Pages

Monday, 10 February 2014

PASSPORT OFFICE SOME TIPS - 'பாஸ் போர்ட்' அலுவலகம் சில டிப்ஸ் மற்றும் லஞ்சம் ஊழல் ஒழிப்பும்

'பாஸ் போர்ட்' அலுவலகம் சில டிப்ஸ் மற்றும்  
லஞ்சம் ஊழல் ஒழிப்பும் 
 (நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்)  
விழிப்புணர்வு கட்டுரை 

மதுரை கங்காதரன் 


 சென்ற மாதம் கடைசி வாரம் மதுரையில் உள்ள 'பாஸ் போர்ட்' அலுவலகத்திற்குச் சென்று என்னுடைய  கடந்த முறை எடுத்த 'பாஸ் போர்ட்' ஐ புதுபிக்கச் சென்றிருந்தேன்.  'பாஸ் போர்ட்'  புதிதாக எடுப்பதற்கு அல்லது புதுபிக்க நீங்கள் கட்டாயம் சில தகவல்களைத் தெரிந்து கொள்ளவேண்டும்.


1. உங்கள் பெயர் ( இனிஷியல் விரிவாக்கம் உட்பட ) உங்கள் படிப்புச் சான்றிதழின் படி / ரேசன் கார்டு / வாக்காளர் அடையாள அட்டை / ஆதார் அடையாள அட்டை படி நூறு சதவீதம் சரியாக பிழையில்லாமல் இருக்க வேண்டும். (ஒருவேளை பிழை (கள் ) இருந்தால் அதற்கான ஆவணங்கள் தயார் செய்து சம்பந்தப்பட்ட நபரிடத்தில் கையெழுத்து வாங்க வேண்டும்) 


2. உங்கள் படிப்புச் சான்றிதழில் பெயர், பிறந்த நாள் ஆகியவை சரியாக இருக்க வேண்டும் 

3. தற்போது இருக்கும் முகவரி உத்திரவாதம் வேண்டுவதற்காக ரேசன் கார்டு / வாக்காளர் அடையாள அட்டை / ஆதார் அடையாள அட்டை / டிரைவிங் லைசென்ஸ் சரியாக இருக்க வேண்டும்.


4. பட்ட படிப்பு அல்லது அதற்கு மேல் படித்தவர்க்கு 'ECNR' (Emigration Check Not Required) எளிதாகக் கிடைக்கும். இது மிக முக்கியமான ஒன்றும் கூட.  

5. உங்கள் வீட்டு அருகில் இருக்கும் உங்களுக்குத் தெரிந்த இருவரின் பெயர்கள் வேண்டும் (Reference members )

6. உங்கள் வீடு முகவரி எந்த காவல் நிலையத்தில் (Place of Police station ) கீழ் உள்ளது என்ற விவரம் வேண்டும் 


7. அனைத்தையும் நீங்கள் ஆன் லைன் மூலம் பதிய வேண்டும் (இதற்கு சிலர் இலவசமாக / சிறிது பணம் பெற்று செய்து தருகிறார்கள். கூடவே உங்களுக்கு வழிகாட்டியாகவும்  இருக்கிறார்கள்) 

8. உங்களுக்கு வேண்டிய பாஸ் போர்ட் தகுந்தவாறு பணத்தைக் கட்ட வேண்டும். (பிறந்த குழந்தைக்கும் எடுக்கலாம்).  

9. 'ரிசிப்ட்' சிலிப்பில் குறிப்பிட்டு இருக்கும் இடம் , தேதி மற்றும் நேரத்திற்குள் , அரை மணி நேரம் முன்னதாக பாஸ் போர்ட் அலுவலகத்தில் இருக்க வேண்டும் 


10. முதலில் உங்களுடைய அனைத்து தகவல்களை சரிபார்க்கின்றனர் , குறிப்பாக ரேசன் கார்டு / வாக்காளர் அடையாள அட்டை / ஆதார் அடையாள அட்டை / படிப்பு சான்றிதழ் / டிரைவிங் லைசென்ஸ் போன்றவை. எல்லாம் ஒரு ஜெராக்ஸ் காப்பியை அவர்களிடத்தில் கொடுக்கவேண்டும். அதை அவர்கள் அசலுடன் சரி பார்த்த பின்னர் ஒரு 'டோக்கன்' தருகின்றனர். அதில் உங்களுக்கான ஒரு எண் தரப்பட்டிருக்கும். அந்த எண்  தான் அங்கு இருக்கும் வரை 'டிஸ்பிளே' யில் நீங்கள் அடுத்து யாரைப் பார்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

11. முதலில் 'ஏ' கவுண்டருக்குச் செல்லவேண்டும். அங்கு சில மாற்றம் வேண்டுமென்றால் சரி செய்யலாம் (திருத்திக் கொள்ளலாம்). அதாவது தெரிந்த நபரின் பெயகள் , காவல் நிலையம் இருப்பிடம் போன்றவை.


12. பிறகு 'பி' கவுண்டருக்குச் செல்லவேண்டும். அங்கும் உங்கள் அனைத்துத் தகவல்கள் அசலுடன் சரி பார்த்த பின்னர் உங்கள் 'கை விரல்கள் ரேகை'  பதிவு செய்யப்படும்.


13. பிறகு 'சி' கவுண்டருக்குச் செல்ல வேண்டும். அங்கும் அனைத்தும் சரிபார்க்கப்படும். (நீங்கள் படித்த படிப்பு, செய்யும் தொழில், வேலை விவரம், வெளிநாடு பயணம் , வெளிநாடு வேலை போன்றவைகள் 


14. பிறகு 'டி' கவுண்டர். மீண்டும் சரி பார்த்தல். இங்கு அனேகமாக உங்கள் பழைய பாஸ் போர்ட் சரி பார்க்கிறார்கள்.


15. அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு 'அக்னாலெஜ்மெண்ட்' தருகிறார்கள்.

16. காவல் நிலைய சரிபார்ப்புக்குப் பின்னர் உங்களுக்கு பாஸ் போர்ட் வழங்கப்படும்.
இதற்கும் லஞ்சம் ஊழலுக்கும் என்ன சம்பந்தம் என்றா கேட்கிறீர்கள் ?

அதாவது ஒருவன் வெளிநாட்டிற்கு சுற்றுலா அல்லது வேலைக்குச் செல்ல நினைக்கும் போது பாஸ் போர்ட் தேவை படுகின்றது. அதில் முக்கியமாக பெயர், விலாசம், வழக்கு விவரம் போன்றவை தெளிவாகத் தெரியவரும். உள்நாட்டில் அரசாள்பவர்கள் எப்படிவேண்டுமாலும் இருக்கலாம் என்பது போல் தெரிகின்றது.

சில கட்சித் தலைவர்கள் / பேச்சாளர்கள் சிலர் திரைப்படத் துறையிலிருந்து வந்ததால் அல்லது அதிகம் படிக்காமல் இருப்பதால் அல்லது விவரம் அதிகமாக தெரியாமல் இருப்பதால் என்னவோ எல்லோருமே யாராவது  எழுதிக் கொடுத்ததைத் தான் படிக்கிறார்கள். வசனம் பேசுவதுபோல் பேசுகிறார்கள். சுயமாக சொந்தமாக மக்களை சந்தித்து அவர்களுடன் சகஜமாக பேசி கண்ணிற்குத் தெரியும் பிரச்சனைகளை பழைய தலைவர்கள் தீர்ப்பது போல் மீண்டும் இனிமேலாவது வருமா ? புள்ளி விவரங்கள் , அடுக்குமொழி வசனங்கள், வசைபாடுவது , நடந்த குறைகளை எடுத்துச் சொல்வதை விட அடுத்து என்ன செய்ய போகிறோம் அதை எவ்வாறு தீர்ப்பது என்பவைகள் பேசுவது நல்லது.

எதிராளிகளை (மற்றவர்களை) ப் பற்றி பேசுவதை விட உங்களைப் பற்றி பேசுவது மிகவும் நல்லது. ஒன்று  நிச்சயம் ! மக்களுக்கு நல்லதைத் செய்தால் தான் தொடர்ந்து பதவியை தக்க வைத்துக் கொள்ளலாம். அதை விட்டு தேர்தல் நேரம் மட்டும் இலவசங்களை அள்ளிக்கொடுத்து , பணம் கொடுத்து , வாய்க்குவந்த வாக்குறுதிகளைக் கொடுத்து வெற்றி பெற்றுவிடலாம் என்பது தற்போது நிலவரப்படி சாத்தியங்கள் குறைவு.

ஏனென்றால் இப்போது பல இளைய தலைமுறையினர் வலை தளத்தில் வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தலைவர்களின் எண்ணங்கள் நன்கு தெரிகின்றது. அதை அப்படியே தங்களுடைய குடும்பத்தில் சொல்லி 'யாருக்கு ஒட்டு போட்டால் நமக்கு நல்லது கிடைக்கும்' என்று பலரிடத்தில் நேரிலோ அல்லது வலைத்தளத்திலோ சொல்வதால் பெரிய பெரிய மாற்றங்கள்  வருவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. 
மக்களே இனிமேலாவது தெளிவு பெறுங்கள். தலைவிதியை நீங்கள் முடிவு செய்யுங்கள்......  கண்களை மூடிக்கொண்டு பாழும் கிணற்றில் மீண்டும் குதித்து பிறகு வருத்தப்படுவதை விட இப்போதே விழிப்புணர்வுடன் வேட்பாளர்களை தேர்வு செய்யுங்கள். எல்லோரும் பலன் பெறுவோம். 


லஞ்சம் ஊழல்  பெரும்பாலும் அரசியல் தலைவர்களால், அரசு வேலை பார்ப்பவர்களால் நடைபெறுகின்றது. அவர்களுக்கு அதிகாரம் அதிகம். நினைத்தால் எதை வேண்டுமாலும் சாதிக்காலம். பணபலம், ஆட்பலம் கூட இருக்கின்றது. சாதாரண மனிதனால் அவர்களைத் கனவில் கூட தொட முடியாது. அதாவது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்டாயம் அவருக்குக் கீழ் இருக்கும் காவல் நிலையத்தில் தடையில்லாத சான்றிதழ் தேர்தலின் போது தரவேண்டும். அதுபோல் வருமான வரித்துறையிடமிருந்து தடையில்லாத  சான்றிதழ் கொடுக்க வேண்டும் . அது போல் அவர் வெற்றி பெற்றால் வருடம் ஒருமுறை வாங்கி ஆன் லின் ல் ஏற்ற வேண்டும்.
அது அரசு வேலை பார்ப்பவர்கள் கட்டாயம் வருடம் ஒருமுறை தடையில்லா சான்றிதழ் தர வேண்டும். இப்படி இருந்தால் பொதுமக்களிடம் நன்றாக பழகுவார்கள். மேலும் ஓரளவு பயமும் இருக்கும். அதேபோல் சொத்து பற்றிய விவரமும் தெரிவிக்கவேண்டும். 

இவைகளை சுய சான்றிதழ் (Self Certificate)  மற்றும் சுயமதிப்பீடு (Self Assessment) கூட தந்தால் போதுமானது.
முக்கியமாக மாதம் ஒருமுறையாவது பிரபல மீடியாக்களில் பொதுமக்கள் சிலருடன் / கல்லூரி மாணவ மாணவியர்களுடன் / சிறுவர்களுடன் / ஆன்றோர்களுடன் / முதியோர்களுடன் / விவசாய , மீனவ மக்களுடன் / தொழில் அதிபர்களுடன் நேரடி கலந்துரையாடல் மற்றும் கேள்விக்கு பதில் சொல்லும் நிகழ்ச்சியில் ஒவ்வொரு தொகுதி எம்.எல்.ஏ , எம்.பி. மற்றும் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டு அவர்களின் பிரச்சனைகளை நேருக்குநேர் கேட்டு உடனே தீர்ப்பதற்கு ஏற்பாடு செய்யவேண்டும். 


இப்போது பெரும்பாலும் நகரில் தான் மாற்றங்கள் , உதவிகள் கிடைக்கின்றது. விவசாய, தொழிலாள , மீனவ பிரச்சனைகளைக் கண்டுகொள்வது இல்லை. ஆனால் தேர்தல் நேரத்தில் தான் அவர்கள் பேசவருகிறார்கள். பல உறுதிமொழிகளை அள்ளி வீசுகிறார்கள். முடிவில் ஏமாற்றம் தான் மிச்சமாகிறது. பெரும்பாலும் தலைவர்கள் யாரோ எழுதிக் கொடுத்ததை தான் பேசுகிறாகள். மக்களுக்குத் தேவையானதை கஷ்டப்படும் மக்களிடம் கேட்டால் தானே தெரிய வரும். சமீபமாக மக்களிடம் குறைகளை நேரடியாக கேட்டு அவைகளைத் தீர்த்தது கிடையாது. அது கர்மவீரர் காமராஜர், அறிஞர் அண்ணா, புரட்சித்  தலைவர் எம்.ஜி,யார் அவர்களோடு சரி. அதற்கு பின் இருந்ததா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும். 
தலைவர்கள் மக்கள் முன் நேரடியாக பேசினால் தான் பல பிரச்சனைக்குத் தீர்வுகள் கிடைக்கும். குறிப்பாக லஞ்சம், ஊழலுக்கு சாவு மணி அடிக்கலாம். இனிமேல் தலைவர்கள் நேரடியாக சந்தித்தே தீரவேண்டும் என்கிற கட்டாயம் வரத் தான் போகிறது. மக்கள் குறைகள் தீரத் தான் போகிறது. செழுமையான நாடு என்கிற பெயர் கிடைக்கத் தான் போகிறது. பொறுத்துப் பார்ப்போம். விடிவு கட்டாயம் பிறக்கும்.    

இந்தத் தகவல்கள் உங்களுக்கு  பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

  

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$                     

No comments:

Post a Comment