Pages

Showing posts with label 25.8.19 எழுச்சிக் கவியரங்கம் -பிறமொழியைக் கலக்காதே தம்பி! மா.க.பே. Show all posts
Showing posts with label 25.8.19 எழுச்சிக் கவியரங்கம் -பிறமொழியைக் கலக்காதே தம்பி! மா.க.பே. Show all posts

Sunday, 25 August 2019

25.8.19 எழுச்சிக் கவியரங்கம் -பிறமொழியைக் கலக்காதே தம்பி! மா.க.பே



25.8.19 எழுச்சிக் கவியரங்கம் - 
பிறமொழியைக் கலக்காதே தம்பி !
 மாமதுரை கவிஞர் பேரவை - 
தொகுப்பு 



போட்டியில் வென்று விழாவில் கலந்துகொண்டு தங்கள் கவிதைகளைப் பாடிய அத்தனை கவிஞர்களுக்கும் சான்றிதழ், புத்தகம் மற்றும் கோப்பை வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள்.




விழாவில் எனது கவிதை ...
                       25.8.19 கவியரங்கம் தலைப்பு
பிறமொழியைக் கலக்காதே தம்பி தம்பி
பிழைபட்டுத் தமிழ்த்தவிக்கும் வெம்பி வெம்பி

நிறை குடமான நல்லத்தமிழில்
கறை படிந்தது கலப்புத்தமிழாலே 
தங்கத்தமிழை ஏற்பார் இல்லை    
தங்கமுலாம் தமிழை விரும்புகிறது     

பிறசொல் தமிழில் கலப்பு
பின்னாளில் தமிழே இழப்பு
ஆங்கிலம் கலப்பது தப்பு
அதுவே தமிழின் தவிப்பு

பண்பாடு மாற்றிக் கொண்டோம்
கலாச்சாரம்  மாற்றிக் கொண்டோம் 
நாகரீகம் மாற்றிக் கொண்டோம் 
தமிழையுமா மாற்றிக் கொள்ளணும்

பலவண்ண வானவில் அழகு
பிறமொழியுள்ள தமிழ் அழகா?
சேற்றில் செந்தாமரை அழகு
செந்தமிழில் கலப்பு அழகா?

காலில் ஏறிய பிறசொற்கள்
குரல்வளையை கவ்வி நிற்கிறது
தமிழின் கூக்குரல் கேட்கவில்லை
தமிழின் தவிப்பை கேட்பாரில்லை

ஓட்டுநர் இல்லாத வண்டி
ஒழுங்காய் ஊரு சேருமா?
ஒழுங்கு இல்லாதத் தமிழ்
எங்ஙனம் அழியாமல் வாழும்? 
*******************************

தேனீர் விருந்தும் மற்றும் மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
விழாவினை சிறப்பித்த அத்தனை தமிழ் உள்ளங்களுக்கும் மாமதுரைக் கவிஞர் பேரவை சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
  விழாவின் மின்படத் தொகுப்புக்கு 
கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும். 
******************8