அனுபவ வாழ்கை பொன் வரிகள் -
மதுரை கங்காதரன்
முயற்ச்சிக்கும்போது பயம் வேண்டவே வேண்டாம்
ஒருவனின் முன்னேற்றத்துக்கு பெரும் தடையாய் இருப்பது 'பயம்' தான். புலி அடித்து இறந்தவர்களை காட்டிலும் கிலி பிடித்து இறந்தவர்களே அதிகம் பேர். புதிதாக முயச்சி செய்வது எதனால்? பொதுவாக வாழ்க்கையில் கஷ்டத்தை போக்கி , முன்னேற்றம் அடைவதற்கும் , வசதிகளை பெருக்குவதக்கும், நிம்மதி, மகிழ்ச்சிக்காகவும், திருப்திக்காகவும் மட்டுமே.
அப்படி முயற்சி செய்யும் போது , உனது முயற்ச்சியின் செயலைத்தாண்டி மற்றவர்கள் என்ன சொல்வார்களோ , என்ன நினைப்பார்களோ, என்ன பேசுவார்களோ? என்கிற பயம் தான் மேலோங்கி நிற்கும்! அதாவது
'ஒருவேளை தோற்றுவிட்டால் கேலி, கிண்டல், செய்வார்களோ?'
'அவமானப்படுத்தி விடுவார்களோ?'
'தோற்றுவிட்டால் எப்படி தலை வெளியே காட்டுவது '
'நம் மதிப்பு குறைத்து அல்லது கெட்டுவிடுமோ?'
மேற்கூறியதற்கு பயந்து முயச்சியை கைவிட்டு மீண்டும் வழக்கம் போல் கஷ்டத்திலேயே வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பார்கள். இதற்கு காரணம் அவர்கள் முயற்சி செய்யும் காரியத்தை தெளிவாக தெரிந்து கொள்ளாமல் இருப்பதே.
பயிற்சி வகுப்பில் ஒருநாள் 'பயம்' பற்றிய விவாதம் வந்தது. அதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவத்தை சொன்னேன். பயம் பற்றிய ஆராய்ச்சி செய்வதற்கு சிறைசாலை தூக்கு தண்டனை பெற்ற மூன்று கைதிகளை தேர்தேடுத்தனர் . அவர்களின் சம்மதத்துடன் விஷ பாம்பு கடித்து கொல்லப்போவதாக தெரிவித்தனர். அவர்களின் கண்களை கட்டினார்கள். மூன்று விஷ பாம்பு கொண்டு கொத்தச் செய்தனர். என்ன ஆச்சர்யம் முதல் இருவர் இறந்தனர். ஒருவர் உயிருடன் இருந்தார்.
"எப்படி நீங்கள் சாகவில்லை " அதிகாரி கேட்டார்.
அந்த கைதியோ "எப்படியும் சாகத்தான் போகிறோம். அப்படி இருக்கும் போது ஏன் பயப்படவேண்டும். என் கடைசி மூச்சு இருக்கும் வரை உயிர் வாழ்ந்தே தீருவேன் என்கிற தைரியத்தை மட்டும் நாள் இழக்கவில்லை " என்றார்.
அதிக்கரி சொன்னார்." உங்கள் மூவரையும் கொத்திய பாம்புகளுக்கு உண்மையில் விஷம் இல்லை. பாம்பு கொத்தினால் இறந்து விடுவோம் என்கிற கற்பனையினாலும் , பயத்தாலும் தான் உயிரை விட்டனர். உன் தன்னன்பிக்கை தான் உயிர் பிழைக்கவைத்தது. "
ஆகா பயம் கூடவே கூடாது. தன்னம்பிக்கையுடன் போராடு வெற்றி நிச்சயம்.
******************************************************
இன்னும் வரும் ....
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்
வரவே ற்க்கப்படுகின்றன
மிகநன்று அல்லது
நன்று அல்லது
பரவாயில்லை அல்லது
இன்னும் தெளிவு தேவை
ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..
பத்திரிகை, வார இதழ் , மாத இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய
கீழ்க்கண்டவற்றில் தொடர்பு கொள்ளவும்.
+91 9865642333 அல்லது
e.mail id : gangadharan.kk2012@gmail.com