Pages

Showing posts with label ஒரு நாள் - நான் கடவுள் ஆனேன் - புதுக்கவிதை - மதுரை கங்காதரன். Show all posts
Showing posts with label ஒரு நாள் - நான் கடவுள் ஆனேன் - புதுக்கவிதை - மதுரை கங்காதரன். Show all posts

Monday, 24 June 2019

ஒரு நாள் - நான் கடவுள் ஆனேன் - புதுக்கவிதை - மதுரை கங்காதரன்


ஒரு நாள் - நான் கடவுள் ஆனேன் 
          புதுக்கவிதை
       மதுரை கங்காதரன் 

ஒரு மந்திரக்கோல் கிடைத்தது
ஒரு நாள் கடவுள் ஆனேன்

பாடுபடும் பட்டாளிக்கு
பசியை விரட்டும் கூட்டாளி

சக்தி பிறந்தது
புத்தி வளர்ந்தது
யுக்தி தெரிந்தது
பக்தி உதித்தது
முக்தி கிடைத்தது

அப்பாவிகளைக் காக்கப்போறேன்
அறியாமையை அழிக்கப்போறேன்

புதிய உலகம் படைக்கப்போறேன்
புதியபாதைப் போடப்போறேன்

பணப்பேய்களை விரட்டப்போறேன்
பதவி வெறியை அகற்றப்போறேன்

உண்மை நிலைநாட்டப்போறேன்
பொய்யர்களைப் பந்தாடப்போறேன்

பூமியைச் சொர்க்கமாக்கப்போறேன்
புதுமைகளைப் புகுத்தப்போறேன்

பெண்களைப் பாரதிகளாக்கப்போறேன்
ஆண்களைப் பூக்களாகப்போறேன்

வானத்தை மனதில் வைக்கப்போறேன்
விசாலத்தை அதில் காட்டப்போறேன்

பூமியை இதியத்தில் பூட்டப்போறேன்
பொறுமையை உணர்த்தப்போறேன்

உடலில் நெருப்பை பரப்பப்போறேன்
அநீதிகளைச் சாம்பலாக்கப்போறேன்

சிந்தனையை மழையாய் மாற்றப்போறேன்
சிறப்பு குணங்களைத் தெளிக்கப்போறேன்

உயிரில் காற்றாய்க் கலக்கப்போறேன்
ஊருக்கு நன்மை செய்யப்போகிறேன்

உலகை உருப்படியாய் மாற்றப்போறேன்
உவகையை முகத்தில் அப்பப்போறேன்.
                               *************