கவிஞர் இரா .இராம பாண்டியன் எழுதிய "கவிதைக் கனிகள் " நூலும் , துணைத்தலைவர் முனைவர் கவிஞர் இரா.வரதராசன் எழுதிய 'கோமாளியாக்கப்பட்ட கோமான்' என்ற ஆங்கில மொழிபெயர்ப்பு நூலும் , கவிதாயினி செ.அனுராதா எழுதிய "ஆன்மிக அருளமுது" நூலும் " வெளியிடப்பட்டன.
புகைப்படங்களை எடுத்தவர்கள்: புகைப்படக் கலைஞர்" மதுரை உலா "ரெ.கார்த்திகேயன் மற்றும் சுந்தர கிருஷ்ணன் எடுத்த படங்கள்கை வண்ணம்
மாமதுரை
கவிஞர் பேரவை கவியரங்கம் (25.2.2024)
<<என்ன வளம் இல்லை எங்கள்
தமிழ்மொழியில்>>
என்னவளம் இல்லை எங்கள் தமிழ்மொழியில்
இதில் எல்லாமே நிறைந்நிருக்கும் உயர்மொழியில்
தன்னிகரே இல்லாத தத்துவங்கள் தமிழிலுண்டு
தானதர்மம் பற்றிபாடும்முத்துக்களிள் குவியலுண்டு
பின்னிவரும் கருத்துகளின் பெருமைமிகு பெட்டகமே
பேருலகில் நடனமிடும் அருமைமிகு நர்த்தனமே
உன்னத மொழிகளிலும் உயர்ந்தமொழி தமிழ்மொழியே
உலகெங்கும் பரந்திருக்கும் உயர்வான செம்மொழியே.
இயலிசை நாடகமும் ஏராளம் நம்மொழியில்
ஈடில்லா புகழ்காக்கும் பரந்தமொழி இம்மொழியே
நயமான கருத்துக்கள் நடமிடும் திருக்குறளில்
நடப்புகளை விவரிக்கும் திடமான கருப்பொருள்கள்
அயலாரும் போற்றுகிற அன்னைமொழி நந்தமிழே
அன்றாட சேவையால் உலகாளும் செந்தமிழே
தயக்கம் இல்லாது தவழ்கின்ற உயர்மொழியே
தடாகம் எல்லாமே பரவுகின்ற நிறைமொழியே.
நாடிந ரம்புகளில் நடனமிடும் நல்லுயிராய்
நமக்குள் நிறம்பியே உரமளிக்கும் இன்னுயிராய்
தேடினும் கிடைக்காத திராளான காவியங்கள்
தில்லான பாடுகின்ற தீர்க்கமொழி ஓவியங்கள்
ஆடிவரும் தேராக அண்டமெலாம் கொண்டாடும்
அள்ளினாலும் குறையாத அற்புதங்கள் நின்றாடும்
ஈடில்லா படைப்புகள் எல்லாமே இம்மொழியில்
என்னவளம் இல்லை எங்கள் தமிழ்மொழியில்.
·
முனைவர் இரா. வரதராசன் (25.2.2024)
என்ன வளம் இல்லை எங்கள் தமிழ்மொழியில்!
கவிஞர் இரா. இரவி
***
என்ன வளம் இல்லை எங்கள் தமிழ்மொழியில்
எல்லா வளமும் பெற்ற முதல்மொழி தமிழ்!
சொற்களின் சொர்க்கமாக உள்ளது தமிழ்மொழி
சொக்க வைக்கும் சுந்தரமொழி தமிழ்மொழி
இலக்கணம் இலக்கியம் நிறைந்திட்ட தமிழ்மொழி
இனிமை நிறைந்திட்ட செம்மொழி தமிழ்மொழி
செம்மொழியின் அனைத்துத் தகுதிகளும் உள்ள தமிழ்மொழி
செம்மொழிகளில் சிறந்த மொழியும் தமிழ்மொழி
பன்னாடுகளில் ஒலிக்கும் மொழி தமிழ்மொழி
பண்பாட்டை பயிற்றுவிக்கும் மொழி தமிழ்மொழி
உலகப்பொதுமறையை உலகிற்கு தந்திட்ட தமிழ்மொழி
ஒப்பற்ற காவியங்கள் காப்பியங்கள் உள்ள தமிழ்மொழி
தொல்காப்பியம் அகத்தியம் தொன்மையுள்ள தமிழ்மொழி
தொன்றுதொட்டு என்றும் இயங்கி வரும் தமிழ்மொழி
இணையத்தில் இந்திய மொழிகளில் முதன்மையான தமிழ்மொழி
இளையோர் பயன்பாட்டிலும் சிறந்திட்ட தமிழ்மொழி
பாரதி பாரதிதாசன் கவிஞர்களைத் தந்த தமிழ்மொழி
பாரம்பரிய பெருமைகள் மிக்க மொழி தமிழ்மொழி
உலகத்தமிழ் மாநாடுகள் பல கண்ட தமிழ்மொழி
உலகத் தமிழர்கள் போற்றிப் புகழும் தமிழ்மொழி
ஓர் எழுத்தில் பொருள் சொல்லும் தமிழ்மொழி
ஓரெழுத்து மாறினால் பொருள் மாறும் தமிழ்மொழி
கல் தோன்றி மண் தோன்றா முன்னே வந்த தமிழ்மொழி
கற்காலம் தொடங்கி இக்காலம் வரை நிலைத்திட்ட தமிழ்மொழி!
********************
********************
என்ன வளம் இல்லை? எங்கள் தமிழ் மொழியில்!
சித்தாந்த ரத்தினம்
எஸ் வி ஆர் மூர்த்தி பெங்களூர்
என்ன வளம் இல்லை ?
எங்கள் தமிழ் மொழியில்!
அகரம் எனும்
தமிழ்ச் சுவடு !
உலக மொழிகளுக்குப் படிச்சுவடு !
முதல் மொழி!
மூத்த மொழி !
இயல் மொழி !
செயல் மொழி ! (4)
ஓசையொலி உருவாக்கம்
ஓங்காரத் தமிழே ! - உலகம்
பேசும் மொழிக்கு கருவாக்கம்
தூங்காதத் தமிழே !(6)
கோடாண்டு கொடியாண்டு
கோலாண்டு குடியாண்ட
நாடாண்டத் தமிழ் வேந்தர் மூவர்!
ஏடாண்டத் தமிழுக்கு ஏற்றம் ஆவார்!
நீடாளும் தமிழே ! நாடாளும் தமிழினமே !(10))
குறிஞ்சிக் கோடுடைத்து
முல்லைக் காடுடைத்து
மருதம்
மண் சமைத்த மரபினர்
நெய்தல்
பாய் விரித்த பரதவர்
செய் வாய் மொழியே மூத்தக் குடி தமிழ் !(14)
மனந்தூய்மை மனத்தானாம்
மாந்தர்க்குத் தன்மானத் தன்னுணர்வு !
இனந்தூய்மை இனத்தானாம்
இனத்திற்கு இயல்பான இனவுணர்வு !
தாய் மொழித் தன்னுணர்வேநாளும்
தமிழ் மூச்சு !
வாய் மொழி வழி மொழியே வாழும்
தமிழ்ப் பேச்சு ! (18))
வாழும் வழி காட்டும் திரு வள்ளுவம் !- உயிர்
நீளும் மொழி கூட்டும் திரு மந்திரம் !
எழுத்தில்லா மொழிகளுக்கு எழுத்துருவாகும் காலம் ! - வேர்
விழுதான தமிழ் உலகுக்கு வழி
கோலும் (22)
இன்றும் வாழும் எங்கள் தமிழ் -
என்றும் வாழ்க என வாழ்த்துவோம் ! (24)
✍️
சித்தாந்த ரத்தினம்
எஸ் வி ஆர் மூர்த்தி பெங்களூர்
நாள் : 21.02.2024
*****************************
No comments:
Post a Comment