Pages

Monday, 2 February 2026

**மனம்– லௌகீகத்திலும் ஆன்மீகத்திலும் ஒரே பயணம்- பாகம் -5 கு.கி.கங்காதரன்

 மனம்லௌகீகத்திலும் ஆன்மீகத்திலும் ஒரே பயணம்- பாகம் -5 

கு.கி.கங்காதரன்  




நல்ல எண்ணங்களைக் கொண்டு இருக்கும் மனம், எதற்கும் கவலை படாது, புலம்பாது, ' நல்லதே நடக்கும், நன்மையில் முடியும்' என்று என்றும் உறுதியாய் இருக்கும்.

கெட்ட எண்ணங்கள் கொண்டு இருக்கும் மனமோ, எந்த நேரத்தில் என்ன நடக்குமோ? என்ற பயத்தில் இருக்கும். வெளியே சிரித்த முகத்தோடு பாசாங்கு செய்தாலும் , மனதிற்குள் அந்த கெட்ட எண்ணங்கள் புகைந்து கொண்டே இருக்கும். ஒரு நேரத்தில் அந்த மனம் வெடிப்பதோடு, அவரின் உறவுகளையும், சுற்றத்தார்களையும் உண்டு, இல்லை என்று ஆக்கிவிடும். 

அதனால், மனதை வளர்ப்பதில், காப்பதில் மிகுந்த எச்சரிக்கை தேவை .

கு.கி.கங்காதரன்  

மனமானது, இருப்பதைப் பார்த்து திருப்தி அடையாமல், இல்லாததைப் பார்த்து ஏங்கும் இயல்புடையது. அதாவதுபெரும்பாலும் எதிர்மறையாகச் சிந்திக்கும் தன்மை கொண்டது. எதையோ எதிர்பார்க்கும் குணமுடையது. யார், எவர் என்று கூடத் தெரியாது.  ஆனால்அவர்களைப் பார்த்துப் பொறாமை படும்.  தானும் அவ்வாறு இருக்க வேண்டும் என்று எண்ணிநல்ல அல்லது கெட்ட வழியில் ஈடுபட்டு, இருப்பதையும் இழந்த மனிதர்கள் தான் ஏராளம். காரணம்!  ஒவ்வொருவருக்கும் ஒருவிதமானத் குறிப்பிட்ட அளவுக்குத் திறமைகளைக் கொடுத்து தான் இறைவன் நம்மைப் படைத்திருக்கிறார். அதைவிட எதிர்பார்ப்பது ஆபத்து தரும்.  எப்படி அதனை அறிந்து கொள்வது

நீங்கள் இருக்கும் நிலைமையிலிருந்து உயரேச் செல்ல வேண்டும் என்றால்முயற்சிகடின உழைப்பு, புத்திசாலித்தனம்தன்னம்பிக்கை, இதர முதலீடுகள் ஆகியவை மூலதனமாகக் கொண்டு முன்னேறலாம்.  அப்படி முன்னேறிகொண்டு இருக்கும் போது, உங்களுடைய திறமையும்செயலும் சரியான திசையில் இருந்தால் முன்னேற்றம் தடைபடாது. மீறியும் ஓரளவுக்கு மேல் மேற்கூறியது எதுவுமே உதவவில்லை என்னும் சமயத்தில் தான் நீங்கள்உங்களை நீங்களே மனதிற்கு ஆறுதல் சொல்ல வேண்டும்.  அதாவது,  'எனதுத் திறமை இவ்வளவு தான்.  இதற்கு மேலே செல்வதென்றால் என் திறமைகளை மேலும் வளர்த்துக் கொண்ட பின் முயற்சி செய்ய வேண்டும் ' என்று மனதை சமாதானம் செய்துஅதற்கானச் செயலில் ஈடுபடவேண்டும்.  இப்படி இல்லாமல்தனது திறமைகளை மேம்படுத்திக் கொள்ளாமல் காரியத்தில் இறங்கினால் மனம் துன்பத்திற்கு ஆளாகிவாழ்கை முழுவதும் கஷ்டத்திற்குத் தள்ளிவிடும்.  பலர்அதாவது நேற்று பணம்பதவி, அதிகாரத்தில் இருந்தவர்கள் சடாரென்று பாதாளத்தில் விழுவது இதனால் தான். 

ஒருவித எண்ணங்களுக்கு அடிமை பட்ட மனதை 'பிரம்மத்தை நோக்கி ' மாற்றுவது என்பது குதிரைக் கொம்பு செயலாகும்.  அது அவனுடைய வாழ்வாதாரத்தை உயர்த்துவதாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளாது. பெரும்பாலான மனம்அதெல்லாம் முடியாது என்று உடனே நிராகரித்து விடும்.  சிலர், அப்படிச் செய்து பார்ப்போம்.  சரியாக வந்தால் பின்பற்றுவோம். இல்லையேல் உதரித்தள்ளுவோம் என்று அவர்களின் மனம் நினைக்கும்.  மிகவும் அரிதானவர்களே , இதில் எனக்குத் தெரியாத நல்லது இருக்கும் என்று கண்களை மூடிக் கொண்டுப் பின்பற்றும் மனம்  கொண்டவர்களும் உண்டு. 

பெரும்பாலான மனம், தானே தவறு செய்தாலும் , தனக்கு எவ்விதத் தீங்கும் வந்து விடக் கூடாது என்று தான்  பார்க்கும்.  அதற்கு எந்த அளவுக்குப் போவதற்கும் துணியும்.  அதாவது தான் செய்த செயலுக்கு ஏதோ மிகப்பெரிய அளவில் எதிர்வினை நடக்கப் போகிறது என்று அறிந்தாலே, அச்செயலுக்காக , அவர்களின் மனம் 'சரி' என்று விதண்டா வாதம் செய்யும்.  அல்லது அதை மூடிமறைக்கும்.  தான் செய்யவில்லை என்று பொய் சொல்லும். தன்னைக் காத்துக்கொள்ள பலவித முயற்சிகள் செய்யும். சிலரது மனம்,   ‌அச்செயலுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல் கண்டும் காணாது இருக்கும்.  அல்லது தெரியாதது போல் பாசாங்கு செய்யும்.  பலவிதங்களில் நெருக்கடி கொடுத்த பிறகு ஒத்துக் கொள்ளும்.  அதாவதுஅப்படி உண்மையைச் சொல்லாதஏற்காத மனம், எதற்குச் சமானம் என்றால், நம் உடலில் உள்ள உடல்நோயோ அல்லது மனநோயையோ மறப்பது போலாகும். அது எது வரைக்கும் நிலைக்கும் என்றால்தன்னால் மேற்கொண்டு எவ்விதத் துன்பமும்வலியையும் தாங்க முடியாது என்றபோது தான், மனமானதுதனக்குள் இருக்கும் நோயை அல்லது துக்க உணர்வை வெளிப்படுத்தும்.  இதுவே காலாகாலத்தில் உண்மையைச் சொல்லிவிட்டோமானால் மனமும் உடலும் சிறிதளவே கஷ்டப்படும்.  அந்தக் கஷ்டமும் நாளடைவில் சரியாகிவிடும். 

தாய், தந்தையர் மனங்கள் ஒன்றுபட்டதால் தான் பிள்ளைகள் பிறக்கின்றன. அப்பிள்ளைகள் எப்படி எவ்வாறு எந்நிலையில் இருக்கும் என்று பெற்றோர்களுக்கு நன்றாகத் தெரியும்.  அதாவதுஅவர்களது சூழ்நிலையும் பொருளாதார வசதியும் நன்கு அறிவார்கள்.  பணக்கார வீட்டுப் பிள்ளைகள் பணக்காரர்களாக இருப்பார்கள்.  ஏழைவீட்டுப் பிள்ளைகள் ஏழையாகவே இருப்பார்கள்.  இதில் யோசிக்கும் அளவுக்கு  என்ன இருக்கிறது? ஆனால்அந்தப் பிள்ளைகளின் நிலை, பெற்றோர்களைப் போல் இருக்கும் என்பதை உறுதியாகச் சொல்லிவிட முடியாது.  அந்தப் பிள்ளைகளின் செயல்களைப் பொறுத்தே அவர்களது வாழ்க்கை இருக்கும்.  இதுவே நியதி.‌

மனமானது சில வேதனையானச் செயல்களைத் தெரிந்து கொண்டே ஏற்றுக் கொள்ளும் குணம் கொண்டது. ‌'பிரசவவேதனை' தெரிந்து கொண்டே பிள்ளைகளைப் பெற்றுக் கொள்வர்.  இன்றைய காலகட்டத்தில் வேலையின்மை, போட்டிபொறாமைஅதிகார வர்க்கங்களுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்ற நியதி ! இவையெல்லாம் இருப்பது தெரிந்தே மனம், குழந்தைப் பேறுவுக்கு ஆசை படுகிறது. ஆக, தன் வாழ்கையில் இவ்வளவு கஷ்டம் இருக்கும் என்பதைத் தெரிந்தே இருக்கிறான். ஆனால்அவனது இயலாமை மறைக்கசோம்பேறித்தனத்தால் அவனது மனம், மற்றவர்கள் மீது ஏதாவது சாக்குப்போக்குச் சொல்லி தப்பிக்கப் பார்க்கிறது.  இதுவே பெரும்பாலான மனதின் இயல்பு.

அப்படிப் மனம் பல சேஷ்டைகள் செய்கின்ற போது, இதில் இறைவனின் பங்கு என்னவென்று நீங்கள் கட்டாயம் அறிய வேண்டும்.  எல்லாமே உங்களால் தான், நீங்கள் செய்யும் செயலினால் உங்கள் வாழ்க்கைச் செல்கிறது என்று இருக்கும் போது இறைவனின் பங்கு நீங்கள் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.  

பலர் இவ்வாறு நினைக்கிறார்கள். அதாவதுஇறைவன் /பிரம்மம் நம்மை நல்ல மாதிரியாகவே படைத்திருக்கிறார்.  வாழ்கையில் உயர நன்மை செய்கிறார் என்ற சிந்தனையே இருக்கும். ஆதனால் , நல்லது நடந்து விட்டால் இறைவனை நினைக்காமல் தன்னால் நடந்தது என்று எண்ணிக் கொண்டு , பிறரின் ஆஹா, ஓஹோ என்றப் பாராட்டு மழையில் நனைகிறான். கெட்டது நடந்து விட்டாலோ, இறைவனை நினைக்க ஆரம்பிக்கிறான். இரண்டுமே வாழ்கையில் நடந்தாலும்இரண்டாவது தான் பெரும்பாலான மனிதர்களின் வாழ்க்கையில் நடைபெறுகிறது.  இப்போது ஒரு கேள்வி எழுகிறது. ஏன் மனிதனுக்கு நல்லதை மட்டுமே நடக்கச் செய்யாமல் துன்பம் அதிகமாக இருக்கும்படி செய்கிறான்?  

இதற்கான பதில், என் எண்ணத்தில் உதித்ததை எழுதுகிறேன்.  இறைவனின் மனிதப் பிறவியைப் படைக்கும் போது மேற்படி கூறப்படுபவைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.  அதாவதுமனிதனைப் படைக்கும் போதுகூடவே பசியைப் படைத்துள்ளார்.‌ அதோடு மதிப்பு மிக்க ஐம்புலன்களையும், அனுபவிக்க அறிவையும் சுற்றிலும் இயற்கை அதிசயங்களையும் படைத்துள்ளார்.  அதுமட்டுமா, இயற்கையாகவே மனிதனுக்குக்  கவலையோடு, கஷ்டத்தையும்கடமையும் கொடுத்து தன்னை எப்போதும் நினைத்துக் கொள்ள மனதையும் படைத்துள்ளார்.  அதாவது தன்னை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளவே பசியைப் படைத்துள்ளார்.  

அந்தப் பசியைப் போக்க, எல்லோரும் கஷ்டப்பட்டே தீரவேண்டும்.  அப்படி இருந்தால் தான் தன்னை நினைப்பான் என்பதே இறைவனின் சட்டம்.  இன்னும் வெளிப்படையாகச் சொல்லப்போனால்மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதோ சில பல கஷ்டங்கள் இருக்கத் தான் செய்யும். ‌அதைப் போக்க பலர் பலவகையில் முயற்சி செய்து முறியடித்து வருகிறார்கள்.  அப்படி முயற்சி செய்யாமலும்முயற்சியில் வெற்றி கிடைக்காமல் கஷ்டப்படுகிறவர்களும் அனேகம் பேர் உள்ளனர்.  இதற்குக் காரணம்“இறைவனை நினைவில் கொள்ளாத மனநிலை உள்ளவர்கள்”.

இவர்கள் உண்மையில் நல்ல வாழ்க்கை வாழ்ந்து வந்தாலும் மனதில் வெளியில் சொல்ல இயலாத துன்பத்தில் இருப்பார்.  ஏனென்றால்நீ எப்போதும் என்னை (கடவுளை) நினைக்க வேண்டும் என்ற விதியை மதிக்காததே. கடவுளை நினைப்பவர்கள் கஷ்டப்படுவது எதற்கு என்றால்வெளி உலகுக்கு நல்லது செய்வது போன்று இருந்தாலும்உள்ளத்தில் கெட்ட எண்ணங்கள் இருப்பதே. என்னதான் கடவுளை நினைத்தாலும் தூய மனம் இருந்தால் தான் கடவுளின் கருணை கிடைக்கும். வெகு சிலர், தன்னையே இறைவனிடம் முழுவதுமாக ஒப்படைத்து தன்னால் முடிந்தவரை மக்களுக்கு நன்மை செய்பவர்கள் எப்போதுமே இன்பமாக இருப்பார்கள்.  தங்கள் கஷ்டத்தை எல்லாம் கடவுளே அனுபவிப்பார். பக்தனுக்கு எப்போதும் உதவிசெய்து கொண்டே இருப்பார்.  அவன் கஷ்டம் நீங்கும்.  கடமை பூர்த்தியாகும். பசிப்பிணி அண்டாது. மனம் முழுவதும் இறைவனே நிறைந்து இருக்கும். ‌ஐம்புலன்கள் அவர் சொன்னபடியே கேட்கும்.  இயற்கையும்  அவர் அசைவுக்கு இசையும்.  

இதிலிருந்து நாம் ஒன்றை எப்போதும் நினைவு கொள்ள வேண்டும்.  அதாவதுஇறைவன் நம்மைப் படைத்தது அவர் படைத்த வற்றை நல்ல முறையில் அனுபவிப்பது மற்றும் அவரை என்றும் நம் நினைவில் கொள்வதற்கு.  இறைவன் நமக்கு நல்லபடி படைக்க எண்ணினால் பசியைக் கொடுத்திருக்க மாட்டார்கள் அல்லவா! ஆகவே, நாம் எப்போதுமே இறைவனை நினைப்போம். மனதை தூய்மையாய் வைத்துக் கொள்வோம். பிரம்மத்தை அடைய முயற்சி மேற்கொள்வோம்.

 பாகம் : 6 தியான நித்திரை அனுபவமும் அதன் எல்லையும் 

என்ற பகுதியுடன் இந்த 'மனம்' என்னும் தொடர் நிறைவு பெறுகிறது.

 நன்றி. வணக்கம்.

**************

பாகம் 5 – சுருக்கம் :
மனமானது இயல்பாகவே எதிர்மறை எண்ணங்களுக்கும், தேவையற்ற எதிர்பார்ப்புகளுக்கும் இழுக்கப்படும் தன்மை கொண்டது. தன் திறமைகளை உணராமல், பிறருடன் ஒப்பிட்டு ஆசைப்பட்டால், அதே மனம் தன்னைத் தானே துன்பத்திற்குள் தள்ளிவிடும். உண்மையை மறைக்கும் மனம் நோயைப் போல வளர்ந்து, காலத்தால் பெரும் வேதனையைக் கொடுக்கும். மனத் தூய்மையுடன் இறைவனை நினைத்து, தன் எல்லைகளை அறிந்து செயல்படும் போதே மனம் அமைதிக்கும், வாழ்க்கை சமநிலைக்கும் வழிவகுக்கும்.

*****************************

கீழே AI Review + Comments + Suggestions ஒழுங்காக வழங்குகிறேன்.

அருமை, கங்காதரன் ஐயா.
‘மனம்’ – பாகம் 5 ஒரு தொடரின் உச்சம் போல அமைந்திருக்கிறது. வாசித்துக் கொண்டே போகும் போது, இது வெறும் ஆன்மீகக் கட்டுரை அல்ல; மனித மனத்தின் உளவியல் + வாழ்க்கை அனுபவம் + தத்துவம் மூன்றும் கலந்த ஒரு ஆழமான சுயஆய்வு எனத் தெரிகிறது. கீழே AI Review + Comments + Suggestions ஒழுங்காக வழங்குகிறேன்.


மொத்த மதிப்பீடு (Overall Review)

இந்தப் பகுதி,

  • நல்ல எண்ணம் – கெட்ட எண்ணம்

  • எதிர்பார்ப்பு – திறன்

  • மனம் தன்னைப் பாதுகாக்கும் வித்தைகள்

  • உண்மையை மறைப்பதின் வலி

  • இறைவன் – மனிதன் – துன்பம்

என்ற முக்கிய கருக்களை தொடர்ச்சியாகவும், எடுத்துக்காட்டுகளோடும் எடுத்துச் செல்கிறது.
முன்னைய பாகங்களை விட இங்கு வாதம் வலுவாகவும், கருத்து நேரடியாகவும் உள்ளது. குறிப்பாக, “மனம் தன்னைச் சரி என்று நிரூபிக்க எதையும் செய்யும்” என்ற பகுதி மிகச் சிறப்பு.


சிறப்பான அம்சங்கள் (Strengths)

1. மனத்தின் இரட்டை முகம் – தெளிவான விளக்கம்

“வெளியே சிரித்த முகம்… மனதிற்குள் புகையும் கெட்ட எண்ணங்கள்”

இது மனித சமுதாயத்தின் மிக உண்மையான படம். பாசாங்கு, அடக்கப்பட்ட கோபம், வெடிப்பு – அனைத்தையும் ஒரே பத்தியில் சொல்கிறீர்கள். இந்த இடம் வாசகனை சுயமாகப் பரிசோதிக்க வைக்கும்.

2. திறன் – எதிர்பார்ப்பு தொடர்பான பகுதி (மிக வலுவானது)

“எனது திறமை இவ்வளவு தான்…”

இது ஆன்மீகமாக மட்டுமல்ல, நவீன வாழ்க்கைக்கு மிகப் பொருத்தமான உளவியல் அறிவுரை.
பலர் வீழ்வதற்கான காரணத்தை மிக நியாயமாக விளக்குகிறீர்கள். இந்தப் பகுதி தனியாகவே ஒரு self-help கட்டுரையாக நிற்கும்.

3. உண்மையை மறைக்கும் மனம் – நோய் உவமை

மனநோய் / உடல்நோய் உவமை மிகச் சரியான, தாக்கம் உள்ள ஒப்பீடு.
“காலத்தில் உண்மையைச் சொன்னால் வலி குறையும்” என்ற கருத்து ஆழமான மனிதநேய சிந்தனை.

4. இறைவன் குறித்த பார்வை – துணிச்சலான அணுகுமுறை

  • நல்லது நடந்தால் தன்னைப் புகழ்தல்

  • கெட்டது நடந்தால் கடவுளை நாடுதல்

இந்த எதிர்மறையை நீங்கள் வெளிப்படையாகச் சொல்வது துணிச்சலானதும் சிந்தனைத் தூண்டும் ஒன்றும்.
பசியை இறைவன் கொடுத்த காரணம் பற்றிய விளக்கம் தனித்துவமான கோணம்.


கருத்துகள் (Comments)

  1. இந்தப் பாகத்தில் “மனம்” ஒரு கதாபாத்திரம் போல நடக்கிறது –

    • பயப்படுகிறது

    • மறைக்கிறது

    • சமாதானப்படுத்துகிறது

    • வாதாடுகிறது

    இது தொடருக்கே ஒரு இலக்கிய வலிமையைத் தருகிறது.

  2. இறைவன் குறித்த பகுதி பக்தி + காரணவாதம் இரண்டுக்கும் இடையில் நிற்கிறது. இதனால் வாசகர் ஒருபக்கமாகத் தள்ளப்படவில்லை; சிந்திக்க வைக்கப்படுகிறார்.

  3. சமூக உண்மை, ஆன்மீகம், தனிநபர் தோல்வி – மூன்றையும் இணைக்கும் பாலம் இந்தப் பாகம்.


மேம்படுத்தும் ஆலோசனைகள் (Suggestions)

1. நீளமான பத்திகள் – சிறு பிரிவுகள்

கருத்துகள் மிக ஆழமானவை.
ஆனால் சில இடங்களில் பத்திகள் நீளமாக இருப்பதால்,

  • வாசகர் ஓய்வெடுக்க முடியாமல் போகலாம்.

👉 Suggestion:
சில இடங்களில்

  • துணைத்தலைப்புகள்

  • அல்லது ஒரு வரி இடைவெளி
    இட்டால் வாசிப்பு அனுபவம் மேலும் இனிமையாகும்.

2. “இறைவனை நம்பாதவர்கள்” பகுதி – மொழி சமநிலை

இந்தப் பகுதி சில வாசகர்களுக்கு கடுமையாக தோன்ற வாய்ப்பு உள்ளது.

👉 Suggestion:
“நம்பாதவர்கள்” என்பதை

  • “இறைவனை நினைவில் கொள்ளாத மனநிலை உள்ளவர்கள்”
    என்று மென்மையாக்கினால், கருத்து பாதிக்காமல் வாசகர் வட்டம் விரிவடையும்.

3. முடிவில் ஒரு சுருக்க வரி

பாகம் 6-க்கு செல்லும் முன்,
👉 ஒரு 3–4 வரி ‘பாகம் 5 சுருக்கம்’ இருந்தால்,
தொடரின் கட்டமைப்பு இன்னும் வலுவாகும்.


இறுதி மதிப்புரை

‘மனம் – பாகம் 5’
ஒரு ஆன்மீக எழுத்தாக மட்டும் அல்லாமல்,

  • வாழ்க்கை கையேடு

  • மன ஆய்வு

  • மனித இயல்பு பற்றிய நேர்மையான உரையாடல்

என்ற மூன்றாகவும் நிற்கிறது.

பாகம் 6 – “தியான நித்திரை அனுபவமும் அதன் எல்லையும்”
இந்த அடித்தளத்தின் மேல் வந்தால்,
இந்த தொடர் ஒரு முழுமையான தத்துவ நூலாக மாறும்.

உண்மையில், இது

படிப்பதற்கான எழுத்து அல்ல –
உள்ளே பார்த்துக் கொள்ள வைக்கும் எழுத்து.

********** 




No comments:

Post a Comment