8.12.13 அன்று மதுரையில் 'மாமதுரை கவிஞர் பேரவை' நடத்திய பாரதியார் கவிதைப் போட்டியில் நான் வாசித்த புதுக்கவிதை
மதுரை கங்காதரன்
திராவிடக் குடும்பத்தின் முதன்மை மொழி தமிழ்
எளிமையான ஏராளமான கலைச் சொற்கள் கொண்ட மொழி தமிழ்
எட்டு கோடி மக்கள் பேசும் சிறப்பு மிக்க மொழி தமிழ்
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய தொன்மை மொழி தமிழ்
கல்வெட்டு பனை ஓலைகளில் எழுத்துகள் ஆதாரமுள்ள மொழி தமிழ்
இலங்கை சிங்கபூர் மலேசியாவில் பரவி இருக்கும் மொழி தமிழ்
வீரமா முனிவர் பெரியாரால் எழுத்துகளில் சீர்திருத்தம் கண்ட மொழி தமிழ்
அகத்தியரால் இலக்கணம் வரையறுக்கப்பட்ட செம்மை மொழி தமிழ்
இன்று அந்நிய மொழியில் மருத்துவம் பொறியியல் கணினி படிப்பு பயில்கிறாய்
அதில் தேர்ச்சி பெற்று வெளிநாடு சென்று புகழும் அடைகிறாய்
எம்மொழி பேசினாலும் எந்நாட்டில் இருந்தாலும் உன்னை ஏற்றிவிட்ட ஏணி தமிழ்
பெற்ற தாய்க்குச் சமமாக மற்றவர்கள் அன்புகாட்ட முடியுமா?
தமிழ் மொழிக்குச் சமமாக மற்ற மொழிகளில் உணர்வுகளைத் தர முடியுமா?
திருக்குறளும், பாரதி கவிதைகளும் எழுத்துகளாய் கிடைத்தது தமிழுக்குப் பெருமை
சிலப்பதிகாரம் கம்பராமாயணம் எழுத்து விதைகள் தமிழுக்கு மரமாய் நிற்கின்றன
அந்த தமிழ் எழுத்துகள் உலக நல்வாழ்வுக்கு வழிகாட்டும் தடங்கள்
விண்கலம் ஏவி சாதித்தவரும் ஆஸ்கார் நாயகனும் தமிழர்களே
கணினி வலைதளத்தில் தமிழ் எழுத்துகள் பலவடிவில் உள்ளவரை தமிழ் அழியாது
உன்னை அடையாளம் காட்ட தமிழ் மொழியில் ஒன்றையாவது படைத்து விடு
நாம் சிறந்து வாழ தமிழ் வாழ எல்லாமே தமிழ் எழுத்துகளில் எழுது !
வாழ்க தமிழ் !
வளர்க தமிழ் !!
நன்றி , வணக்கம் !
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ ^^^^^^^^^^^^^^^^^^^^^^
No comments:
Post a Comment