தன்னம்பிக்கை கொள் !
துணிந்து செயல்படு !
தன்னம்பிக்கை கட்டுரை
மனித வாழ்கையில் பலர் ஒரு செயலை செய்வதற்கு பலருடைய தயவை அல்லது உத்தரவை எதிர்பார்க்கின்றனர். பஞ்ஜாங்கத்தில் எப்போது நல்ல நேரம் என்று பார்த்து அந்த நேரத்தில் தான் செயல்படுகிறார்கள். சிலர் மகான்கள் / ஆன்மீகவாதிகள் சொல்லியபடி 'இந்த நேரத்தில் இந்த காரியம் செய்! உனக்கு வெற்றி கிடைக்கும்' என்பதை எடுத்துக்கொண்டு வேலையை ஆரம்பிக்கின்றனர். வீட்டு பெரியவர்களின் விருப்பப்படி செய்கின்றனர். பரம்பரையாய் இந்த வேலை இந்த நேரத்தில் இன்ன இடத்தில் தான் செய்கிறோம். இன்னும் சிலர் 'ஆருடம் படி செய்தால் பலிக்கும்' என்பதை பின்பற்றுகின்றனர்.
அதுபோல 'இந்த கோவிலுக்குச் சென்று வேண்டிக் கொண்டால் நினைத்த காரியம் கை கூடும்' என்கின்றனர். மேற்கூறியவற்றில் பலரும் வெற்றி கண்டுள்ளனர். இது எப்படி சாத்தியம் ? ஒரு செயலை முடிக்கின்ற சக்தி கோவில் வேண்டுதலில் இருக்கின்றதா? மகானிடத்தில்? பெரியவர்களிடத்தில் ? பரம்பரை பழக்கத்தில் ? நல்ல நேரத்தில்? பின் அந்த சக்தி எங்கிருந்து வருகின்றது? இவைகளுக்கு பதில் - தன்னம்பிக்கை + நம்பிக்கை தான்.
ஒருவன் சாதாரணமான மனத்துடன் வேலை செய்யும்போது கிடைக்கின்ற பலனைக் காட்டிலும், நம்பிக்கையின் பேரில் தன்னம்பிக்கையுடன் துணிந்து செயல்படும்போது கிடைக்கின்ற பலன் மிகவும் அதிகம். அந்த நம்பிக்கை அவனை வழி நடத்திச் செல்கிறது. அவனும் அது போகின்ற திசையில் ஒடுகிற்றான். இலக்கை அடைகின்றான்.
இந்த நம்பிக்கை தான் இந்த உலகில் பல உருவங்களில் இருக்கின்றது. அதை பற்றிக்கொள். அதன் செயலைப் பற்றி நன்றாக தெரிந்துகொள். பின் சிறப்பை உணர்ந்து கொள். நாள் ஆக ஆக அந்த நம்பிக்கை தான் தன்னம்பிக்கையாக மாறி தனக்குத்தானே மனதை வேகபடுத்தி காரியத்தில் ஈடு படவைக்கின்ற்றது. அவனின் ஆர்வம் வெறியாக மாற்றி அவனை வெற்றி பெறச் செய்துவிடுகின்றது.
ஆக மனதை நம்பு. யாரை நம்புவது என்ற குழப்பம் போக்க வேண்டுமானால் உன்னை நீ நம்பு. உன் நம்பிக்கையை நம்பு. அது உன் வாழ்கையை மேம்படுத்தும். அந்த தன்னம்பிக்கை வருவதற்கு மிக மிக கடினம் தான். அது முறையான பயிற்சியினால் மட்டுமே கிட்டும்.
உலகில் பலரின் வெற்றி இதில் தான் இருக்கின்றது. ஒன்றை எப்போதும் நினைவில் கொள். உன் சந்தோஷத்திற்கு நீ தான் பிரயாசை பட்டு பல நல்ல செயல்களை செய்யவேண்டும். உனக்காக யாராவது உழைத்துத் தருவார்கள் என்று எண்ணி ஏமாந்துவிடாதே. அப்படி ஒருவன் சொன்னால் அவனிடத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.
அப்படி எந்தவித பிரதி பலன் இல்லாமல் உனக்காக செய்ய முன்வருகி வருகிறார் என்றால் அவர் தான் உன் குரு. அவர் தான் தெய்வம்.அவர் தான் சந்தோஷம் மற்றுமெல்லாம். அதைத் தான் வாழ்கையில் அதிஷ்டம் என்று சொல்கிறார்கள். நாம் ஒரு செயலை பலனை எதிர்பார்த்து செய்வதற்கும் , தன்னம்பிக்கையுடன் பலனை எதிர்பார்க்காமல் செய்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றது.முன்னது செல்வத்தை கொடுத்தாலும் பின்னது பொருளுடன் திருப்தியும் மனநிறைவும் கிடைக்கும்.
தன்னம்பிக்கை கொள் !
துணிந்து செயல்படு !
வெற்றி உனதே !
தொடரும் ...
******************************
******************************
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்
வரவே ற்க்கப்படுகின்றன
மிகநன்று அல்லது
நன்று அல்லது
பரவாயில்லை அல்லது
இன்னும் தெளிவு தேவை
ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..
பத்திரிகை, வார இதழ் , மாத இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய
கீழ்க்கண்டவற்றில் தொடர்பு கொள்ளவும்.
+91 9865642333 அல்லது
e.mail id : gangadharan.kk2012@gmail.com