர் இருப்பதால் மழை அரிதாகப் பொழிகின்றது.

கார்பனின் இந்த 'அட்சார்ப்சன்' இல்லாத வெண்மேகங்கள் மழையைத் தருவதில்லை. அவ்வகையான மேகங்கள் பூமியில் ஏற்படும் மேலடுக்குச் சுழற்சியின் காரணத்தினாலும், தட்பவெப்பநிலை மாறுபடுவதினாலும் இந்த வெண்மேகங்கள் கார்பன் இருக்கும் திசையை நோக்கி நகர்கின்றது. அதன் பிறகே மழைதருகின்றது.

இப்போது மேகங்கள் எவ்வாறு உண்டாகின்றன என்பதைப் பார்ப்போம். இதுநாள் வரையில் கடல் நீர் ஆவியாகி மேலே சென்று மேகமாக மாறி மழை பொழின்றது என்று அறிவியலாளர்கள் கூறிவருகின்றனர். அப்படியெனில் பூமியில் கிட்டத்தட்ட முக்கால்பாகம் கடல்நீராய் இருக்கும்போது பின் ஏன் தொடர்ந்து மழை பெய்வதில்லை. அதேபோல் ஓசோன், காற்றில் இருக்கும் ஆக்ஸிஜன் அதாவது மூன்று ஆக்ஸிஜன் மூலக்கூறு கொண்டு இரண்டு ஓசோன் மூலக்கூறு உண்டாகின்றது என்கிறார்கள். அப்படியெனில் காற்றில்தான் 21% காற்று இருகின்தே. அதன் மூலம் ஓசோன் உருவாகலாமே! பூவிவெப்பமயமாதலைத் தடுத்திடலாமே! அவ்வாறு ஏன் நடக்கவில்லை. இதன் மூலம் எல்லா நீரும் (கடல்நீர்) மழையாகப் பொழிவதில்லை, எல்லாவகை ஆக்ஸிஜனும் ஓசோனாக மாறுவதில்லை என்று விளங்குகின்றதல்லவா!
       
 
         
மழையின் மூலம் வானத்தையும், நிலத்தையும் சுத்தம் செய்வதோடு காற்றையும் அதில் உள்ள வாயுக்களையும் சத்தம் செய்கின்றது. அதனால் தான் உயிரினங்கள் நன்றாக உயிர் வாழுகின்றன. மனிதன் தெரிந்தோ தெரியாமலோ காற்றை மாசுபடுத்தினாலும் காற்றில் உள்ள வாயுக்கள், X-மைக்ரோ ஆர்கானிசம் மற்றும் சூரிய சக்தி உதவியால் காற்றை சுத்தமாக மாற்றிவிடுகின்றது. அதாவது எவ்வாறு நமது இதயம் இரத்தத்தை சுத்திகரிக்கின்றதோ அதுபோல. நீங்கள் இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும். அதாவது காற்று சுத்தமாக இருந்தால் தான் மோப்பச் சக்தியால் உயிர்வாழும் உயிரினங்கள் காப்பாற்றப்படும். அதுபோல் காற்று அசுத்தமாக இருந்தால் உருவங்கள், ஒலிகள், ஒளிகள், நிறங்கள், அதிர்வுகள், வாசனைகள், இடங்கள் பல உயிர்களுக்குத் தெளிவாகத் தெரியாமல் போகும். அதனால் அவ்வுயிரினங்கள் வாழமுடியாமல் போகும். இயற்கை காற்றைச் சுத்தம் செய்வதுபோல் கடலையையும் அலைகள், சுனாமி சூறாவளி  மற்றும் புயல்காற்று மூலம் சுத்தம் செய்கின்றது. அதுபோல் நிலநடுக்கம், எரிமலை ஆகியவற்றால் நிலத்தைச் சுத்தம் செய்கின்றது.         
மேலும் விவரங்களுக்கு கீழுள்ள லிங்க் கிளிக் செய்யவும் 

எப்படி இருந்தாலும் CO2 தாவரங்களுக்குத் தேவை, அப்படித்தானே! இப்போது கேள்வி என்னவென்றால் மனிதர்கள், வாகனங்கள், தொழிற்சாலைகள் இல்லாத காலத்தில் தாவரங்களுக்கு CO2 எப்படி கிடைத்திருக்கும்? ஆனால் இயற்கையின் நியதிப்படி தாவரங்கள் பெரும்பாலும் தங்களுக்குத் தேவையானவை தாங்களே உற்பத்திச் செய்யும் திறமை உள்ளதாகவே இருக்கும்? அப்படியென்றால் CO2 எப்படி உற்பத்தி செய்திருக்கும்? அதற்கான பதிலோ அல்லது அப்படிப்பட்ட சிந்தனையோ இதுவரையில் இருப்பதற்கான அறிகுறிகள் அறிவியலில் இருப்பதாகத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் நான் சொல்லும் பதிலுக்கும் அதற்கும் சம்பந்தம் உள்ளதா? என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள்.  

அதேபோல் தாவரங்களுக்கு நைட்ரஜன், பாஸ்பேட், பொட்டாஷ் போன்ற கனிம உரங்கள் தேவை என்று அறிவியல் சொல்கிறது. அதற்கு 'நைட்ரஜன் சுழற்சி' எவ்வாறு துணைபுரிகிறது என்றும் சொல்கிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் தாவரத்தில் இதன் சதவீதம் மிகமிகக் குறைவே. ஆனால் எல்லா தாவரத்தில் கார்பன் அளவு மேலே குறிப்பிட்ட கனிம வேதிப்பொருட்கள் காட்டிலும் மிகமிக அதிகம். அப்படியென்றால் CO2 காற்றில் இல்லாத காலத்தில் தாவரங்கள் அன்று முதல் இன்று வரை எவ்வாறு காடுபோல் வளந்திருக்க முடிந்திருக்கும்? மேலும் காற்றில் மிகமிகக் குறைந்த CO2 அளவே அதாவது 0.039% உள்ளது என்று ஆய்வு சொல்கிறது. இவ்வளவு சிறிய அளவுள்ள CO2 வைத்துக்கொண்டு தாவரங்கள் எவ்வாறு அதிக அளவுள்ள கார்பனை உற்பத்தி செய்ய இயலுகின்றது. அதேவேளையில் உரமாய் போடுகின்ற நைட்ரஜன், பாஸ்பேட், பொட்டாஷ் என்ன ஆனது? அல்லது என்னவாகி மாறிப்போகின்றது? என்பதற்கான பதில் இதுவரை அறிவியல் ஆய்வாளர்களிடமிருந்து எவ்வித பதிலும் இல்லை! ஒருவேளை காற்றில் அதிகமாக CO2 இருந்தால் மனித இனம் மற்றும் விளங்கினங்கஆனால் இதுவரையில் அவ்வாறு எவ்வித அசம்பாவிதம் நடைபெற்றதாகச் சரித்திரம் ஏதுமில்லை. ஏனெனில் காற்றில் வாயுக்களில் கரியமில வாயுவின் வித்தியாசம் இதுவரையில் பதிவாகவில்லை. பின் இந்த CO2 அளவு எவ்வாறு சமநிலையில் இருக்கின்றது. அவ்வாறு சமநிலைப் படுத்துவது எது? அதன் அறிவியல் உண்மை என்ன? என்பதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.


14N7  ---------> 12C6  + 1H1  + 1H0 (H+)
 
16O8  ---------> 12C6  + 1H1  + 1H1  + 1H0  + 1H0 (H+)


இவ்வாறு சிதைவு ஏற்படுகிறது. அதோடு அமைப்பு, சூழ்நிலை, சீதோசஷணம், தேவைக்கேற்ப பல சேர்மங்களை ஆக்கவும், அழிக்கவும் செய்து வருவதால் காற்றில் உள்ள X- மைக்ரோ ஆர்கானிசம் மற்றும் உயிரினங்களுக்குத் தேவையான வாயுக்கள் குறைவில்லாமல் கிடைக்கின்றது. அதாவது அணுக்களை ஆக்கவும் அழிக்கவும் முடியாது. ஆனால் ஒன்றிலிருந்து மற்றோன்று உருவாகும் என்கிற விதிக்கு உட்பட்டு நடக்கிறது. 

இதற்கு ஆதாரமாக தானியங்களை ஒரு துணியில் போட்டு கட்டி, அதனை நீரில் நனைத்து ஓரிரு நாளைக்கு காற்றில் வைத்தால் அந்த தானியங்கள் முளைவிட்டிருக்கும். அதாவது கார்போஹைட்ரேட் உருவாகும். இப்போது வரும் கேள்வி மண்வளம் இல்லாமல் எவ்வாறு இது உண்டாயிற்று. மேலும் காற்றில் கார்பன் இல்லாதபோது இந்த கார்போஹைட்ரேட் எவ்வாறு உண்டாயிருக்கும். கட்டாயமாக அது காற்றில் உள்ள நைட்ரஜனால் மட்டுமே சாத்தியமாகும். அதேபோல் இந்த கார்போஹைட்ரேட்டானது நைட்ரஜனாகவும் மாறும் குணமுள்ளது என்றும் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த செயலை ஆய்வகத்தில் நிரூபிப்பது இயலாத ஒன்று. ஏனென்றால் அது உயிரினங்களால் மட்டுமே முடியக்கூடிய ஒன்று.        

மேலும் ஒளிச்சேர்கையானது அறிவியலாளர்கள் கூறுவதுபோல் இல்லாமல் கீழ்கண்டவாறு நடைபெறுகின்றது என்பது எனது கருத்து.


ஆதாவது ஒளிச்சேர்க்கையின்போது மீத்தேன் வாயு முதலில் உருவாகி பின் அதனுடன் சூரிய ஒளி மற்றும் X- மைக்ரோ ஆர்கானிசம் உதவியால் நீரும் கரியமிலவாயுவும் சேர்ந்து 'ஸ்டார்ச்' தயாரிப்பதோடு ஆக்ஸிஜனையும் வெளிவிடுகின்றது.

அதேபோல் இரவில் 'ஸ்டார்ச்' உருவாகாமல் இருக்கும் அதிக அளவுள்ள மீத்தேன் காற்றில் இருக்கும் ஆக்ஸிஜனுடன் சேர்ந்து கரியமில வாயுவும் நீரையும் கொடுக்கின்றது. அதனால் அதிகாலையில் இலைகளின் மேல் நீர்துளிகள் இருப்பதைக் காணலாம். இந்த கரியமில வாயுவும் நீரையும் தான் காலையில் சூரிய ஒளி உதவியால் ஒளிச்சேர்க்கை நடைபெறுகின்றது. ஆக தாவரங்கள் தங்களுக்கு வேண்டியவைகளை தாங்களே மறுசுழற்சி செய்து கொண்டு வருகின்றது.

இப்போது கார்பனுக்கு வருவோம். தாவரங்கள் மேலே சொல்லியது போல் காற்றில் இருக்கும் நைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் மூலம் அணுச்சிதைவு மூலம் தேவையான அளவுக்கு கார்பனும், ஹைட்ரஜனும் உருவாக்கி அவைகள் ஆக்ஸிஜனுடன் சேர்ந்து கரியமில வாயுவும், நீரையும் தருகின்றது. இந்த நீர்தான் ஆவியாகி மேகமாக மாறி மழையாக நமக்குத் தருகின்றது. இந்த நீருக்குப் பெயர் கரிம நீர் (Bio water or Bio moisture) ஆகும். இதுதான் ஓசோன் உருவாவதற்குத் துணைபுரிகின்றது.

மேலும் காட்டுதீ அடர்ந்த காடுகளில் உருவாவதற்கு இதுவரையில் யாரும் சரியாக பதில் சொன்னது கிடையாது என நினைக்கிறேன். அதாவது முன்பு குறிப்பிட்டது போல் மீத்தேன் வாயு ஒளிச்சேர்கையின் போது உருவாகின்றன என்று கூறியிருக்கிறேன். காடுகள் அடர்த்தியாக இருப்பதால் வெயில் காலங்களில் இரவில் உருவான அதிக அளவுள்ள மீத்தேன் வாயு வெப்பம் அதிகமாக இருப்பதால் அது எரிவதே. அதுதான் காட்டுத்தீ. மேலும் எப்போதெல்லாம் தாவரங்களுக்கு கரியமில வாயு மற்றும் கார்பன் தேவைபடுகின்றதோ மீத்தேன் எரிப்பது மூலம் பூர்த்தியாகின்றன. அதோடு தாவரங்கள் தங்களின் தேவைக்காகவே பூமிக்கடியில் கரியாகவும், மீத்தேன் வாயுக்களாகவும் சேமித்து வைக்கின்றன. அது நிலநடுக்கத்தின் உதவியால் சூரிய வெப்பத்தினால் மீத்தேன் வாயு வெளிக்கொண்டுவந்து தங்களின் இனத்தைக் காப்பாற்றிக் கொள்கின்றது. 

மேலும் நைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனால் சிதைந்து உருவாகும் கார்பனும் ஹைட்ரஜனும் பல நிறங்களில் பூக்கள், பல சுவைகளில் பழங்கள், காய்கறிகள் போன்றவை கொடுக்கின்றன. அதுவே ஒரு பழம், காய் ஒரே அளவில் விரிந்து வளர்கின்றது. மனிதனால் எவ்வளவு ஆற்றலுள்ள இயந்திரத்தாலும் சிறிய காய ஊதி பெரிய கனியாகக் கொடுக்க முடியாது. அதுபோல் புவியீர்ப்பு விசையையும் தாண்டி மரங்கள் உயரமாக வளர்வதற்கும் இந்த வாயுக்களே துணைசெய்கின்றது. இந்த வாயுக்கள் அதாவது காற்றில் உள்ள வாயுக்கள் உட்பட சகலகலா வல்லர்கள். இதனால் உலகில் உள்ள அத்தனை ஜீவராசிக்கு உண்டான உணவுவகைகளை அளித்திட முடியும். அளித்தும் வருகின்றது. உலகில் உயிருள்ள உயிரற்றவைகளைச் சுற்றி இவைகள் இருப்பதால் பூமி சுபிட்சமாக இருக்கின்றது.    

இவ்வளவு சிறப்புக்குக் காரணம் காற்றில் இருக்கும் X- மைக்ரோ ஆர்கானிசம் ஆகும். அதற்குத்தேவை கரிம நீர் மட்டுமே. ஆகவே பூமியில் இருக்கும் கரிமக் கழிவுகளை சூரிய ஒளிகொண்டு காய வைத்தபின்னரே அதனை மண்ணோடு மக்கச் செய்வது நன்று. கழிவு நீரை நேரடியாக சாக்கடைக்குச் செல்லாமல் மண்ணிற்குள் விடுவது பூமிக்கு நல்லது. உயிரினங்களுக்கும் நல்லது.   
***********************************


 

Monday, 9 September 2019

THREE WORDS POEM (TAMIL) முச்சொல் கவிதை - மதுரை கங்காதரன்


முச்சொல் கவிதை 
THREE WORDS POEM (TAMIL) 
மதுரை கங்காதரன் 
ஓடுகின்ற இந்த உலகத்தில் பலருக்குப் பக்கம் பக்கமாய் படிப்பதற்கு நேரம் கிடைப்பது அரிதே. ஆகையால் சுருங்கச் சொல்லி விளங்கச் செய்வதே இந்த முயற்சி ....

பிறக்கிறான்
இறக்கிறான்
மனிதன்
**********
பசிக்கின்றது
உண்கின்றது
வயிறு
********
பார்க்கின்றது
பேசுகின்றது
காதல்
********
வளர்கின்றது
தேய்கின்றது
நிலவு
********
சிந்திக்கின்றது
சிரிக்கின்றது
மனம்
********
ஏமாளிகள் 
ஏமாற்றுகள் 
பணக்காரர்கள் 
*********
வியாபாரம் 
அமோகம்
கல்வி 
**********
முட்டாள்கள் 
அறிவாளிகள் 
உலகம் 
*********
மகிழ்ச்சி 
சோகம் 
வாழ்க்கை 
**********
வாழ்வது 
வீழ்வது 
அறிவு 
*********
மேகம் 
நிலவு 
வானம்
***********
தமிழ் 
அடையாளம் 
தமிழர்கள் 
**********
அக்கறை 
முயற்சி 
முன்னேற்றம் 
**********
நல்லது 
நன்மை 
நல்லோர்கள் 
***********
நீங்களும் முயற்சி செய்யலாமே!
************************