Pages

Friday, 5 July 2013

3. YOUR SUCCESS DREAM BECOME TRUE ( IN ENGLISH) - உங்களுடைய வெற்றிக்கனவு நனவாகும் (தமிழ்)


HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN

3. YOUR SUCCESS DREAM BECOME TRUE 

* IF YOU WANT TO MAKE YOUR SUCCESS DREAM BECOME TRUE , THE FIRST THING YOU HAVE TO DO IS WAKE UP AND THEN TRY AND TRY UNTIL YOUR DREAM BECOME TRUE.


* For your each and every action you must have a compass. If you don't know where you are going, probably you will end up some where else.

* You must know your limit, but never stop trying to exceed them.

SUCCESS STEPS WILL CONTINUE NEXT...
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இனிமையான வாழ்க்கை வெற்றிப்படிகள் 
மதுரை கங்காதரன் 

3. உங்களுடைய வெற்றிக்கனவு நனவாகும்  


* நீங்கள் உங்கள் வெற்றியின் கனவுகளை நிறைவேற்றிக்கொள்ள விரும்புவீர்களானால் , முதலில் நீங்கள் செய்யவேண்டியது 'விழித்துக் கொள்ளுங்கள்' . பிறகு உங்கள் கனவு நிறைவேறும் வரை தொடர்ந்து முயற்சி செய்து கொண் டே இருங்கள்.

* உங்களுடைய ஒவ்வொரு செயலை செய்யும் போது கட்டாயம் உங்களிடத்தில் ஒரு  'திசைகாட்டி'  இருக்க வேண்டும். நீங்கள் செல்லும் திசை தெரியாமல் இருந்தால் வேறு எங்கேயாவது முட்டிக் கொண்டு நிற்க வேண்டிய நிலைமை வந்துவிடும்.


* உங்களுடைய திறமையின் அளவை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள். ஆனால் அதற்கு மேல் செல்லும் முயற்சியை எப்போதும் நிறுத்திவிடாதீர்கள்.


இன்னும் வெற்றிப்படிகள் உயரும்..

(((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((


2. PROBLEMS AND SOLUTIONS (IN ENGLISH) - பிரச்சனைகளும் அதன் தீர்வுகளும் (தமிழ்)

HAVE A NICE LIFE STEPS

MADURAI GANGADHARAN

2. PROBLEMS AND SOLUTIONS 


The technology and competition in the world are increasing simultaneously problems in the world will increase. Therefore you should increase your capacity for dealing with problems. For that you must have the courage to face all the problem. One thing you must remember that 'All the problems may be solved by you' unless you must have self confident and always chanting the words 'YES I CAN'.  


In our daily life we have to face problems raising from house side, working place side, self problem and changing of surrounding . But what ever may be. YOU CAN solve all. 
BE BOLD..
BE CONFIDENT..

SUCCESS STEPS WILL CONTINUE NEXT...

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


இனிமையான வாழ்க்கை வெற்றிப்படிகள் 
மதுரை கங்காதரன் 
2. பிரச்சனைகளும் அதன் தீர்வுகளும் (தமிழ்)



உலக தொழில்நுட்பம்  மற்றும் போட்டிகள் வளர வளர அதே நேரத்தில்  உலகில் பிரச்சினைகளும் அதிகரித்து வருகின்றன. எனவே நீங்கள் பிரச்சினைகளை கையாள்வதில் உங்கள் திறனை அதிகரித்துக் கொள்ள வேண்டும். உங்களுக்குள் அனைத்து பிரச்சனையும் எதிர்கொள்ள தைரியம் வர வேண்டும். சுய நம்பிக்கை மற்றும் 'ஆம், என்னால் முடியும்' என்கிற சொற்களை எப்போதும் ஜெபிப்பதன் மூலம்  அனைத்து பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்று எப்போதும் உங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.


நம் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளவேண்டிய பிரச்சினைகள் எவைகளென்றால் , வீட்டு , வேலை சம்பந்தமாக , சொந்த பிரச்சனைகள் மற்றும் மாறும் சூழ்நிலைகளாகும். எந்த பிரச்சனைகள் இருந்தால் என்ன? உங்களால் தீர்க்க முடியும்.

பலம் கொள் !

நம்பிக்கை கொள் !

இன்னும் வெற்றிப்படிகள் உயரும்..

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Thursday, 4 July 2013

1. A WAY TO SUCCEED IN LIFE (IN ENGLISH) - 1. வாழ்கையில் வெற்றிக்கான வழி (IN TAMIL)

HAVE A NICE LIFE STEPS (IN ENGLISH)
MADURAI GANGADHARAN

1. A WAY TO SUCCEED IN LIFE 

In your life, you don't wait until everything become right. One thing always keep in your mind that life will never be perfect. Also life will not be a 'just like that' or 'take it easy' type. There will always be so many hurdles, challenges, may be less than your expectation and also less than perfect conditions. 

So... what ???

Don't worry about that ! Don't delay ! hurry! Set an Aim ! you get- started new with each and every step you put forward, you face stronger and stronger, develop more and more skill, get more and more self confident and then automatically you will get more and more success.   


For Example :

All successful person in the world history were not succeeded just like that. They had taken maximum effort in their daily life. They won't get tired in their each and every activities. Always their thinking and actions were towards their vision and mission only. They won't bother about their failures. They won't get hurt also. that why finally they had achieved wonderful victory.

Why don't you try it now? FOR YOUR SUCCESSFUL LIFE !



-- SUCCESS STEPS WILL CONTINUE NEXT..
****************************************************

  இனிமையான வாழ்க்கை வெற்றிப்படிகள்  

மதுரை கங்காதரன் 


வெற்றி வாழ்க்கைக்கான வழி

எல்லாமே சரியாகும் வரையில் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் காத்திருக்க வேண்டாம். ஒன்றை மட்டும் எப்போதும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள் அதாவது 'வாழ்க்கை ஒருபோதும் நாம் நினைத்த மாதிரி கனகச்சிதமாக இருப்பதில்லை ' . மேலும் வாழ்க்கை என்பது 'அவ்வளவு தானே' என்றோ அல்லது 'எல்லாமே எளிதாக எடுத்துக்கொள்கின்ற' ரகம் அல்ல.  வாழ்க்கை என்பது எப்போதும் பல தடைகள் , சவால்கள் , குறைவான  எதிர்பார்ப்புகள் மற்றும் சரியான நிலைமைகளை  விடக் குறைவானதாக இருக்கலாம். .


இருந்தாலும்  ... என்ன ?

அதை பற்றி கவலை படாதே! தாமதிக்க வேண்டாம்! சீக்கிரம்! ஒரு குறிக்கோள் கொள்! நீங்கள் முன் வைக்கும்  ஒவ்வொரு அடியிலும் புதியதாய் தொடங்குவதற்கு, நீங்கள் வாழ்க்கையினை அதி பலமாக எதிர்கொண்டு, இன்னும் திறனை வளர்த்துக்கொண்டு  , அபரிவிதமான தன்னம்பிக்கையை பெற்றுவிட்டால்... பிறகென்ன!  தானாகவே நீங்கள் மேலும் மேலும் உங்கள் வாழ்கையில் வெற்றியைப் பெறுவீர்கள்.  

உதாரணமாக :


உலக வரலாற்றில் வெற்றி பெற்ற மனிதர்கள் அனைவரும் மிக எளிதாக வெற்றி பெற்றதில்லை. அவர்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் அதிகபட்ச முயற்சியை எடுத்து வந்துள்ளார்கள்.அவர்களுடைய ஒவ்வொரு நடவடிக்கைகளில் சோர்வு ஆனதே கிடையாது . எப்போதும் அவர்களுடைய  சிந்தனை மற்றும் நடவடிக்கைகளின் கவனம்  முழுவதும் அவர்களின் குறிக்கோளிலும், தொலைநோக்குப் பார்வையிலும் மட்டுமே இருந்தன. அவர்கள் தோல்விகளை பற்றி கவலைப்படவில்லை. அதனால் அவர்கள் மனதில் காயப்பட்டதே கிடையாது. ஆகையால் தான் இறுதியில் அவர்கள் அற்புதமான வெற்றிகளை பெற்றார்கள் .


உங்கள் வாழ்கையில் வெற்றி பெற இதேபோல் ஏன் இப்போது முதல் நீங்கள் முயற்சி செய்ய கூடாது?


***********************************************************************************

வெற்றிப்படிகள் உயரும்...


Friday, 7 June 2013

இறைவனின் மனோபலம் பெறும் வழி - A WAY TO GET GOD'S STRENGTH - PUTHUK KAVITHAI

இறைவனின் மனோபலம் பெறும் வழி


A WAY TO GET GOD'S STRENGTH

PUTHUK KAVITHAI
புதுக்கவிதை 



தன்னம்பிக்கை இருந்தால்
இறைவனின் பாதி பலம் நீ
பெறுவாய்.

விடாமுயற்சியும் இருந்தால்
இறைவனின் முழு பலத்தையும் நீ 
பெறுவாய்.

கிடைக்கும் என்று நம்பு 
முடியும் என்று நம்பு 
வரும் என்று நம்பு.

கிடைப்பதற்கு விடா முயற்சி செய்.
முடிப்பதற்கு விடா முயற்சி செய் 
வருவதற்கு விடா முயற்சி செய்.



துணிவு கொள் 
பயத்தை தவிர் 
விழிப்புடன் செயல்பாடு.

உனக்கு இனிமேல் 
வெற்றி மேல் 
வெற்றி தான்.



நன்றி , வணக்கம்..

Sunday, 2 June 2013

பேராசை மனிதர்களின் எண்ணங்கள் LUST MENTALITY PEOPLE'S THOUGHTS

பேராசை மனிதர்களின் எண்ணங்கள் 
                   
LUST MENTALITY PEOPLE'S THOUGHTS
              PUTHUK KAVITHAI
                  புதுக்கவிதை 

      

பேராசை மனிதர்கள்
அழிவுப் பாதையில் செல்பவர்கள்.
பிறரின் உணர்வை மதியாதவர்கள்
முற்றிலும் சுயநலவாதிகள்.

இவர்கள் ஆசைபடுவது
மலையை கரைக்க வேண்டும்.
கடல் அலைகளை நிறுத்தவேண்டும்
மனிதர்களை இஷ்டப்படி ஆட்டுவிக்கவேண்டும்..

தேர்வு எழுதாமல்
தேர்ச்சி பெற எண்ணுவார்கள்.
பாடங்களை படிக்காமல்
பட்டம் பெற துடிப்பவர்கள்.

வியர்வை சிந்தி உழைக்காமல்
பணம் சம்பாதிக்க விரும்புவர்கள்.
தங்களுக்காக ஆகாயத்தில்
மாளிகைகளை கட்ட நினைப்பவர்கள்.

விதைகளை விதைக்காமல்
அறுவடை செய்ய ஆசைபடுபவர்கள்.
தனக்கெதிராக போட்டியில்லாமல்
பதவியை பிடிக்க எண்ணுபவர்கள்.

தீய செயல்களை மறைத்து
தூய்மையாக காட்ட விரும்புபவர்கள்.
எதுவும் சாப்பிடாமல்
பசியை போக்க நினைப்பவர்கள்.



பணம் செலவழிக்காமல்
காரியம் சாதிக்க நினைப்பவர்கள்.
வாங்கிய கடனை செலுத்தாமல்
ஏமாற்ற நினைப்பவர்கள்.

சேவைகளை செய்யாமல்
பேரை சம்பாதிக்க எண்ணுபவர்கள்.
நினைத்தது அனைத்தும்
உடன் நடக்க வேண்டுபவர்கள்.

மக்கள் வரிப்பணத்தில்
ஆடம்பரமாக வாழ துடிப்பவர்கள்.
வரிகளை செலுத்தாமல் ஏமாற்றி
கறுப்புப்பணம் பதுக்க விரும்புபவர்கள்.

ஆசை இல்லாதவன் மனிதப் பிறவி அல்லன் 
பேராசை கொண்டவனோ மனிதனே அல்லன்.
ஆசை ஆக்கத்திற்கு பயன்படுத்துபவன் மாமனிதன்
ஆசை அழிவிற்கு கொண்டு செல்பவன் நீச மனிதன்.



நன்றி, வணக்கம்.