Pages

Showing posts with label பெரிய பெரிய ஆசைகள் - முதல் பரிசு பெற்ற கவிதை. Show all posts
Showing posts with label பெரிய பெரிய ஆசைகள் - முதல் பரிசு பெற்ற கவிதை. Show all posts

Tuesday, 24 July 2012

பெரிய பெரிய ஆசைகள் - முதல் பரிசு பெற்ற கவிதை



   பெரிய பெரிய ஆசைகள் - 
முதல் பரிசு பெற்ற கவிதை  




மண்ணில் வாழும் மனிதனும் சரி 
விண்ணில் இருக்கும் தேவனும் சரி 
முற்றிலும் துறந்த முனிவனும் சரி 
ஆசையில்லாமல் இருந்தனரா?

ஆசையில் அசை போட்டு 
கற்பனையில் மிதந்து 
காற்றினிலே கோட்டை கட்டுவார்கள் 
சோம்பேறிகள்.

ஆசையையே ருசி பார்த்து 
நிஜவாழ்வில் தின்று ஏப்பமிட்டு 
அதிர்ஷ்ட வாழ்க்கை வாழ்பவர்கள் 
உழைப்பாளிகள்.

பிறந்த குழந்தை முதல் 
இறக்கும் மனிதன் வரை 
பூமி பிறந்த காலம் முதல் 
அது அழியும் காலம் வரை 
எங்கும் எப்போதும் இருப்பது ஆசை! ஆசை!!

ஆடையில்லாதவன் அரை மனிதன் 
ஆசை இல்லாதவன் மனிதன் அல்ல.
ஆசை எளிதில் புகுவது 
ஆசை உலகத்தை ஆட்டி படைக்கிறதே .

நேற்று கற்கால மனிதன் 
இன்று கம்பியூட்டர் மனிதன் 
நாளை ........... மனிதன் !
எல்லாமே ஆசை! ஆசை !!

காந்திஜீக்கு அஹிம்சை மீது ஆசை 
சுதந்திர இந்தியா பிறந்தது 

புத்தனுக்கு ஆசையே துறக்க ஆசை 
மகனாக மாறினார் 

அன்னை தெரசாவுக்கு மக்கள் தொண்டின் மீது ஆசை 
ஏழைகள் வாழ்கின்றனர் 

ஷாஜஹானுக்கு காதல் மீது ஆசை 
உலக அதிசயம் உருவானது 

ஆம்ஸ்டிராங்க்கு விண்ணில் பறக்க ஆசை 
நிலவினில் நடந்தார் 

டென்சிங், ஹிலாரிக்கு வானத்தை தொட ஆசை 
இமயத்தின் முனையை அடைந்தார் 

இவர்களின் பெரிய பெரிய ஆசைகள் 
கால ஏட்டிலே நீங்கா இடம் பிடித்தன 

எனக்கும் பெரிய பெரிய ஆசைகள் உண்டு 
இந்த ஈராயிரத்தொன்றாம் நூற்றாண்டில் !

பாகிஸ்தான், இலங்கையை நண்பர்களாக பார்க்க ஆசை 
இந்து-முஸ்லிம்-சிங்களர் பரம்பரை எதிரிகள் அல்லவே 

தீவிரவாதிகளை நல்லவர்களாக திருத்த ஆசை 
பிறக்கும் அனைவரும் நல்லவர்கள் தானே.

சாதி, மத பிரிவினை சுவரை இடித்திட ஆசை 
எல்லா மனிதனில் இருப்பது ஓருயிர் தானே.

பாமரனை படித்தவனாக்க ஆசை 
அறிவு ஒரு பிரிவுக்கு மட்டும் சொந்தமல்லவே

பூமி செல்வங்களனைத்தும் பொது தானே.

ஏழ்மையை உலகை விட்டு  ஒழித்திட  ஆசை 


தனிக்குடித்தன  நாடுகள் நீக்கி கூட்டு குடும்ப உலகு காண ஆசை 
உலகம் என்பது ஒரே வீடல்லவா!

எயிட்ஸ் மருந்தினை கொடுக்க ஆசை 
முயன்றால் முடியாது ஏதுமில்லையே 

குறுகிய மனப்பான்மை இல்லா  பரந்த மனம் காண ஆசை 
மனிதன் ஒவ்வொருவரும் சுயநலவாதிகள் அல்லவே 

அடாவடித்தனம் , ஊழல் இல்லாத அரசியல் பார்க்க ஆசை 
எல்லோரும் சத்தியத்தை விரும்ம்புவது சகஜம் தானே!

இரு கைகொண்டு சுனாமியை தடுக்க ஆசை 
பூகம்பத்தை காலால் அழுத்தி நிறுத்திட ஆசை.
உடலால் வெள்ளத்தை கரை கட்ட  ஆசை.
உடல் உழைப்பால் பசி, பஞ்சம் நீக்கிட ஆசை.

கடைசியில் எனது பெரிய ஆசை 
என் வாழ்வில் இறைவனை காண ஆசை அவன் 
காற்றில் மறைந்ந்திருந்தாலும் சரி 
சுடராக ஒட்டி கொண்டிருந்தாலும் சரி 
நிலத்தில் புதைந்திருந்தாலும் சரி 
நீரில் கரைந்திருந்தாலும் சரி 
மேகத்தில் ஒளிந்திருந்தாலும் சரி 
எனது ஆசை அவனை தேடி அடைவதே.

***********************************************************************



இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

மிகநன்று  அல்லது 

நன்று  அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..