Pages

Showing posts with label தினமும் நம்மை ஏமாற்றும் சில நடிப்புச் சிகரங்கள் - AWARE OF CHEATING ACTORS - PUTHU KAVITHAI. Show all posts
Showing posts with label தினமும் நம்மை ஏமாற்றும் சில நடிப்புச் சிகரங்கள் - AWARE OF CHEATING ACTORS - PUTHU KAVITHAI. Show all posts

Saturday, 4 May 2013

தினமும் நம்மை ஏமாற்றும் சில நடிப்புச் சிகரங்கள் - AWARE OF CHEATING ACTORS - PUTHU KAVITHAI

தினமும் நம்மை ஏமாற்றும் 
சில நடிப்புச் சிகரங்கள் -



AWARE OF CHEATING ACTORS -



PUTHU KAVITHAI 



பசியின் கொடுமையை 
செல்வ சீமான்கள் பேசுகின்றனர்.
அவர்களுக்கு 'பசி' தெரியுமா? 

கல்வியின் பெருமையை 
கல்லூரி வாசல் தொடாதவர்கள் பேசுகின்றனர்.
அவர்களுக்கு 'கல்வியின் கஷ்டம்' தெரியுமா?

சத்தியம் தர்மத்தை 
நல்லவர் போர்வையில் அயோக்கியர்கள் பேசுகின்றனர்.
அவர்களுக்கு 'சத்தியம்' மானமென்று தெரியுமா? 

குடிபழக்கம் கூடாது என்பதை 
மறைந்து குடிப்பவர்கள பேசுகின்றனர்.
'குடி' பல குடியை கெடுத்துள்ளது தெரியுமா? 

புகை பழக்கம் கூடாது என்பதை 
தெரியாமல் புகை ஊதுபவர்கள் பேசுகின்றனர்.
'புகை' பலரை கல்லறைக்கு அனுப்புவது தெரியுமா?

ஆன்மிக மகான்களைப் பற்றி 
போலிச் சாமியார்கள் பேசுகின்றனர்.
'பரிசுத்தம்' என்னவென்று தெரியுமா? 

உடல் ஆரோக்கியம் பற்றி 
அடிக்கடி ஆஸ்பத்திரி செல்பவர்கள் பேசுகின்றனர்.
'ஆரோக்கியம்' என்னவென்று தெரியுமா?

மக்களின் கஷ்டத்தை 
குளு குளு அறையில் உள்ளவர்கள் பேசுகின்றனர்.
'கஷ்டம்' ஒரு துயரமென்று தெரியுமா?

வேலையின் பெருமையை 
சோம்பேறித் தலைவர்கள் பேசுகின்றனர்.
'வேலை' கடுமை அவர்களுக்குத் தெரியுமா?

உண்ணாவிரதம் பெருமையை 
தவறாமல் உண்பவர்கள் பேசுகின்றனர்.
அதன் அனுபவம் சொன்னால் புரியுமா?

கட்சி கொள்கைகளைப் பற்றி 
அடிக்கடி கட்சி தாவும் தலைவர்கள் பேசுகின்றனர்.
மக்கள் படும்பாடு தெரியுமா? 

விளையாட்டு பெருமை பற்றி 
விளையாட்டு தெரியாதவர்கள் பேசுகின்றனர்.
எப்படி திறமை வளர்ப்பது தெரியுமா?

பெண்களின் கொடுமையைப் பற்றி 
கொடுமை படுத்துவோர் பேசுகின்றனர்.
பெண்னின் மேன்மை தெரியுமா?

சொல்வாக்கு தவறாமை பற்றி 
வாக்கு தவறுபவர்கள் பேசுகின்றனர்.
வாக்கு சுத்தம் என்பது தெரியுமா?

விலை ஏற்றத்தைப் பற்றி 
பல தலைவர்கள் பேசுகின்றனர்.  
மக்கள் திண்டாடுவது தெரியுமா?

மக்கள் சேவை பற்றி 
மேடைகளில் பேசுகின்றனர்.
அவர்கள் 'நடிகர்கள்' என்று தெரிந்தால் சரி..

நன்றி 



வணக்கம்.