Pages

Wednesday, 10 September 2025

16.8.25 & 17.8.25 -அம்பைத் தமிழ் இலக்கியப் பேரவை-பொன்விழா மலர்-எனது கவிதை-ஆறுகளின் இராணி தாமிரபரணி

 ஆறுகளின் இராணி தாமிரபரணி

புதுக்கவிதை 

கு.கி. கங்காதரன்  

கைப்பேசி:  9865642333


நெல்லையின் மகுடத்தில் முத்துகள் மூன்று
நெடிய ஆனித்தேரில் வலம்வரும் நெல்லையப்பர் 
ஒய்யாரமாய்த் தவழும் தாமிரபரணி ஆறு
அம்பாள் உருவில் திருவருளும்  அம்பாசமுத்திரம்

தாமிரபரணி அழகில் மயங்கியது மனம்
தானாகவே எழுதியது எனது எழுதுகோல்
கவர்ச்சியின் பின்னே காரணத்தை  அலசியது
கன்னியின் இளமைக்கான மர்மம் விலகியது

சூரியஒளி தடவுவதால் பளபளப்பு சேர்ந்திருக்குமோ?
சந்திரனின் பார்வையால் வெண்மை ஏறியிருக்குமோ?
பொதிகைத் தென்றலால் குளுமை பெற்றிருக்குமோ?
பூக்களின் மென்மையால் பொழிவு கூடியிருக்குமோ?

தெற்கின் கங்கையோ விண்ணின் மங்கையோ !
தேனமுதச் சுவையோ நோய்களுக்கு  மருந்தோ !
பரமனை மனிதனோடு இணைக்கும்  பாலமோ ! 
பரணியின் பாரம்பரிய விழாக்கள்  கோலமோ !

தாமிரபரணி கரையில் நடைபெறும்  ஆடிப்பெருக்கு
திரளான பெண்களின் சீர்வரிசைக் காட்சி 
சுமங்கலிகள் புதியதாலி அணியும் நிகழ்ச்சி
சப்த கன்னியர்க்கான கோவில்களில்
வழிபாடு

ஆண்டின் விசாகத்தில் புஷ்கரத் திருவிழா
புண்ணியம் சேர்க்கும் பாவத்தைப் போக்கும்
குருபகவான் சஞ்சரிக்கும் விருச்சிக ராசி 
குளிப்போருக்குக் கிட்டும் மகாமகம் நல்விணை 

ஆன்மீகத் தலங்களின் அடிநாதமான தாமிரபரணி
ஒன்பது சிவாலயங்களான நவ கைலாயங்கள்
ஒன்பது பெருமாள் கோவில்களான நவதிருப்பதி
ஆறுகளின் இராணிக்கான தகுதிகள் தாமிரபரணியே

*****************





*******************************************

31.8.2025 மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனைக்கவியரங்கம்- பண்டையத் தமிழ் பன்னாட்டு மொழி



மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனைக்கவியரங்கம், மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை மழலையர் பள்ளியில் நடந்தது.

"பண்டையத் தமிழ் பன்னாட்டு மொழி "எனும்  தலைப்பில்  கவியரங்கம் நடந்தது.

 தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.

செயலர் தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா .இரவி  தலைமையில் கவியரங்கம் நடந்தது.  துணைத்தலைவர் முனைவர் இரா. வரதராஜன்  வரவேற்றார்.பொருளாளர்  இரா.கல்யாணசுந்தரம், முன்னிலை வகித்தார் .

செயலர் கவிஞர் இரா .இரவி  தலைமையில் ,கவிஞர்கள் ,இரா . கல்யாணசுந்தரம் , முனைவர் இரா.வரதராஜன், கு கி .கங்காதரன் , அஞ்சூர்யா க .ஜெயராமன் , கி .கோ .குறளடியான் ,கு .பால் பேரின்பநாதன்,  ச. லிங்கம்மாள், சிவ சத்யா ,  இளையான்குடி இதயத்துல்லா, பா .பழனி  , பா . பொன் பாண்டி  ஆகியோர் கவிதை பாடினார்கள்.தென்காசி திருவள்ளுவர் கழகம்  புலவர் ம. ஆறுமுகம் கவிதையை அவரது மகன் வாசித்தார். அவரது பேத்தியும் வந்திருந்தார்கள்.

பேரவையின் சார்பில் சிறப்பாக கவிதை பாடிய கவிஞர் பால் பேரின்பநாதன்,  அஞ்சூர்யா க .ஜெயராமன்  இருவருக்கும் தென்காசி  திருவள்ளுவர் கழகம் வெளியிட்ட திருக்குறள் உரை  நூலும் ,முனைவர் வரதராசன் எழுதிய நூலும்  பரிசாக வழங்கினர்.  துணைச் செயலர் கு கி .கங்காதரன்  நன்றி கூறினார்

செந்தமிழ்க் கல்லூரியின் விரிவுரையாளர் அதிவீர பாண்டியன் உள்ளிட்ட பலர் வருகை தந்தனர் .

கவியரங்கம் நடத்துவதற்கு மாதாமாதம் மணியம்மை பள்ளியை இலவசமாகத் தந்து உதவும் புரட்சிப் பாவலர் மன்றத்தின் தலைவர் பி . வரதராசன் அவர்களுக்கு அனைவரும் நன்றி கூறினார்கள் .

படங்கள் புகைப்படக் கலைஞர்கள் சம்பத் ,ரெ.கார்த்திகேயன் கை வண்ணம் .












பண்டைத் தமிழ் பன்னாட்டு மொழி ! 

கவிஞர் இரா. இரவி !


இந்தியாவில் தமிழ்நாடு புதுவை இரண்டிலும்

இனிய தமிழே ஆட்சிமொழியாக உள்ளது!


சிங்கார சிங்கப்பூரின் ஆட்சி மொழியாக

செந்தமிழ் கோலோட்சி வருகின்றது!


சுந்தர இலங்கையில் ஆட்சிமொழியாக

சுந்தரத் தமிழ் இன்றும் ஒலித்து வருகின்றது!


அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில்

அன்னைத் தமிழ்மொழி இடம் பெற்றுள்ளது சிறப்பு!


உலகின் பல நாடுகளில் பயிற்றுமொழியாக

உன்னத தமிழ்மொழியைப் பயின்று வருகின்றனர்!


ஈழத்தமிழர் இல்லாத நாடில்லை உலகில்

ஈழத்தமிழ் உலகம் முழுவதும் ஒலிக்கின்றது!


கனடா ஆஸ்திரேலியா துபாய் கத்தார்

கற்கண்டுத் தமிழ் கற்று வருகின்றனர்!


உலகில் தமிழ் மொழி ஒலிக்காத நாடே இல்லை

உலகில் தமிழன் இல்லாத நாடே இல்லை!


தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவ வேண்டும்

தமிழ்க் கவியரசன் பாரதியார் கனவு நனவானது!


உலகில் எங்கு வாழ்ந்தாலும் தமிழர்கள்

இல்லங்களில் இனிய தமிழே பேசி வருகின்றனர்!


உலகமொழி ஆங்கிலத்திற்கும் சொற்களை

உதவியாகத் தந்துள்ள உன்னதமொழி தமிழ்!


உலகமொழியாக ஆங்கிலத்தோடு தமிழையும்

உலகம் அறிவிக்கும் நாள் விரைவில் வரும்!

**************














**மா மதுரைக் கவிஞர்* *பேரவை* , மதுரை 

 *சிந்தனைக்* *கவியரங்கம்* - *37* 

நாள் : 31. 08. 2025 

🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

 *பண்டையத் தமிழ்ப்** 

 *பன்னாட்டு மொழி*

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

குறிஞ்சி

 மேட்டினைக் குடைந்து 

வாழ்ந்தவர் 

 *தமிழர்* ! 

முல்லைக் காட்டினைக் 

கடைந்து 

வாழ்ந்தவர் *தமிழர்* ! 

மருத நிலத்தை மாசற உழுது

வாழ்ந்தவர் *தமிழர்* ! 

நெய்தற் கடலை நேசமுற தொழுது

வாழ்ந்தவர் *தமிழர்* ! (4)


நானிலம் கொண்டவர்   உலகில்  பல

மாநிலம் கண்டவர் *தமிழர்* -

திரை கடலோடி திரவியம் 

தேடியவர் *தமிழர்* !

சென்ற

 இடந் தோறும் சலியாது உழைத்தவர் *தமிழர்* ! 

செம்மை சேர் சிறப்புகள் 

நலியாது

இழைத்தவர் *தமிழர்* !(8)

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

 *யாதும் ஊரே!* *யாவரும் கேளீர்* !

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


 உயிர் மூச்சு வாழ 

 *உணவும் நீரும்* !

உள்ள உணர்வு வாழ  

 *பேசும் தமிழாம்* ! (10)

காடும் மலையும் 

கடந்திடும்  போதும்

ஓடும் ஆறில் 

நீந்திடும் போதும் 

காற்று மழையில்

 நடந்திடும் போதும் 

 *ஊற்றுத் தமிழை* உள்ளத்தில்

ஏற்றி பேசி வாழ்பவர் *தமிழர்* (14)



வீடிழந்த போதும்

நாடிழந்த போதும் 

விதி வசத்தால்

நிதியிழந்த போதும் 

கதியிழக்கினும் உள்ளத்தில் பதித்து ஊன்றிய உணர்வோடு

 *பேசிய  தமிழே* *வாழும் தமிழ்* ! (16)



பண்பாட்டுப் பாதையில் 

 *புழங்கி* 

 *வந்த தமிழ்* !* 

மண் மணக்கும் பேச்சினால் 

 *பழகி* 

 *வந்த தமிழ்** !

பேசிப் பழக

 *பேசு தமிழ்* 

வாயில்  *வாசமிருக்கும்* !

எழுதிப் பழக 

 *எழுது தமிழ்* 

ஏட்டில் *வாழ்ந்திருக்கும்* !(20)


 

பிற மொழிகள் பேச மறந்ததால் மறைந்து போயின!- *அந்தோ!* 

தும்பை விட்டு வாலைப் பிடித்தனரே!

துடுப்பை விட்டு தோணியைப் 

பிடித்தனரே !(23)


உயிர் மூச்சால் உருவான பேச்சு!

உலகமெலாம் உலவிடும் *தமிழ்* !(24)


 *பேசு தமிழா!* 

 *பேசு தமிழ் !* 

✍️

சித்தாந்த ரத்தினம் 

 *எஸ் வி ஆர் மூர்த்தி* பெங்களூர் 

புலனம்: *9611226392*  

நாள் : *31.08.2025*

***********"****

பண்டையத் தமிழ் பன்னாட்டு மொழி

புதுக்கவிதை
கு.கி.கங்காதரன்  26.8.2025 


தமிழ்மொழியின் கவசம் 'கதி'யே என்பாராம்
'தி'னா என்பது வள்ளுவரின் திருக்குறளாம்
'க'னா என்பது கம்பனின் இராமயணமாம்
கருத்துக்கு ஒன்றும் காவியத்திற்கு மற்றொன்றாம்

பண்டைய மூவேந்தர்களின் தமிழ்ப் பற்று
பழந்தமிழ் இலக்கணத்தைப் பேணிக் காத்தது 
தரமான பற்பல இலக்கியங்களைப் படைத்தது
தமிழை உலகெங்கும் கொண்டு  சென்றது 

அலைகடலில் பயணிக்கும் வழிகளைச்  சிந்தித்தனர்
அதன் விளைவாய் கப்பலோட்டிச் சாதித்தனர்
அறிவால் உழைப்பால் வணிகத்தைப் பெருக்கினர்
அனைத்து வணிகத்தில் தமிழை  நுழைத்தனர்

கப்பலில் மன்னர்கள்  பன்னாடுகளுக்குச் சென்றனர்
கூடவே தமிழ்மொழியும் அந்நாடுகளில் பரப்பினர்
இன்றைக்கும் பன்னாட்டில் தமிழானது ஒலிக்கிறது
எங்கு சென்றாலும் தமிழ்மொழி வாழ்கிறது
 *****************




















************************************************