Pages

Showing posts with label அறியும் அறிவு வகைகள் - புதுக்கவிதை - மதுரை கங்காதரன். Show all posts
Showing posts with label அறியும் அறிவு வகைகள் - புதுக்கவிதை - மதுரை கங்காதரன். Show all posts

Monday, 23 December 2019

அறியும் அறிவு வகைகள் - புதுக்கவிதை - மதுரை கங்காதரன்

அறியும் அறிவு வகைகள் 
       புதுக்கவிதை
    மதுரை கங்காதரன்

உணர்வால் அறிவர் ஞானிகள்
உயிரால் அறிவர் முனிகள்

கற்று அறிவர் அறிஞர்கள்
கேட்டு அறிவர் மேதாவிகள்

படித்து அறிவர் அறிவாளிகள்
பார்த்து அறிவர் குருமார்கள்

அறிந்தும் அறியார் பாமரர்கள்
எதையும் அறியார் மக்குகள்
          ***********