கணித்தமிழும் பன்மொழி ஆசான் 'உமாஸ்க்'
ஒரு
அகரவரிசை கணினி மென்விசைப்பலகையும்
கு.கி.கங்காதரன்
ஆய்வுச்சுருக்கம்
ஒரு மொழி காக்கப்பட்டால், அந்த இனத்தின் அடையாளம் காக்கப்படுவதோடு, அதன் வரலாறு, இலக்கியம், நாகரிகம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றின் சிறப்புகளும் காலம் காலமாகப் பேசப்படும். உலகில் பல்வேறு மொழிகள் தோன்றினாலும், கணினித்தொழில்- நுட்பத்தில் ஏற்படும் பரிணாமத்தின் காரணமாகப் பல மொழிகள் செயலிழந்து சில மொழிகளே நடைமுறையில் செயல்படுகின்றன. இன்றளவில், ஒரு மொழியின் வளர்ச்சியைக் கணினித்தொழில்நுட்பமே நிர்ணயிக்கின்றன. காற்று புகும் இடங்களில் எல்லாம் கணினியும் புகுந்து, அதன் ஆளுமையை நாளுக்கு நாள் விஸ்தரித்துக் கொண்டே போகின்றன. ஏனென்றால், கணினியால் எல்லாவிதமானத் தகவல்களையும், தரவுகளையும், உலகின் எந்த மூலைக்கும் விரைந்து வழங்கும் திறனேயாகும். செம்மொழி அந்தஸ்து பெற்ற தமிழ்மொழி, கணினியில் இடம் பெற்றிருந்தாலும் அதனைத் தமிழ்மொழி அறிந்த எல்லோராலும் கற்க இயலாதபடி உள்ளது. காரணம், கணித்தமிழில் பதினைந்திற்கும் மேற்பட்ட மென்விசைப்- பலகை உள்ளது. ஆனால், எதுவும் எளிதில் கற்கும் முறையில் இல்லை. மேலும், ‘எந்தக் கணித்தமிழ் விசைப்பலகையைத் தேர்ந்தெடுப்பது’ என்ற குழப்பம் பலருக்கும் உண்டு. அதனாலே பலர் கணித்தமிழைக் கற்காமல் விட்டுவிடுகின்றனர்.
அதற்கானத் தீர்வு, கணினியில் உள்ள எல்லா மொழி விசைப்பலகையும் அந்தந்த மொழியின் அகரவரிசைப்படி இருந்தால், எல்லா வயதினரும் அவரவர் மொழியை கணினியால் இலகுவாகக் கற்கலாம், கற்பிக்கலாம், தட்டச்சும் பழகலாம். அதாவது, கணித்தமிழின் மென்விசைப்- பலகையானது, தமிழ்மொழி கற்கும் முறைப்படி,
அதில் உள்ள தமிழ் எழுத்துகள் அகரவரிசைப்படியும், அதன் செயல்முறையும் இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும்போது, தமிழ்மொழி அறிந்தவர்களுக்குக் கணித்தமிழ் பற்றிய பயம் நீங்குவதோடு, கணித்தமிழ் பழகும் ஆசையும் தன்னாலே வரும். இக்கருத்து, கணித்தமிழ் உட்பட எல்லா மொழிகளுக்கும் பொருந்தும். அதன் அடிப்படையில் அமைந்தது தான் UMASK (உமாஸ்க்) - Uniform
Multilingual Alphabetic Soft Keyboard - சீரான பன்மொழி அகரவரிசை மென் விசைப்பலகையாகும். இதிலுள்ள கணித்தமிழ், கற்கும் முறைப்படி 31 எழுத்துகள் மூலம் 247 எழுத்துகள் வருமாறு அமைந்துள்ளது. அதாவது அ, ஆ, இ, ஈ ...முதல் ‘ஃ’
முக்கிய வார்த்தைகள்: அகரவரிசை, உமாஸ்க் , பன்மொழி, மென்விசைப்பலகை
1 . 0 முன்னுரை
கணித்தமிழ் வளர்ச்சியடைய வேண்டுமானால், அடிப்படையில் கணினியில் உள்ள தமிழ் விசைப்பலகையானது அனைவருக்கும் எளிதாகவும், பள்ளியில் கற்கும் முறைப்படியும் இருந்தால்தான், தமிழ்க்கற்ற அனைவரிடத்திலும் ஊடுருவி, கணித்தமிழைச் சர்வசாதாரணமாகக் கொண்டு செல்ல முடியும். அதன் விளைவு, ஒருவரது காகிதத்தில் படைக்கும், படைக்கப்பட்ட படைப்புகளை, வலைத்தளத்தின் மூலமாக உலகம் முழுவதும் கொண்டு செல்லலாம். அதனால், தமிழின் பெருமை கூடும். மேலும், படைப்புகள் கணினியில் இருப்பதால் என்றுமே அழியாது. மற்ற மொழி இனத்தவர்களும் செம்மொழித் தமிழின் சிறப்பை அறிய முடியும். ' கணினி, எல்லோரையும் தன்பால் ஈர்த்துக் கொண்டிருக்கின்றது. ஏனென்றால்,
காகிதத்தில் எழுதும் எழுத்துகள்
கரையானால் அழிந்து விடும்!
கணினியில் அச்சாகும் எழுத்துகள்
காலத்தால் அழியாமல் நிற்கும்!
இது எனது புதுக்கவிதை. இது கணினியுலகம். கையால் எழுதிய நிலை மாறி, கணினியால் எழுதும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். ஆகவே, தமிழ் உட்பட அனைத்து மொழியாளர்களும் கணினியில் கட்டாயமாகக் கற்கும் நிலை உருவாகியுள்ளது. இனிமேல், நமது வாழ்வாதாரமும், வளர்ச்சியும் கணினித்தமிழைப் பொறுத்தே இருக்கும்.
தமிழ்நூல்களைக் கணினியில் பதிவேற்றினால்
தமிழ்ப்பெருமையைத் தரணியெங்கும் பரப்பலாம்!
கணினியையும் கைப்பேசியையும் பயன்படுத்தினால்
கணித்தமிழை இணையத்தில் படிக்கலாம்!
என்பது உண்மைதானே. 'உமாஸ்க்' ஒரு பன்மொழி ஆசான்! அதன் மூலம் கணித்தமிழையும், கணினியிலுள்ள ஏனைய மொழிகளையும் எளிதாகக் கற்கலாம், கற்பிக்கலாம், தட்டச்சும் செய்யலாம். அதனைப்பற்றி விரிவாகப் பார்ப்போம்.
2 . 0 கணித்தமிழின் இன்றைய நிலை
இணையத்தில் தமிழ்மொழியைப் பகிர்ந்திடவேண்டுமென்றால்,
கணினி விசைப்பலகையின் எழுத்துகள் விரல்களுக்கு வசப்படவேண்டும்.
விசைப்பலகை எழுத்துகள் விரல் வசப்பட்டால்
விரைவாய் கணித்தமிழைக் கற்க முடியும்.
தமிழ்மொழிக்கு 15க்கும் மேற்பட்ட கணினி விசைப்பலகைகள் இருந்தும், அதில் ஒன்றைக்கூட நம்மால் எளிதாய்க் கற்க இயலவில்லை. ஏனெனில் , எழுத்துகள் அகரவரிசையில் இல்லாமல் இருப்பதே. அதனால், இப்போதுள்ள கணித்தமிழைப் பழகவேண்டுமென்றால் அளவற்ற நினைவாற்றலும், இடைவிடாது பயிற்சியும், கடினமான முயற்சியும், அசராத தன்னம்பிக்கையும் வேண்டும். அந்த நிலையைப் போக்கவே 'உமாஸ்க்' என்னும் எளிய அமைப்புள்ளக் கணித்தமிழ் எழுத்துப்பலகை வந்துள்ளது. இதனைப் பயன்படுத்தினால், உலகத்தில் உள்ள அனைத்துத் தமிழர்களும், தமிழைக் கற்க நினைக்கும் ஏனைய மொழி இனத்தாரும்,
கற்பேன் கற்பேன் கணித்தமிழைக் கற்பேன்
எழுதுவேன்எழுதுவேன்கணித்தமிழில் எழுதுவேன்
வாசிப்பேன் வாசிப்பேன் கணித்தமிழில் வாசிப்பேன்
படைப்பேன்படைப்பேன் கணித்தமிழில் படைப்பேன்
என்று ஆணித்தரமாய் சொல்லுவார்கள்.
3 . 0 இன்றைய கணினி விசைப்பலகை மற்றும் கைப்பேசித் தொடுதிரை எழுத்துப்பலகையில் உள்ள சிக்கல்கள்
கணினியில் தமிழ்த்தட்டச்சு பழக எண்ணுபவர்களுக்கு, அதன் விசைப்பலகையைப் பார்த்தவுடன் ஒருவித குழப்பம் உண்டாகும். ஏனென்றால், அதில் அச்சிடப்பட்ட எழுத்துகள் ஆங்கிலத்தில் இருப்பது! இதில் எப்படி தமிழ்த்தட்டச்சு செய்ய முடியும்? என்கின்ற சந்தேகம் வரும். அதுமட்டுமில்லாமல், கணித்தமிழில் இருக்கும் பலவித விசைப்பலகைகளில் இதில் எந்தவகையான 'தமிழ் உள்ளீடு கோப்பு' அமைப்புள்ளது என்று திறந்து பார்த்தால்தான் தெரியும். எடுத்துக்காட்டாக, தமிழ் 99, பாமினி, மின்னல், மைலை, கம்பன், பிறநஹ், அழகி, இன்னும் பல. இவற்றில் சில விசைப்பலகைகளின் அமைப்புகளைஅடுத்துப் பார்க்கலாம்.
பெரும்பாலும் விசைப்பலகைகளில், 'தமிழ் எழுத்துகள்' தெரியும்படி இருக்காது. ஆங்கில எழுத்துகள் மட்டும் தெரியும். மேலும், உள்ளீடு செய்யப்பட்டிருக்கும் 'தமிழ்' போன்ற மற்ற மொழி எழுத்துகளை ஆங்கில எழுத்துகளானது 'MASK' போல் தெரியாமல் மறைத்துள்ளது. அதோடு, விசைப்பலகையில் வெளியில் தெரியும் ஆங்கில எழுத்துகள் எப்படி சீரில்லாமல் சிதறிக்கிடக்கின்றதோ, அதேபோல், உள்ளே இருக்கும் 'தமிழ்' போன்ற பிறமொழி எழுத்துகளும் சீரில்லாமல் இருக்கும்! தமிழ்த்தட்டச்சு பழக்கவேண்டுமென்றால் முதலில் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் எந்தெந்த ஆங்கில எழுத்துகளுக்கு இணையாக எந்தெந்த தமிழ் எழுத்துகள் இருக்கின்றது என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ள இயலும். இதனைத்தவிர, ஷிப்ட் மற்றும் கண்ட்ரோல் 'கீ'க்கள் உதவி கொண்டு வரும் எழுத்துகளையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
சில விசைப்பலகையின் அமைப்பு, ஆங்கில எழுத்துகளைக் கொண்டு தமிழ்ச்சொற்களை வரவழைக்கப்படுகின்றன. அவ்வாறு செய்யும்போது, தமிழ் எழுத்துகளை மறக்கும் வாய்ப்பு உண்டு. மேலும், இதனைக் கையாள தமிழ்ச்சொற்கள் நன்கு தெரிந்திருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, 'நல்ல' - 'nalla' என்று ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும்போது நல்ல, நல்லா, நாள்ல, னல்ல, நாள்ள, என்று ஐந்து சொற்களைக் காட்டும். தமிழறிவு இருந்தால்தான் சரியான சொல் தேர்ந்தெடுக்க இயலும். மேலும், நேரவிரயம் அதிகமாக இருக்கும். அதாவது, 'த' என்ற ஒற்றை எழுத்துக்கு 'tha' என்று மும்முறை 'கீ'யை அழுத்த வேண்டும். பொதுவாக, இன்றைய விசைப்பலகைகளில் சிக்கல்களுக்குச் சரியான காரணங்கள் இருந்தாலும் கடினம், கடினம்தானே.
3.1 கைப்பேசி 'தொடுதிரை'
எழுத்துப்பலகையில்
இன்றிருக்கும் தொடுதிரை கைப்பேசி அமைப்பு, கணினி விசைப்பலகையில் அடங்காத,
மெய்யெழுத்துகள் தனியாக
இல்லாத, வாய்ப்பாட்டை மறக்கச் செய்யும் அமைப்பு
இதனை இயக்க இணையதள இணைப்புத் தேவை ( படம் 1).
படம் 1 கைப்பேசி - தொடுதிரை அமைப்பு |
எ.கா: ‘கே'
என்ற எழுத்து வேண்டுமென்றால்
'க' என்ற எழுத்து அழுத்தியவுடன் '18'
உயிர்மெய்யெழுத்துகள் வரும்.
அதில் 'கே' எழுத்தைத்
தேடி அழுத்த வேண்டும். அதனால்,
தமிழ் எழுத்துக்கள் 247 கண்டிப்பாகத் தெரிந்திருக்க வேண்டும்( படம் 2).
படம் 2 கைப்பேசி - '18' உயிர்மெய்யெழுத்துகள்
|
|
படம் 3 'உமாஸ்க்' இல் க+ஏ=கே வாய்ப்பாடு முறை |
3 . 2 விசைப்பலகையில் எழுத்துகள்
முதலில், கீழ்க்கண்ட விசைப்பலகைகளில் எழுத்துகளை அகரவரிசைப்படி காணுங்கள். அதன் சிரமம் விளங்கும் (படம் 4, 5, 6).
படம் 4 ‘பாமினி’ தமிழ் விசைப்பலகை |
படம் 5 ‘மாருதம்’ தமிழ்
விசைப்பலகை
|
படம் 6 ‘தமிழ் 99’ - சாதாரணப் பயன்பாடுமுறை
4 . 0 'உமாஸ்க்'
கணித்தமிழின் ஆராய்ச்சி முறை பற்றிய விளக்கம்
இப்போதிருக்கும் தொடுதிரைக் கணினியில் ஒரு எழுத்து தொட்டாலே, அதற்குச் சம்பந்தப்பட்ட பல வார்த்தைகளைக் காட்டுகிறது. அதாவது, 'வ' என்று தொட்டாலே, முறையே 'வணக்கம்' 'வாழ்க' 'வளம்' என்று அவரவர் அன்றாடம் பயன்படுத்தும் சொற்கள் வருகின்றது. ஆகையால், விரல்களுக்கு அதிக வேலை இல்லை. அதாவது ஒரு சொல்லில் அனைத்து எழுத்துகளையும் தட்டச்சு செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் போகின்றது.
சிலர், கணினியில் ஒரு குறிப்பிட்ட விசைப்பலகையின் அமைப்பில் வேகமாகத் தட்டச்சு செய்கிறார்கள் என்பதற்காக அதையே அனைவரும் பின்பற்ற முடியுமா? அப்படியென்றால், கார் பந்தயத்தில் ஓடுகின்ற கார்களை நாம் ஏன் அன்றாட வாழ்க்கையில் அனைவரும் உபயோகிப்பதில்லை? விரைவாக ஓடும் 'கியர்' வண்டி காலம் போய், மிதவேகத்தில் ஓடும் 'கியர்லஸ்' வண்டி வந்துவிட்டது! ஏன்? காரணம், ஆண்களும், பெண்களும், இளைஞர்களும் கையாளுவதற்கு எளிமையாக இருப்பது ஒன்றே!.அதேபோல்தான் 'உமாஸ்க்' கணித்தமிழ் விசைப்பலகை!
4.1 'உமாஸ்க்' கணித்தமிழின் இருவழி விசைப்பலகையின் அமைப்பு
'உமாஸ்க்' கணித்தமிழின் தமிழ்த்தட்டச்சை, கணினியில் உள்ள விசைப்பலகையின் மூலம் சாதாரணமாக 'விரல்' கொண்டு செய்யலாம்
. கணினித்திரையில் தெரிகின்ற 'மெய்நிகர் கணித்தமிழ்
விசைப்பலகை அமைப்பு' மூலம் 'மௌஸ்' கொண்டும் இயக்கலாம் (படம்7). கணினி விசைப்பலகையில் ஆங்கில எழுத்துகள் இருந்தாலும், தட்டச்சு செய்பவர் வசதிக்காக கணினித்திரையில், கணினியில் உள்ளீடு
செய்திருக்கும் 'தமிழ்' போன்ற மற்ற மொழி எழுத்துகள் 'மெய்நிகர் விசைப்பலகை அமைப்பு' மூலம் தெரியுமாறு
உருவாக்கப்பட்டுள்ளது.
மெய்நிகர் விசைப்பலகை அமைப்பை 'மௌஸ்' கொண்டு இயக்க முடியும். மெய்நிகர் விசைப்பலகை அமைப்பில் தெரியும் ஒவ்வொரு 'கீ'யில், விசைப்பலகையிலுள்ள ஆங்கில எழுத்தோடு முறையே, சாதாரணப் பயன்முறையோடு, ஷிப்ட் மற்றும் கண்ட்ரோல் 'கீ' கொண்டு வரும் எழுத்துகளும் தெரியுமாறு அமைக்கப்பட்டுள்ளது (படம் 8,9,10).
|
|
படம்7 ‘உமாஸ்க்’ மெய்நிகர் & விசைப்பலகை
அமைப்பு |
படம் 8 ‘உமாஸ்க்’ 'மெய்நிகர் கணித்தமிழ் விசைப்பலகை - சாதாரணப் பயன்முறை (உ.ம் 2ம் வரிசை உயிரெழுத்துகள்+ ‘ஃ’ |
இந்த 'UMASK' அமைப்பு என்பது, முழுக்க முழுக்கத் தட்டச்சு இயந்திரத்தை மனதில் கொள்ளாமல், கணினியின்
செயல்திறனையும், இயல்பாக ஒரு மொழியினைக் கற்கும்
முறையினையும் அடிப்படையாகக் கொண்டும் உருவாக்கப்பட்ட
ஒரு பன்மொழித் தட்டச்சு மற்றும் தொடுதிரை அகரவரிசை எழுத்துப்பலகை. இது, ஏற்கனவே குறைந்த விகிதத்தில் கணினியில் தட்டச்சு செய்துகொண்டிருக்கும்
உள்ளவர்களுக்காக அல்ல. ஏனென்றால், அவர்களால் இதனை
எளிதாக ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், கணித்தமிழில் தட்டச்சு
செய்யத் தெரியாத பலருக்கும், இது ஒரு வரப்பிரசாதமாக
இருக்கும்.
இந்த 'உமாஸ்க்'
விசைப்பலகை யாருக்காக? எதற்காக? என்றால்,
1.
ஒரு மொழியை
நன்கு கற்றும்
கணினிக்கு வராதவர்களுக்கும்,
2.
தட்டச்சு கற்க, ஞாபக சக்தி தேவையிருக்கே?
என்பவர்களுக்கும்,
3.கற்கும் முறைப்படி கணினியில் அகரவரிசைப்படி தட்டச்சு விசைப்பலகையினை
எதிர்பார்ப்பவர்களுக்கும்,
4.
மொழி
ஆர்வலர்களுக்கும்,
5.
பிறர் தயவில்லாமல்
கணினியால் செய்யும் வேலைகளைத்
தாங்களே கணினியில் தட்டச்சு செய்பவர்களுக்கும்,
6. ஏதோ ஒரு காரணத்திற்காக கையால் எழுத முடியாமல் இருப்பவர்களுக்கும்,
7.
காகிதத்தில் எழுதப்பிடிக்காமல் இருப்பவர்களுக்கும்,
8.
மொழியைக் கற்க
ஆசைப்படும் எல்லா வயதினருக்கும்
9. தொடக்கப்பள்ளிகளில்
எளிதாகக் கணினியில்
கல்வியைப் புகுத்துவதற்கும்,
10. 'அனைவருக்கும்
கல்வி' என்கின்ற அரசின் இலட்சியத்தை அடைவதற்கும்,
11. தமிழ் உள்பட, உலகின் பிறமொழிகளைக் கற்பிப்பதற்கும், கற்பதற்கும், தட்டச்சு செய்வதற்கும், பயன்படும் அமைப்பாகும்.
UMASK அமைப்பின் மற்றொரு சிறப்பு யாதெனில்,
ஒரே உச்சரிப்பு கொண்ட பல மொழிகளை (ஹிந்தி, மலையாளம்,
தெலுகு, கன்னடம், குஜராத்தி
போல. உ.ம் படம்
11,12,13,14) மேற்சொன்ன முச்செயல்களை மிக எளிதாகச்
செய்ய முடியும். ஏனென்றால், ஒரு மொழியில் உள்ள அனைத்து எழுத்துகளும் அகரவரிசைப்படி இருப்பதால் 'அ' எழுத்து தொடங்கி முடிவு எழுத்துவரை பெரும்பாலும்
ஒரே 'கீ'யில் தான் இருக்கும்.
|
|
படம் 14 ‘உமாஸ்க்’ 'மெய்நிகர் விசைப்பலகை - கன்னடம் |
|
4.2 'உமாஸ்க்' கணித்தமிழின் விசைப்பலகை அமைப்பும், கணினித்திரையில் மெய்நிகர் மென் எழுத்துப்பலகை அமைப்பும்
4 . 2 . 1 செயல்முறை விளக்கம்
சாதாரணப் பயன்பாடுமுறை (படம் 15)
முதல் வரிசை : ‘1’ முதல் ‘0’ வரையிலான எண்கள்
இரண்டாம் வரிசை : ‘அ’ முதல் ‘ஃ’ வரையிலான உயிரெழுத்துகள்+ ‘ஃ’
மூன்று, நான்காம் வரிசை : ‘க’ முதல் ‘ன’ வரையிலான உயிர்மெய்யெழுத்தின் முதல்தொடர்.
குறிப்பு: சாதாரணப் பயன்பாடுமுறையில் உள்ள ’ க’ முதல் ‘ன’ வரையிலான உயிர்மெய்யெழுத்தின் முதல் தொடர், ஷிப்ட் 'கீ' மூலம் தட்டச்சு செய்யும்போது, அதுவே அந்தந்த மெய்யெழுத்தாக (அதாவது, க் முதல் ன் வரை) மாறி வரும்படி அமைந்துள்ளது.
ஆகவே, சாதாரணப் பயன்பாடுமுறையில் 'க' முதல் 'னெள' வரை - 216 எழுத்துகளைத் தட்டச்சு செய்யலாம். உ.ம் க+ஆ=கா, ச+ஏ=சே, த+ஒ=தொ, ன+ஓ=நோ.
வாய்ப்பாட்டின்படி உயிர்மெய்யெழுத்துகளாகத் தானாக வரும்.
'ஷிப்ட்' 'கீ' கொண்டு, (படம் 16) அந்த உயிர்மெய்யெழுத்தின் முதல்தொடர் எழுத்துகளைத் தட்டச்சு செய்தால் 'க்' முதல் 'ன்' வரை 18 மெய்யெழுத்துகள் கிடைக்கும்.
ஆக, சாதாரணப் பயன்பாடுமுறையில் 216ம், 'ஷிப்ட்' முறையில் 18ம், மொத்தம் 247 எழுத்துகள் கிடைக்கும்.
'உமாஸ்க்' கணித்தமிழ் விசைப்பலகை மற்றும் மெய்நிகர் எழுத்துப்பலகையினைப் பார்த்தால், நன்றாகப் புரியவரும். கூடுதலாக, ஜ,ஷ,ஸ,ஹ,க்ஷ எழுத்துகளுக்கும் இந்த விதி பொருந்தும் (.படம் 17,18,19,20) .
குறிப்பு: ‘தமிழ்’ போன்ற எல்லா மொழிகளும் இந்த முறைப்படிதான் 'உமாஸ்க்' அமைந்துள்ளது.
படம் 15 'உமாஸ்க்' விசைப்பலகை
- சாதாரணப்
பயன்பாடுமுறை (விரல் மூலம்)
|
படம் 20 'உமாஸ்க்' இல் உயிர்மெய்யெழுத்து வாய்ப்பாடு முறை |
|
4 . 3 'உமாஸ்க்' கணித்தமிழின் சிறப்பு அம்சங்கள்
1. UMASK அமைப்பில் தமிழ் உட்படப்
பன்மொழி வசதி இருப்பதால், நீங்கள் விரும்பும் மொழியைக் கற்கலாம்.
2. தமிழும் ,
ஆங்கிலமும், இந்தியும், தேர்வு செய்தால் அந்தந்த
மென்விசைப்பலகையில் எழுத்துக்களுடன்
கணினித்திரையில் தெரியும்.
3. நீங்கள் தேர்வு
செய்யும் எந்த மொழியாக இருந்தாலும் சரி, அம்மொழியின்
எழுத்துகள் கணினி மென்விசைப்பலகையில், அகரவரிசைப்படி (alphabetical
order) எவ்வித குழப்பமுமில்லாமல், எல்லா வயதினருக்கும்
எளிதாகத் தட்டச்சு செய்யலாம்.
4. அகர வரிசைப்படி அமைந்திருப்பதால், எந்த மொழியில் தட்டச்சு செய்வதற்கும் கடினமான பயிற்சியோ, அதிக கவனமோ, கூடுதலாக நினைவாற்றலோ தேவையில்லை.
5. இப்போது பயன்படுத்தும் கணினி விசைப்பலகையில் இருக்கும் மொழி எழுத்துகளின் வரிசைகள், பெரும்பாலும் தட்டச்சுப் பொறியிலிருந்து (Typewriter) இறக்குமதி செய்யப்பட்டதாகவே இருக்கும். ஆனால்,
'உமாஸ்க்' அமைப்பு கடினமாக இல்லாமல்
முற்றிலும் வேறுபட்டு உள்ளது.
6. கணினியும், தட்டச்சுப்பொறியும் ஒன்றல்ல! தட்டச்சுப்பொறியைக் காட்டிலும் கணினியானது, பன்மடங்கு வேகம், புதுமை, தரம் கொண்டுள்ளது. அவைகள் UMASK அமைப்புக்குக் கூடுதல்
பலத்தைக் கொடுத்துள்ளது .
7. சில உலக மொழிகள்
மற்றும் இந்திய மொழிகள் ‘சிப்ட்’
என்கிற ‘கீ’ யை (Shift Key) பயன்படுத்தாமல் சாதாரணமான வழியில் (Normal Mode) , கிட்டத்தட்ட
அனைத்து எழுத்துகளையும் தட்டச்சு செய்யும் வசதி UMASK ல் மட்டும்தான் உண்டு.
8. UMASK ஒரு பன்மொழியைக் கற்றுக் கொடுக்கும் 'ஆசான்' என்பதற்கு இதுவே சான்று.
9. UMASKஐ இணையதள வசதியுமில்லாமல் OFF LINEஇல் கூட தட்டச்சு செய்யலாம்.
10. விரல் பயிற்சி மற்றும் மனப்பாடம் செய்வது என்பது முற்றிலும் தேவையிருக்காது.
11. எந்த ஒரு மொழியின்
எழுத்துகள், கணினி விசைப்பலகையில் அகரவரிசையில் இருக்க
வேண்டும் என்று
‘நியமம்’
செய்யும் முயற்சி இது.
12. எவ்வாறு 'கால்குலேட்டர்' கணக்குப் போடுவதற்கு உதவி செய்கின்றதோ,
இந்த UMASK, கல்வியை கற்கப்
பயன்படும்.
13. முக்கியமாக 'உமாஸ்க்' கணித்தமிழ் விசைப்பலகை
மூலம் தவறான, தமிழில் இல்லாத எழுத்துகளைத் தட்டச்சு செய்ய முடியவே முடியாது. அதாவது, சில தமிழ்த்தட்டச்சு விசைப்பலகையில் இம்மாதிரியான தவறான எழுத்துகள் ஏே, இெ, ஈி, உா, எ், ஐ் , ஒ், ஆ் வர
வாய்ப்புள்ளது. இவ்வெழுத்துகளை
எப்படிப் படிப்பீர்கள்?
14. இதில் உள்ள எழுத்துகள் யூனிக்கோடுவில் இருப்பதால் இதனை நேரடியாக எம்.எஸ்.ஆபிஸ் எதிலும் பதிவு செய்யலாம். மற்ற விசைப்பலகையில் தட்டச்சு செய்தால்
( மாருதம், பாமினி, அழகி போன்ற பல) எழுத்துரு மாற்றி தேவைப்படும்.
5 . 0 முடிவுரை
கணினி செய்யும் வேலைகளையும், வேகத்தையும், அதன் வளர்ச்சியையும் நாம் சாதாரணமாக எடைபோட்டு விடக் கூடாது. என்னதான் மனிதனே கணினியை ஆட்டிப் படைத்தாலும், கண் இமைக்கும் நேரத்தில் எதையும் செய்யும் ஆற்றலும், சக்தியும் அதனிடம் இருப்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். கணினியால் ஆக்கவும் முடியும்; அழிக்கவும் முடியும். கணினியைக் கொண்டு அவரவர் தாய்மொழிகளின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்காக எவ்வாறு எளிதாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்? என்பதை UMASK மென்பலகையின் மூலம் எடுத்து இயம்பும் முயற்சிதான் இது.
‘தாய்மொழி ஒன்றே,
அதை
இன்றே கற்றல் நன்றே!’
'தாய்மொழி காக்க,
கணினியில்
கற்றல் வேண்டும்'
என இக்காலம் உணர்த்துகிறது. கணினியில், உலகளவில் பெரிய ஜாம்பவான்கள் பல புரட்சிகள்
செய்துகொண்டிருந்தாலும், என்னால்
முடிந்தளவு இந்த மனித சமுதாயத்திற்கு 'உமாஸ்க்' அமைப்பை அர்ப்பணிக்கிறேன்.
மக்கள், காரணமில்லாமல் ஒன்றை ஒதுக்கமாட்டார்கள். அதே சமயத்தில், எளிதாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்ளவும் தயங்கமாட்டார்கள் என்பது உலக அனுபவத்தில் பெற்ற பாடமாகும். கணினியின் பயன்பாடு கல்வி, நிறுவனங்கள், பதிப்பாளர்கள், அச்சகங்கள், பலவகை போக்குவரத்து துறைகள், ஊடகங்கள், வங்கிகள், சட்டம், பதிவுத்துறை, நீதிமன்றம், உற்பத்தித் தொழிற்சாலைகள், மத்திய மாநில அரசின் பல துறைகள், அலுவலகங்கள், வலைத்தளத்தில் இயங்கும் பல்வேறு சேவைகள், ஊடகங்கள் போன்றவை இதில் அடங்கும்.
மக்களிடத்தில் கணினியைப் பற்றி நேர்மறையான கண்ணோட்டம் ஏற்படவேண்டுமென்றால், உலகம் முழுவதிலும் கணினியை வெறுப்பவர்களைக் காந்தம் போல் கவர்தற்கு ஏதாவது புதிதாக ஒன்றைச் செய்ய வேண்டுமல்லவா! அதாவது. கணினியைச் எல்லா வயதினருக்கும் விரும்பும் விதமாக மாற்றினால் மக்கள் தானாகவே கணினியில் முன் அமருவதற்கு விரும்புவர். அதனை மனதில் கொண்டுதான் பன்மொழி ஆசான் 'உமாஸ்க்' அகரவரிசை கணினி மென்விசைப்பலகை அமைக்கப்பட்டுள்ளது. இதனைத் தமிழர்கள் நீங்கலாக, உலகத்தில் உள்ள அனைவரும் ஏற்றுக்கொண்டு, கல்வித்துறையில் அடுத்த அடுத்த கட்டத்திற்குக் கொண்டுச் செல்வார்கள் என்று நம்புகிறேன். 'உமாஸ்க்' அமைப்பு மனித வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறக்கூடிய காலம் எப்போது வரும்? என்று ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறேன்.
குறிப்புகள்
தமிழ்நாடு அரசு விசைப்பலகை (Tamil99) : https://www.tamilvu.org/tkbd/doc_file/Help_Linux.pdf
https://en.wikipedia.org/wiki/Azhagi_(software)
https://kalvisolaionline.files.wordpress.com/2013/05/tamil-key-board-layout.pdf
https://www.baminitamilfont.com/
No comments:
Post a Comment