

30.11.2025 மாமதுரைக்
கவிஞர் பேரவை-
சிந்தனைக் கவியரங்கம்- 40
மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனைக் கவியரங்கம், மதுரை, வடக்கு மாசி வீதி, மணியம்மை மழலையர் பள்ளியில் நடந்தது.
"இமயத்தில் இருக்கும் இனியமொழி தமிழ் " எனும் தலைப்பில் கவியரங்கம் நடந்தது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி
தொடங்கியது.
செயலர் தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா .இரவி தலைமையில் கவியரங்கம் நடந்தது. வீர அதிசிவத்த தென்னவன் வரவேற்றார் , துணைத் தலைவர் முனைவர் இரா வரதராஜன் முன்னிலை வகித்தார் . .
செயலர் கவிஞர்
இரா .இரவி
தலைமையில் ,கவிஞர்கள்
,இரா . கல்யாணசுந்தரம்
, முனைவர் இரா.வரதராஜன், புலவர்
மகா .முருகுபாரதி
, கி .கோ
.குறளடியான் ,கு
. பால் பேரின்பநாதன்,
ச. லிங்கம்மாள்,பா .பொன் பாண்டி , பா
.பழனி,முனியாண்டி
, ந ..சுந்தரம்
பாண்டி ,மா
.பரமானந்தம் , இரா
.நீலமணி வண்ண
கண்ணன் ,அவரது மனைவி
கி .காயத்ரி
, முனைவர் பா
.ஸ்ரீவித்யா பாரதி
,ஆகியோர் கவிதை
பாடினார்கள்.
பேரவையின் சார்பில் சிறப்பாக கவிதை பாடிய கவிஞர்கள் ந .சுந்தரம் பாண்டி , கி .காயத்ரி இருவருக்கும் பொன்னாடைப் போர்த்தி தமிழறிஞர் அழகுராசன் வழங்கிய திருக்குறள் முனுசாமி எழுதிய திருக்குறள் உரை நூல் பரிசாக வழங்கி கவிமாமணி தென்னவன் நினைவு விருதும் வழங்கினார்கள் . பொருளாளர் இரா.கல்யாணசுந்தரம் நன்றி கூறினார்.
பார்வையாளராக த.மு .எ.க .ச பொறுப்பாளர் சு .பாலசுப்ரமணியன் ,தாய் பயிற்சி மையம் மோகனக்கண்ணன்,ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்
கவியரங்கம் நடத்துவதற்கு மாதாமாதம் மணியம்மை பள்ளியை இலவசமாகத் தந்து உதவும் புரட்சிப் பாவலர் மன்றத்தின் தலைவர் பி . வரதராசன் அவர்களுக்கு அனைவரும் நன்றி கூறினார்கள் .
படங்கள் புகைப்படக் கலைஞர் ,ரெ.கார்த்திகேயன் கை வண்ணம் .
**********
இமையத்தில் இருக்கும்
இனிய மொழி
தமிழ்!
- கவிஞர்
இரா. இரவி
*****
இமையத்தில் இருக்கும்
இனிய மொழி
தமிழ்!
எந்த மொழியும்
எம் தமிழுக்கு
ஈடு இணை
இல்லை!
எல்லா மொழிகளுக்கும்
சொற்கள் தந்தது
தமிழ்!
எல்லா மொழிகளின்
தாய்மொழி நம்
தமிழ்!
அமெரிக்கா ஆய்வாளர்
ஆய்வின் முடிவு!
அகிலத்தின் முதல்மொழி
அன்னைத் தமிழே!
மொழிஞாயிறு தேவநேயப்
பாவாணர் உரைத்தார்!
மொழி ஆய்வாளர்கள்
வழிமொழிந்தனர் அவர்
கூற்றை!
இலக்கண இலக்கியங்களின்
இமையம் தமிழ்!
இவ்வளவு இலக்கியங்கள்
வேறுமொழிகளில் இல்லை!
தமிழ் என்று
தொடங்கும் பெயர்கள்
ஆயிரம் உண்டு!
தமிழ் தவிர
வேறு மொழிகளுக்கு
இவை இல்லை!
மொழியின் பெயரில்
நாடு உள்ள
நாடு தமிழ்நாடு!
மொழியாக பன்னாடுகளில்
ஒலிக்கும் நம்
தமிழ்!
தமிழகம் இலங்கை
சிங்கப்பூர் மலேசியா
ஆட்சிமொழி!
தமிழ்மொழி தவிர
வேறு இந்திய
மொழி பன்னாட்டில்
இல்லை!
உலகம் முழுவதும்
தமிழன் இல்லாத
நாடே இல்லை!
உலகம் முழுவதும்
தமிழ் ஒலிக்காத
நாடே இல்லை!
திருக்குறள் ஒன்றுபோதும்
தமிழ்மொழிக்கு மகுடம்!
திருக்குறளை மொழி
பெயர்க்காத மொழியே
இல்லை!
ஒன்றிய அரசசே
தமிழ்மொழிக்கு கோடிகள்
கொடு !
ஒழிந்து போன
சமஸ்கிருதத்திற்கு தந்தவை போதும்
!
தமிழ்மொழியில் சென்ற
இடமெல்லாம் புகழ்ந்தது
போதும் !
தமிழ் மொழியை
ஒன்றிய ஆட்சிமொழியாக
அறிவியுங்கள்.!
************
இமயத்தில் இருக்கும்
இனிய மொழி
தமிழ்
புதுக்கவிதை
இமயத்தின் சிறப்பு
எண்ணில் அடங்காது
இனியத் தமிழின்
சிறப்புகளும் அவ்வாறே
இவ்விரண்டிற்கும் பற்பல
ஒற்றுமை உண்டு
ஒவ்வொன்றாய் இக்கவியில்
கேட்டுச் சுவைப்போம்
இவ்விரண்டிற்கும் முதன்மைப்
பட்டம் பொருந்தும்
இமயமே மலைகளுக்கெல்லாம்
உயர்ந்த மலை
அவ்வாறே தமிழே
மொழிகளுக்கு மூத்தமொழி
இவ்விரண்டில் இனிமை
குளுமை உண்டு
இமயமலையில் மேடும்
பள்ளமும் உள்ளது
எம்தமிழிலும் குறிலும்
நெடிலும் உள்ளது
இமயத்தை ஆன்மீக
இடமாக ஆராதிப்பார்
அழகுத் தமிழையும்
இறைவனாய் மதிப்பார்
இமயத்தில் பற்பல
நதிகள் உருவாகிறது
இன்பத் தமிழிலாலும்
பன்மொழிகள் பிறந்துள்ளது
இமயத்தில் உயர்ந்த
சிகரங்கள் உள்ளன
இனியத் தமிழிலும்
உயர்ந்த நூல்கள்
காணலாம்
பயிற்சியால் இமயத்தை
எட்டுவது எளிது
முயற்சியால் தமிழையும்
படிப்பது எளிதே
இத்தனைத் தகுதிகள்
இமயத்திற்கே பொருந்தும்
இமயத்திற்கு ஒப்பீடும்
தகுதி தமிழுக்கே
உண்டு ..
***************
*இமையத்தில்* *இருக்கும்*
*இனிய மொழி தமிழ்*
*உமிழூறும்* நாக்கு உருவாக்கும்
பேச்சு -நல்ல
*தமிழூறும்* நாக்கு *திருவாக்குப்*
பேச்சு (2)
அயல் மொழி
பேச்சால்
*குறையும்*
உயிர் வாழ்நாள்
- *தமிழ்*
செயல் மொழி
பேச்சால்
*நிறையும்*
உயிர் வாழ்நாள்
(4)
ஓசை ஒலியானது *பிறமொழி* *வளர்ச்சி*
-தமிழ்
ஓசையொலி இசையானது
*தமிழ்மொழி*
*உயர்ச்சி*
(6)
மண்ணில் *பொன்மணி*
விளைத்தவர்
*ஏர் உழவர்* -தமிழ்ப்
பண்ணில்
*மரபு மணி*
விதைத்தவர்
*சீர் உழவர்*
(8)
இயல்பானப் பேச்சு
சொல்லும் *இயலானது*
இசைவானப் பேச்சு
செல்லும்
*இசையானது*
இயலிசைச் சேர்க்கை
*துள்ளும் கூத்தானது*
முத்தமிழ் மூன்றும்
*கொள்ளும்* *முக்கனியானது* (12)
உடலில் ஓடும்
நாடிகள் ஏழும்
*உடலைப்* *பண்படுத்தும்* -உள்ள
உணர்வில் பாடும்
பண்கள் நாடும்
*உள்ளத்தைப்* *பண்படுத்தும்*
(14)
நயம்பட உரைத்தல்
நல்ல *பேச்சாகும்**
-மனம்
வயப்பட இசைத்தல்
நல்ல *பாட்டாகும்*
(16)
உடலோடு ஒட்டி
வந்தது *உயிர்*
உயிரோடு ஒட்டி
வந்தது *உணர்வு*
உணர்வோடு ஒட்டி
வந்தது *தமிழ்*
உறவோடு பேச
*உரையாகும்*
*தமிழ்*
உறவோடு பாட
*இசையாகும் தமிழ்*
உறவோடு ஆட
*கூத்தாகும் தமிழ்*
(22)
உமையவள் பாதி
உடையவன்
*சிவனாகும்* -தமிழ்
இமையத்தில் இருக்கும்
*இனிய மொழியாகும்*
சித்தாந்த ரத்தினம்
*எஸ் வி ஆர் மூர்த்தி* பெங்களூர்
புலனம்:
*96112 26392*
நாள் : *30.11.2025*
***************
தலைப்பு :-
இமயத்தில் இருக்கும்
இனிய மொழி
தமிழ்.!!
கவிஞர் சமய
கண்ணு
" இமயம் " என்பது இந்தியத்
தாயாம்
உமையவள் அளித்த
உயர்ந்த புகழ்
மலை!!
அம்மலை போல
அவனியில் எங்கு
தேடினும்..
இல்லை என்பதே ஆய்ந்த
உண்மை!!
அது ஓர் புதுமைப் படைப்பாம்..!
புவித்தாய் அளித்த
அற்புதத் தோன்றலாம்!!
அழகின் சொரூபமாம்!!
அப்படித் தண்ணே
அழகாம் தமிழும்...
ஒப்பற்ற முதல்
மொழி.. உலகிற்கே
முதல் தாய்
மொழி!!
எத்தனை மொழிகள்
இவ்வுலகில் தோன்றிடினும்
அத்தனை மொழி
க்கும்
அன்னைத் தமிழே
பிறப்பினில் மூத்த
முத்தமிழ் முது
மொழி என்று...
ஆய்வுரைகள்
ஆயிரமாயிரம்
எடுத்தோம்பும் இனிய
கன்னல் மொழிநம்
தமிழாம்!!
ஈராயிரம் நூற்றாண்டு
இளைவளாம் எம்
அன்னை...
புல் பூண்டு
கல் மண் போன்ற
புவிசார் உயிரினம்
பிறக்கு முன்பே...
பிறந்து புகழ் சமைத்த
உலக முது மொழி நம்
தமிழ் மொழி!!
அம்மொழியே இமயத்தில்
என்றும் திலகமாய்
வீற்றிருக்கும் இனிய
தமிழ் மொழி!!!
வணக்கம்.
************
இமயத்தில் இருக்கும்
இனியமொழி தமிழ்!
முனைவர் மு
க. பரமசிவம்
.
உலக வாழ்வியலில் பிறமொழிகளுக்கும்.
உயிர்எழுத்து வழங்கும்
தேன்சுவைமொழி!
நிலமெங்கும் வாழும் மொழிவளத்தில்.
நற்றமிழ்ஓசை தரும் தனிமொழி !
.
வல்லினமெல்லின இடையினம் மொழி.
வரலாறுபடைக்கும் பொற்றமிழ் மொழி! .
வெல்லும் திறன் ஊக்கத்திலே.
வான்உலகமும் போற்றும் மொழி!
.
.
யாம்காணும் மொழி இனிமையிலே .
யானியர்களின் இதயம் கவர்ந்தமொழி!
தாம்கண்டறிந்த மதுர கீதத்திலும்.
தேசம்எங்கும போற்றும் இனியமொழி!
இமயமலை உயரத்திற்கும் இனிய.
இசை இன்பம் பெருக்கும்மொழி!
.
.
இமைஇரண்டும் மூடியதில்.
இருள் சூழ்ந்து ஒளிர்வதிலும் !
அமைதிவளம் மடிவதில்.
அகிலவளம் ஒழிந்தாலும் !
உமையவளின் திருவருளால்.
உதயமாகி ஒளிரும் செம்மொழியே.!
இமையத்திலிருக்கும் இனியதமிழ் மொழியில் .
ஏழிசைப்பா போற்றி வாழ்த்துவோம்!
கவிஞர்
மு
க
பரமசிவம்.
பேரையூர் கல்லுப்பட்டி.
மதுரை
மாவட்டம்-625703. அலைபேசி: 9786519558. .
********



































































No comments:
Post a Comment