Pages

Showing posts with label சுடுநீர் உணர்த்தும் வாழ்க்கை தத்துவம் - HAND AND HOT WATER PRINCIPLE. Show all posts
Showing posts with label சுடுநீர் உணர்த்தும் வாழ்க்கை தத்துவம் - HAND AND HOT WATER PRINCIPLE. Show all posts

Wednesday, 5 September 2012

கையும் , சுடுநீர் உணர்த்தும் வாழ்க்கை தத்துவம் - HAND AND HOT WATER PRINCIPLE


அனுபவ பொன் வரிகள்


மதுரை கங்காதரன் 

கையும் , சுடுநீர் உணர்த்தும் வாழ்க்கை தத்துவம் -

HAND AND HOT WATER PRINCIPLE

தத்துவம் எண் : 1 சோதனை :1

ஒரு எளிதான சோதனை செய்து பாருங்கள். உங்களுக்கு பலவிதமான உண்மைகள் புலப்படும். 


அதாவது ஒரு சட்டியில் தண்ணீரை எடுத்துக்கொண்டு அது ஆவியாக ஆரம்பிக்கும் வரை  நன்றாக சூடுபடுத்துங்கள். அந்த சுடுதண்ணீரில் உங்களால் ஒரு கையை முழுவதும் உள்ளேவிட்டு சில நிமிடங்கள் வைத்துக்கொள்ள இயலுமா? அல்லது  குறைந்தது ஒரு விரல் நுனியையாவது தொடமுடியுமா? (குறிப்பு : அதை தொட்டுவிட்டு அவதிபட்டால் நான் பொறுப்பல்ல!) கண்டிப்பாக தொடமுடியாது.  அப்படி தொட்டுவிட்டலும் மிகக்குறுகிய நேரத்தில் (வினாடி கணக்கில்) அதன் தன்மையை உணர்ந்து விரலை வெடுக்கென்று எடுத்துவிடுவீர்கள்! அப்படித்தானே. ஏனென்றால் அதன் கடினமான தன்மை உங்களுக்கு நன்றாக தெரியும். அதன் பாதிப்பு உங்கள் விரல்களுக்கு (கைகளுக்கு) எப்படியிருக்கும்? அதன் விளைவு நன்றாக பார்த்திருப்பீர்கள். கேள்வியும் பட்டியிருப்பீர்கள் !  உங்களுக்கு அது பற்றி நன்றாக தெரியும். அந்த சூழ்நிலை உங்கள் கைகளால் தாங்கமுடியாது என்று, ஆகையால் அத்தகைய பலப்பரீட்சையில் மீண்டும் ஈடுபடமாட்டீர்கள்.

திடீரென்று நிகழும் பாதிப்பு மூலம்  நீங்கள்  பாடத்தை உடனே கற்றுகொண்டுவிடுகிறீர்கள்.

இதற்கு  ஒரு உதாரணம் : 'ஹிரோசீமா & நாகாசாகி ' அணுகுண்டுகளால் எதிர்பாராத தாக்கத்தின் விளைவுகளால் இன்று 'குட்டி ஜப்பான்' பெரிய நாடுகளில் இல்லாத சாதனை செய்து வருகின்றது. 

 

தத்துவம் 2 :  சோதனை : 2


ஒரு சட்டியில் நீங்கள் எப்போதும் உபயோகிக்கும் சாதாரணமான குளிர்ந்த தண்ணியை எடுத்துக்கொள்ளுங்கள். இப்போது உங்கள் கையை முழுவதும் உள்ளேவிடுங்கள் . இந்த முறை மகிழ்ச்சியோடு கையென்ன ? உடல் முழுவதும் கூட மணிக்கணக்கில் உள்ளே நுழைக்க தயாராக இருப்பீர்கள். ஏனென்றால் தினமும் அதை தான் உபயோகிக்கிறீர்கள். அதில் பாதிப்பு ஏதும் ஏற்படாது என்று நன்றாக தெரியும். 

இப்போது அந்த சட்டியில் கீழ் ஒரு சூடடடுப்பு மூலம் மிகவும் மெல்ல மெல்ல அந்த குளிர்ந்த தண்ணீரை சூடுபடுத்துகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். எப்படி உணருகிறீர்கள். இளஞ்சூட்டில் உங்கள் கைகள் இதமான இன்பத்தை உணரும். இப்போது உங்களால் மணிக்கணக்கில் கைகளை உள்ளேயே வைத்திருக்க முடியும். ஏனெனில் அந்த சூடு உங்களால் தாங்கிக்கொள்ள முடியும். அதனால் கைகளுக்கு பாதிப்பு என்பது இம்மி கூட இருக்காது.

இப்போது தண்ணீரின் சூடு சற்று அதிகமாகிறது. இப்போது அந்த சூட்டை கஷ்டப்பட்டு தாங்கிக் கொள்வீர்கள். இம்முறை குறைந்த அளவு நேரமே உங்களால் தாங்கி கொள்ளமுடியும்.

மறுபடியும் அந்த தண்ணீரை அதிகளவு சூடு படுத்துகிறீர்கள். இப்போது உங்களால் அந்த சூடு தாங்கமுடிவதில்ல. பழக்கப் பட்டதால் அதைவிட்டு வெளியே வரமுடியாமல் அவதிப் பட்டு / அவஸ்தை படும் நிலைமை உங்களுக்கு வந்து நிலைத்து விடுகின்றது.

விழிப்புணர்வு தேவை: 

உங்களுக்கு தெரிகின்றது. உங்கள் சூழ்நிலை மாறிக்கொண்டிருக்கின்றது என்று. அப்போதே சுதாரித்து கொண்டு உங்களுக்குள்  'ஏன் சூழ்நிலை மாறுகின்றது?என்று கேட்டதுண்டா? இளம்சூடு ஆரம்பிக்கும்போதே நீங்கள் இந்த சூழ்நிலையில்  இப்படியே இங்கேயே இருந்தால் அதிக சூடு நம்மை பாதித்துவிடும் என்கிற விழிப்புணர்வு கொஞ்சம்கூட இல்லாமல், அப்படி விழிப்புணர்வை ஏற்படுத்தும் உதவிகளை மதிக்காமல் காலம் கடந்து விளித்துகொண்டால் எந்த பயனுமில்லை. கடைசி வரையில் நீங்கள சூடான தண்ணீரில் இருந்து கொண்டு காலம் பூராவும் கஷ்டப்படுவீர்கள்.

சரி ஏன் இந்த உதாரணம்.

சிறிதளவு மக்களே விழித்துக்கொண்டு தங்களை காத்துக்கொள்கிறனர்.

பலர் இரண்டாவது தத்துவத்தில் தான் இருந்துகொண்டு அவதிபட்டு கொண்டிருக்கின்றனர்.

சில 'காலம் கடந்து உணரும்' எடுத்துக்காட்டுகள்:

1. 'லிவர் ' சேதமடைந்த பிறகு தான் ஒருவன் குடிப்பதை நிறுத்துகிறான்.

2. 'நுரையீரல் ' பழுதடைந்த பின்பு தான் ஒருவன் சிகரெட் குடிப்பதை குறைத்துக் கொள்கிறான்.

3. 'உடல் ஊதி பருமனான' பின்பு தான் உணவு கட்டுப்பாடு பின்பற்றுகிறான்.  

4.  'சர்க்கரை மற்றும் உப்பு' அதிகம்மகும்போது தான் அதனை கட்டுப் படுத்த படாதபாடு படுகிறான்.

5. 'இதய தடிப்பு ' அதிகமான பின்பு தான் 'கொழுப்பு ' உள்ள உணவுப்பதார்த்தங்களை உண்பதை அறவே குறைத்துக் கொள்கிறான்.

6. வயதான பின்பு தான் இளமையின் சுறுசுறுப்பை உணருகிறான்.

7. 'டைவேர்ஸ் ' ஆனா பிறகுதான் குடும்பத்தின் அருமையை உணருகிறான்.

8. வேலை தேடி அலையும்போது தான் பரீட்சையில் வாங்கிய குறைவான் மதிப்பெண்ணை பற்றி யோசிக்கிறான்.

9. நஷ்டமடைந்த பிறகுதான் 'வியாபாரத்தில் லாபம் தரும் வழி 'களை படிக்கிறான்.

10. அனைத்து பணமும் செலவான பின்னே 'சேமிப்பது 'எப்படி என்று தெரிந்து கொள்கிறான்.

11. கஷ்டங்கள் சூழ்நத பிறகு தான் பிரார்த்தனை செய்ய ஆரம்பிக்கிறான்.

12. விபத்து நடந்த பிறகு தான் 'பாதுகாப்பான பயணம் ' பற்றி படிக்கிறான்.

இப்படி பல ...

இப்போது உலகை இளஞ்சூட்டில் இருந்து வருங்காலத்தில் அதிகமாய் சூடாக்கிவிடும்  நிகழ்வுகள் :

1. 'பட்டினி ' தலை விரித்தாடும் போது  தான் விவசாயம் எப்படியெல்லாம் சிறப்பாக செய்ய வேண்டும் என்று மக்களுக்கு தெரிவிப்பார்கள் அரசியல்வாதிகள்.

2. 'பஞ்சம் ' நாட்டு மக்களை அதிகம் வாட்டும்போது தான் மழைநீர் சேர்க்க வேண்டும் என்று வாய்கிழிய பேசுவார்கள்.

3. 'சுற்று சூழல் ' மிக மோசமாகும் போது தான் பாலிதீன் பைகள் உபயோகம் செய்வதை தடுப்பார்கள்.

4. 'புவி வெப்பமமயமாதல் ' அதிகரிக்கும்போது தான்  கரும்புகை விடும் வாகனம் மற்றும் தொழில்சாலைகளை ஓட்ட தடை செய்வார்கள்.

5. 'குடிநீர்' பற்றாக்குறை ஏற்ப்படும்போது தான் நதிநீர் இணைப்பது குறித்து விவாதிப்பார்கள்.

6. 'புரட்சி' வெடிக்கும்போது தான் விலைவாசியை பற்றி சிந்தனை செய்வார்கள்.

7. 'தீவிரவாதம்' அதிகமாக மாறும்போது தான் அமைதியை பற்றி விரிவாக பேசுவார்கள்...

நீங்களே சொல்லுங்கள் 'கண் கெட்ட பிறகு படிக்க நினைப்பதில் ' பயனேதுமுண்டா ?

   
 இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com