Pages

Monday 24 February 2014

வாழ்விக்க வந்த வள்ளுவம் புதுக்கவிதை (வெளி வராத புதுமை கருத்துக்கள்)

21.2.14 முதல் 23.2.14 வரை உலகத் திருக்குறள் பேரவை - மதுரை மாவட்டம்                               நடத்திய திருக்குறட்  திருவிழா நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக  


           'திருக்குறள் கவியரங்கம்'  நிகழ்ச்சியில் நான் வாசித்த கவிதை  

                    இடம் : திருவள்ளுவர் அரங்கம், காலேஜ் அவுசு, மதுரை. 
                    நேரம் : மாலை 4.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை  


                                     தலைப்பு : வாழ்விக்க வந்த வள்ளுவம் 

                         புதுக்கவிதை (வெளி வராத புதுமை கருத்துக்கள்) 
                                                  மதுரை கங்காதரன் 


வாழ்கையில் எல்லாமே 'அடிபட்டு' அறிய முடியுமா? 
சில கேட்டு அறியலாம் ! சிலர் சொல்லி அறியலாம் ! 
ஆனாலும் பல.... திருக்குறள் படித்து அறியலாம் என்பதே மெய் ! 

வள்ளுவரின் தேனினும் இனிய 'குறள்கள்'  
அகவாழ்க்கை மகிழ்ச்சியின் திறவுகோல் ! 
புறவாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டி ! 
ஆரோக்கிய மனித வாழ்க்கைக்கு மருந்து ! 

அதிகாரத்தின் பொருள் 'சட்டம்' ! 
ஒவ்வொரு 'அதிகாரம்' திருக்குறளில் பத்து பத்து பாடல்கள் 
யாவுமே முறையான வாழ்க்கை வாழும் சட்டங்கள் ! 


பத்து பத்து குறள்களாக படைத்ததன் இரகசியம் இதோ !  
மனிதனின் கருவறை வாழ்க்கை பத்து மாதங்கள் !

குறளின் படி செயல்களைச் செய்ய வேண்டும் இரு கை பத்து விரல்களால் !
குறளின் படி நடக்கவேண்டும் இரு கால் பத்து விரல்களால் !

குறள்கள் ! பல பரிமாண மனிதஎண்ணங்களின் பிரதிபலிப்புகள்  
அதைப் படித்தால் வாழ்க்கைச் செல்லும்  திசை புரியுமே ! 
வாழ்கையை வருமுன் காக்குமே  விழிப்புணர்வு தந்து !

எளிய அதிகாரத் தலைப்புக்கள் ! தருமே வாழ்கையின் விளக்கம் ! 
மொத்த பாடல்கள் 1330 ! அந்த எண் சொல்லுமே வாழ்கையின் தத்துவம் !

மனித வாழ்க்கை ஆரம்பிப்பதை  குறிப்பது ஒன்று ! (1)
வாழ்கையில் கழிந்த, நிகழும், வரும் என முக்காலத்தையும் சொல்வது மூன்று (3) 

பிள்ளை, இளமை முதுமை என முப்பருவங்களில் 
அறம்,பொருள், இன்பத்தை பேணுவது மூன்று (3)
முடிவில் முக்தி பெற்று உலகத்தை விட்டு மறைவதைக் 
உணர்த்துவது பூஜ்ஜியம் ! (0)  

இதுவே 1330 ன் வாழ்க்கை உணர்த்தும் மகத்துவம் !


குறளின் தனிச் சிறப்பு ! வாழ்கையின் முக்கியத்துவத்திற்கேற்ப அதிகாரங்கள் அதிகம் குறைய படைத்திருப்பது  

பல குறள்களில் உள்ளது வாழ்கையின் எச்சரிக்கை ! 
இன்ன செயல் செய்தால் பின்னால் இது விளையும் என்று ! 

வள்ளுவருக்கு கூடு விட்டு கூடு பாயும் வித்தை அறிந்தவர் போலும் !
ஒழுக்கத்தினால் பலகாலம் ஆரோக்கியமாக வாழ்ந்தவர் போலும் ! ஏனெனில் 
   
வள்ளுவரே அருள் தரும் இறைவனாய்! ஒன்றுமில்லாத ஆண்டியாய் !எல்லாமுள்ள அரசராய் ! உறவில் நண்பனாய் !அறிவில் ஆசானாய் !


மனிதருள் தெய்வமாய்! இல்லறத்தில் நல்லறமாய் ! 
முற்றும் துறந்த துறவியாய் ! வள்ளலில் இயற்கையாய் ! 
மொழியில் தமிழாய் ! வாழ்வில் இலக்கணமாய் ! தீர்ப்புகளில் நடுநிலையாய்!

அவரே இனிய வாழ்க்கை வாழ்ந்து அனுபவித்து 
எளிய பாடல்களாய் தொகுத்து இருப்பது தமிழுக்கு பெருமை !

ஈராயிரம் ஆண்டுக்கு முன் மனித மனம் ! வாழ்க்கைச் சூழ்நிலை !
'பரிமாற்றம்' குறைவான காலத்தில் !
பெண்கள் நிலம் பார்த்து நடக்கும் காலத்தில் !


வாழ்வில் பலர் பல நிலைகளின் செயலும் விளைவும் சொல்லியது 
பொய் கலவாமல் ! 'மெய்' ஒன்றே ஆணித்தரமாய் எழுதியது !

எல்லோருக்கும் எக்காலத்திலும் பொருந்தும் வாழ்க்கைச் சட்டங்கள் 
துல்லியமாய் கணித்து வகுத்ததெப்படி ?!

சந்தேகம் எழுகிறது ! அவர் ஒரே பிறப்பில் பல அவதாரங்கள் எடுத்திருப்பாரா ?
பல் கலை பல் சுவை வித்தகராக வாழ்வில் ஆதி அந்தம் தெரிந்திருப்பாரோ?

உடல் உணர்வு உள்ளத்தை அளக்கும் சூத்திரம் வைத்திருப்பாரோ ?
முத்தேவர்கள் சொல்லச் சொல்ல எழுதியிருப்பாரோ !

பல அரசர்களுக்கு கலைகளை கற்றுகொடுக்கும் குருகுல ஆசானா?
பேரரசரின் மதி மந்திரியாக இருந்திருப்பாரோ ?


பலரின் அனுபவ வாழ்கையினை கேட்டுப் படைத்திருப்பாரோ ?
பலரின் உள்ளும் புறமுள்ள அனுபவம் எங்ஙனம் உள்வாங்கியிருப்பார் ?

இறைவனை ஒன்றே பாடுவார் அன்றைய காலத்தில்!  வள்ளுவர்
அறத்தைப் பற்றி எழுதினால் 'தவறில்லை' என்று எண்ணியிருப்பார் 
பொருளைப் பற்றி எழுதினாலும் 'பரவாயில்லை' என்பார் ! ஆனால் 

காமத்தை (இன்பம்) பற்றி எழுதத் துணிந்தது எதனாலோ?
காமமும் (இன்பம்) மனித வாழ்வின் ஒரு பகுதி என்று நினைத்ததாலோ!
இதனால் தானோ தமிழில் பண்பாடும் கலாச்சாரமும் மேம்பட்டது ?


குறள்களை அறிவுரை என்பதா? அறவுரை என்பதா?
வாழ்க்கை நெறி என்பதா? வாழ்க்கைத் தத்துவம் என்பதா? 

 குறள்களில் காணமுடியாதது ! அலங்கார வீண் வரிகள் !
அளவுக்கு மிஞ்சிய கற்பனைகள் ! பொய்மை வார்த்தைகள் !
காண முடிவது ! வாழ்க்கையின் அனைத்து  கோணத்தில் 
எளிமையான உவமை! கருத்தாழமிக்க பொருளும் ! 
இலக்கணம் பிசகாத சொற்களும் ! 


வாழையடி வாழையாய் வாழ்க்கையில் 
பதினாறும் பெற்று பெருமைப்படும் வழிகள் 

மனித பிறப்பு முடிந்தாலும் வள்ளுவரின் படைப்பு 
காலத்தையும் வெல்லும் சான்றே திருக்குறளே !

ஈராயிரம் ஆண்டுகள் கடந்தும் அழியாமல் இருக்கும் சூட்சமம் 
வாழ்க்கையோடு கலந்திருப்பதே 

 

அதற்கு சாட்சி வாழுகின்றபோதே உங்கள் அனுபவங்கள் பல குறட்பாக்கள் எடுத்துரைப்பதே 

###########################################################################

 நன்றி ! வணக்கம் !!

))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

No comments:

Post a Comment