Saturday, 28 July 2012

ஆழ்நிலை தியானம் - சர்வரோக நிவாரணி மற்றும் வாழ்கையின் வெற்றிக்கு


ஆழ்நிலை தியானம் - சர்வரோக நிவாரணி மற்றும் வாழ்கையின் வெற்றிக்கு ஒரு வழி  

( எதனால் அடையும் பலன்கள் : மனப்பக்குவம் , எதையுமே சாதிக்கும் துணிவு , பொறுமை, வசீகரம் செய்யும் தேக பிரகாசம்  ,  ஆழ்ந்து சிந்தித்து உறுதியோடு  முடிவெடுக்கும் குணம், கோபத்தை கட்டுபடுத்துதல் மற்றும் உடல் நலத்தை சீராக வைத்துகொள்ளுதல்)  தியானம் என்றால் அது ஆசை துறப்பதற்கும், மிகுந்த கட்டுப்பாட்டுக்கும், மகான்களுக்கும், ஞானிகளுக்கும், பெரியவர்களுக்கும், ஆன்மீகவாதிகளுக்கும் மற்றும் சொர்கத்தை அடைவதற்கும் போன்ற  பலப்பல எண்ணங்கள், கற்பனைகள் மற்றும் சிந்தனைகள் மனதில் எழலாம் . இதற்கு  வலுவான காரணம் என்னவென்றால்  'தியானம்' நடத்தும் வகுப்புகளாகட்டும், நடத்த்துபவர்கள் ஆகட்டும், தியானத்தை கடைபிடித்தவர்களின் புகை படங்களாகட்டும் அவற்றையெல்லாம்  எண்ணி பார்கிறபோது  நமது அன்றாட வாழ்க்கைக்கும், குடும்ப கடமைகளுக்கும், வேலைகள் மற்றும் வியாபாரத்திர்ககும் சம்பந்தமே இல்லாதுபோல் ஒரு தோற்றத்தை உருவாக்குகிறது. அதனால்   பலர் இதை ஒதுக்குவிடுகிறார்கள் அல்லது ஒதுக்கி வருகிறார்கள் அல்லது பின்பற்ற முடியாமல் திணறுகிறார்கள், ஒரு சிலர் அரைகுறை மனத்துடன் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு தியானத்தின் பலனை முழுவதும் பெற முடியாமல் திண்டாடுகிறார்கள். ஒரு சிலர் இதை  செய்வதால் சோம்பேறித்தனம் உருவாகும் என்று தவறாக எண்ணி வருகிறார்கள். இன்னும் சிலர் நேரவிரையம் என்று அறவே தவிர்க்கிறார்கள். 

உண்மையில் பல துறைகளில், பல கலைகளில் அதாவது விளையாட்டு , கல்வி,  அரசியல் , போர்க்களம் , நீதித்துறை, கணினி , அறிவியல் ,மருத்துவம் போன்ற துறைகளில் வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கையை நாம் புரட்டிப்பர்ர்தோமானால் நமக்கு மிகப்பெரிய உண்மை தெரிய வரும். அதாவது அவர்களின் இந்த வளர்ச்சிக்கு தியானம் எவ்வளவு தூரம் உதவியாக இருந்திருக்கிறது என்று தெரியவரும் . இவைகள் வெளிவராததற்கு காரணம் தியானத்தைவிட பெரியளவில் அவர்களின் துறையில் புகழ் பெற்றதால் அதன் மகிமை வெளிவரவில்லை.உதாரணமாக செஸ் விளையாட்டில் உலகின் நம்பர் 1 ஆகா இருந்துவரும் திரு விஸ்வநாத் ஆனந்த் , கிரிக்கெட் மாஸ்டர் திரு டெண்டுல்கர், பல துறை புகழ் பெற்றவர், பண்பாளர் திரு அப்துல் கலாம், இசைஞானி இளையராஜா , ஏ .ஆர்.ரகுமான், மகாத்மா, சுவாமி விவேகானந்தர் போன்றவர்கள் வாழ்கையில் இந்த தியானம் செய்வதற்கு  சிறிது நேரம் ஒதுக்கி தினமும் தவறாமல்  கடைபிடித்ததனால் தான்  பெரும் பலனை அடைந்தனர் என்பதை அவர்களே நன்கு அறிவர்.


ஏனென்றால் அவரவர் துறைகளில் அன்றாடம் எதிர்கொள்ளும் அநேக சவால்களையும், பிரச்சனைகளையும் , புதிகளும், சிக்கல்களும்  இந்த தியானத்தின் மூலமாக மற்றவர்களுக்கு  பாதிப்பு ஏற்ப்படுத்தாத வகையில்  பல தீர்வுகளை தந்திருக்கின்றது .அந்த தீர்வுகளின் மூலம் அவர்கள் எல்லோரும் நம் மனதில் நீங்கா  இடம் பெற்றுக்கின்றதொடு மட்டுமில்லாமல், அவர்கள் பலருக்கு முன்மாதிரியாகவும் திகழ்கிறார்கள். தியானம் மணிக்கணக்கில் செய்யத் தேவையில்லை. ஆரம்பத்தில் சில நிமிடங்களே போதுமானது.


இப்படியிருக்க யாராவது ஒருவனிடத்தில் 'தியானம்' செய்கிறீர்களா ? என்று கேட்டால் உடனே "இதெல்லாம் நமக்குத் தேவையில்லாதது , ஒத்து வராதாது கூட " என்ற பதில் தான் வரும்.மேலும் "நமக்கேன் இந்த பலப்பரீட்சை மற்றும் விஷபரீட்சை " என்று பேச்சை மாற்றி தேவைல்லாத பொழுதுபோக்கு பேச்சில் தங்களை அர்பணித்து அலசிக்கொண்டிருப்பார்கள். இது  தான் யதார்த்த நடைமுறையில் இருப்பது. 


ஒருவன் வாழ்க்கையில் நல்ல வழியில் சென்றாலும், நல்லதை நினைத்தாலும் அதை ஏளனமாக பேசி, கேவலப்படுத்தி, நக்கல், நையாண்டி இன்னும் ஏதேதோ பண்ணி அந்த நல்ல செயலை செய்யவிடாமல் தடுப்பவர்கள் நம்மைச் சுற்றி நிறைய இருக்கத்தான் செய்கிறார்கள். ஒன்று மட்டும் உறுதியாய் இருக்கவேண்டும். வாழ்க்கையின் வெற்றி நம்மிடத்தில் தான் இருக்கின்றது.அதை அடைவதற்கு பல வழிகளில் முயற்சி செய்யவேண்டும். அந்த முயற்ச்சியை தாக்கும் எந்த தடையையும் நாம் தகர்த்தெறிய வேண்டும்.அந்த வல்லமை இந்த தியானம் உங்களுக்கு கொடுக்கும்.


இன்றைய காலகட்டத்தில் தியானத்தை பற்றி கேலி  பேசியவர்களெல்லாம் தியானத்தை பற்றிய விழிப்புணர்வு வந்துவிட்டது என்றே சொல்லல்லாம்.ஏனென்றால் அவர்கள் மட்டும்  தியானத்தை செய்வதோடு மட்டுமில்லாமல் குடும்ப உறுப்பினர்களையும் அதில் ஈடுபடுத்தும் அளவிற்கு தியானத்தின் வலிமையை இப்போது உணர்ந்திதிருக்கின்றனர். ஏனென்றால் அவர்களுக்கு தங்களின் உடல் மற்றும் மனநலம் பற்றிய அக்கறை அதிகமாகியுள்ளது. அதற்கு முழு முதற்காரணம் சிறு வயதிலேயே சிலருக்கு இரத்த கொதிப்பு, சர்க்கரை வியாதி, அல்சர் எனும் வயிற்று  வலி, மன உளைச்சல், மன பாரம் போன்ற பாதிப்புகள் எதனால் வருகின்றது என்றும அதை எவ்வாறு தவிர்ப்பது என்றும் நன்றாகவே தெரியத் துவங்கியிருக்கின்றது. அதனனல் தான் இலவசமாய் தியானம் கற்று கொடுத்தும்  வராத கூட்டம்  இப்போது பணம் கொடுத்து கற்றுகொள்ளும்  ஆர்வம் பிறந்திருக்கின்றது. 


உடல் நலத்திற்காக  தினமும் சிறிது நேரமாவது ஆசனங்கள், யோகா , தியானம், மூச்சு பயிற்சி, நடை பயிற்சி, உடற்பயிற்சி , விளையாட்டு போன்றவற்றில் அதிக கவனம் செலுத்திவருகின்றனர்.''தியானம் " நமக்கு சரிவராது, சுத்தபட்டுவராது, கை கூடவே கூடாது என்ற எண்ண முடையவர்களெல்லாம் தியானத்தில் ஈடுபட்டு பல அரிய  பெரிய சாதனைகள் படைத்ததோடு அவர்களும் ஆர்வமாக மற்றவைகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.இதுநாள் வரை தியானம் செய்வதற்கு  எளிதாய் இருந்தாலும் அதை தினமும்  பயிற்சி செய்வது என்பது மிகவும் கடினம் என்று நினைத்தவர்கள் இப்போது எளிமையான பயிற்சி முறையினை பின்பற்றி அதன் பலனை அடைந்து வருகின்றனர்.


தியானம் செய்வதன  மூலம் கீழ்க்கண்ட பலனை பெறமுடியும்.
1. இரத்தம் சுத்தமாகும் 
2. ஜீரண உறுப்புகள் அனைத்தும் சரியானபடி வேலை செய்யும்.
3. சக்திகள் நல்ல முறையில் சேமிக்கப்படும் 
4. மனம் ஒரு நிலை பெரும் 
5. இரத்த அழுத்தம் சீராக இருக்கும் 
6. சர்க்கரை சக்தியாக மாற்றி அதன் அளவை சீராக வைத்துக்கொள்ளும் 
7. அமைதியான தூக்கம் 
8. உடல் புத்துணர்ச்சி 
9. தெளிவான சிந்தனைகள் 
10. எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை 
11. உடல் பலம் அதிகரிக்கும் 
12. கோபம் , பொறாமை நீக்கி பொறுமை கொடுக்கும் இன்னும் பல..


இவைகளெல்லாம் சரி , இதை  எப்படி தினமும் பயிற்சி செய்வது? எப்போதுமே பரபரவென்று வேலை செய்து வரும் நமக்கு ஒரே இடத்தில் கண்களை மூடி உட்கார்ந்து கொண்டு எதோ சக்தி கொடுக்கும்  ஒன்றை திரும்ப திரும்ப உச்சரிப்பது சாத்தியமாகுமா? என்பதற்கு பதில் இதோ.


சில சமயங்களில் விலங்கில் சரி, மனிதரில் சரி பரபரப்பான வேளைகளில்  அதிக ஆற்றலோடு வேலை செய்துகொண்டிருக்கும் போது திடீரென்று அனைத்தையும் நிறுத்தி சற்று கண்களை மூடிக்கொண்டு தங்களை சுற்றிலும்  என்ன நடக்கிறது என்பதை அமைதியாகவும்  , நிதானமாகவும் யோசிப்பார்கள்  பார்பதற்கு நமக்கு அவர்கள் ஓய்வு எடுப்பதுபோல் தோன்றும்.. ஆனால் அவர்களின் மனதில்   வேலையை அல்லது பிரச்சனைகளை  எந்த வகையில்  பாதுகாப்புடன் அதே  சமயத்தில் எப்படி  வெற்றி கொள்வது என்பதை சிறந்த திட்டத்தை தீட்டவே  அந்த ஓய்வு தேவைபடுகிறது. புலி பதுங்குவது பாய்வதக்கும், ஆடு அமைதியாக பின்னோக்கி நகருவது அது பாய்வதற்கும் என்பதை எப்போது நாம் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வண்டும்.

தியானம் பயிற்சி செய்யும் முறை:
தியான வகுப்பில் பயிற்சியளிக்கும்போது அனைவரையும் சௌகரியமாக அமரவேண்டும்.


உடலை இறுக்கமாக இல்லாமல் லேசாக வைத்துக்கொள்ள வேண்டும்.


முதலில் கண்களை நன்றாக மூடிக்கொண்டு மூச்சை மெதுவாக இழுத்து பிறகு மெதுவாக மூச்சை வெளியே விடவேண்டும்.


இப்படியே மூன்று முறை செய்ய வேண்டும்.


பிறகு ஒரு சக்தி மந்திரத்தை மெதுவாக சொல்ல வேண்டும்.அந்த மந்திரம் அவரவர்களுக்கு பிடித்தமானதாக இருக்கலாம். அந்த மந்திரத்தின் உச்சரிப்பு வாயை திறந்து மூடுமாறு இருக்கவேண்டும். அப்போது தான் சுத்தமான  காற்று  உள்ளேசென்று உடலை சாந்தநிலையில் வைக்க உதவும் . ( ஓம் அல்லது அல்லாஹோ அல்லாஹ் அல்லது ஏசு கிற்ஸ்துவே எங்களை இரட்சியுங்கள்...போன்றவை)   


அதையே 15 அல்லது 20 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும்.


பிறகு மெல்ல கண்களை திறந்து மீண்டும் மூச்சு மெதுவாக இழுத்து மெதுவாகவிட்ட பிறகு தியானத்தை முடித்துக்கொள்ள  வேண்டும்.உண்மையில் தியானம் செய்யும் போது  நமது மனநிலை எப்படி இருக்கும்?:

சிறு ஒளியுள்ள இருட்டறையிலோ அல்லது நல்ல காற்றோட்டமுள்ள அறையிலோ கண்களை மூடி உட்காரும்போது நமது தலையை சுற்றி , கண்களை சுற்றி பலப்பல படங்கள் ஓடும். கற்பனை செய்யாத பல எண்ணங்கள் தெரியும். சற்று நேரத்திற்கு முன் நடந்த நிகழ்ச்சிகள் , மறக்க முடியாத எண்ணங்கள் , சொந்த கதை, சோக  கதை, வேலை, குடும்பம், சொந்தம், அன்னியம், தெரிந்த முகம், தெரியாத முகம் என்று பலவித உணர்வுகளை நாம் உணருவோம். இப்படி இருக்கும்போது எப்படி நாம் நமது மனதை ஒருநிலை படுத்தி கண்களை மூடிக்கொண்டு  ஒரே மந்திரத்தை ஒரே இடத்தில் உட்கார்து கொண்டு பயிற்சி செய்வது. அப்படியே உட்கார்ந்தாலும் இரண்டு நிமிடங்களுக்கு மேல் நம்மால் செய்ய இயலாது. அப்படித்தானே. அதற்கு கீழ் காணும் பயிற்சி மிகவும் உதவி செய்கிறது. 

தியானம் செய்ய நம்மை தயார் படுத்திகொள்ளுதல் :

தியானம் செய்வதற்கு முன், நமது எண்ணத்தை , செயலை ஒருமுகப்படுத்த வேண்டும். அதற்கு  சுத்தமான ஒரு வெள்ளை பேப்பரில் முதலில் சற்று பெரிதான ஒரு புள்ளியை வைத்து அந்த புள்ளியில் மட்டும் மனதை ஒருமுகமாக செலுத்தி பர்ர்த்துக்கொண்டேயிருக்க வேண்டும். அப்படியே தினமும் 10 முதல் 20 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும். தேவைபட்டால் கண்களை சிமிட்டலாம்.


பிறகு புள்ளியை சற்று சிறியதாக்கி பயிற்ச்சியை தொடரவேண்டும்.


அதன் பிறகு அவ்வப்போது கண்களை மூடிக்கொண்டும் திறந்து கொண்டும் பயிற்சி செய்ய வேண்டும்.


கடைசியாக முழுவதும் கண்களை மூடுகொண்டு பயிற்சி செய்ய வேண்டும்.இப்படியே ஒருமாத காலம் பயிற்சி செய்ய வேண்டும்.


இப்போது நீங்கள் தியானம் செய்வதற்கு முழுமையாக தயாராகிவிட்டீர்கள். இனி மேற்கூரியபடி தியான பயிற்சி செய்யும் முறையினை பின் பற்ற வேண்டும்.    

       
இதை  தினமும் தவறாது செய்வீர், வாழ்க்கையினை வெற்றி கொள்வீர்.
   

*********************************************************************************
.   .  .   .                       


இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

மிகநன்று  அல்லது 

நன்று  அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

5 comments: