Pages

Showing posts with label 24.6.18 தமிழகத்தில் தமிழ் முழக்கம் தமிழாய் இல்லை? மாமதுரைக் கவிஞர் பேரவை. Show all posts
Showing posts with label 24.6.18 தமிழகத்தில் தமிழ் முழக்கம் தமிழாய் இல்லை? மாமதுரைக் கவிஞர் பேரவை. Show all posts

Monday, 25 June 2018

24.6.18 தமிழகத்தில் தமிழ் முழக்கம் தமிழாய் இல்லை? மாமதுரைக் கவிஞர் பேரவை



24.6.18 (ஞாயிறு) அன்று மணிமேகலை மழலையர் பள்ளி, மதுரையில் 
நடைபெற்ற மாதாந்திரக் கவியரங்கம்.
மாமதுரைக் கவிஞர் பேரவை - மதுரை ..


          அன்று வாசித்த எனது கவிதை இதோ...
தமிழகத்தில் தமிழ் முழக்கம் தமிழாய் இல்லை? 
                          புதுக்கவிதை
                  மதுரை கங்காதரன் 

தமிழகத்தில் இல்லை தமிழ் முழக்கம்
தமிழனுக்கு இல்லை தமிழ் பழக்கம்
நடைமுறையில் வேண்டும் தமிழ் வழக்கம்
நன்றாய் வேண்டும் தமிழ் ஆக்கம்

யானக்கு வலிமை தும்பிக்கை
மனிதனுக்கு வலிமை நம்பிக்கை
தமிழனுக்கு வலிமை தமிழ்மொழி
தமிழகம் முழங்குகிறதா தமிழ்மொழி.

தமிழ்க்கடலில் விழுந்தால் நீந்துங்கள் 
தமிழ்க்கனியில் உருண்டால் உண்ணுங்கள்
தமிழ்வழி தெரிந்தால் செல்லுங்கள்
தமிழ்மொழி மறந்தால் படியுங்கள் 

உலக மாயை தமிழகத்தை வதைக்கிறது
ஊடக மாயை தமிழை நசுக்குகிறது
ஆங்கில மாயை தமிழைச் சிதைக்கிறது 
அறிவு மாயை தமிழர்களை வஞ்சிக்கிறது  

இல்லம் இருந்தால் விலாசத்திற்கு மதிப்பு
இல்லம் இழந்தால் விலாசமும் இழப்பு
தமிழ் வாழ்ந்தால் அடையாளம் காக்கும்
தமிழ் அழிந்தால் அடையாளமும் தொலையும்.

                                  மின்படங்கள் ....




































































  






















 


********************