Pages

Showing posts with label வசூல் ராணி - புதுக்கவிதை - BEAUTY QUEEN - A MODERN POEM BY MADURAI GANGADHARAN. Show all posts
Showing posts with label வசூல் ராணி - புதுக்கவிதை - BEAUTY QUEEN - A MODERN POEM BY MADURAI GANGADHARAN. Show all posts

Thursday, 6 September 2012

வசூல் ராணி - புதுக்கவிதை - BEAUTY QUEEN - A MODERN POEM BY MADURAI GANGADHARAN

 வசூல் ராணி 
புதுக்கவிதை 
மதுரை கங்காதரன் 



           BEAUTY QUEEN 
         A MODERN POEM
MADURAI GANGADHARAN

உன் கை நகங்களைப் 
பார்த்தேன்.

வானத்தில்
பத்து நட்சத்திரங்கள்
குறைந்தன.

உன் கால் நகங்களைப் 
பார்த்தேன்.

மேலும் 
பத்து நட்சத்திரங்கள் 
குறைந்தன.

உன் முகத்தைப் 
பார்த்தேன் 
வானத்தில் நிலவு இல்லை.

உன் குரலைக் 
கேட்டேன்.
குயிலைக் காணவில்லை.

உன் நடனத்தைப் 
பார்த்தேன் 
மயில் ஓடிவிட்டது.

உன் புன்னகைப் 
பார்த்தேன்.
மல்லிகை பூக்கள் 
உதிர்ந்தது.

உன் இதழைப் 
பார்த்தேன்.
ரோஜாவின் இதழ்கள் 
வாடிவிட்டன.

உன் அன்பை கண்டேன் 
என் இதயம் 
காணவில்லை!