Pages

Sunday, 12 April 2015

THIRUVALLUVAR AND OUR LIFE - வள்ளுவமும் வாழ்வியலும்




THIRUVALLUVAR AND OUR LIFE
வள்ளுவமும் வாழ்வியலும்
கவிதையரங்கம்         தேதி:  2.4.2015      இடம்: காலேஜ் ஹவுஸ், மதுரை.
மதுரை கங்காதரன்


எனக்கு முளைத்து மூனு இலைவிடாத அனுபவம்
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்
வாழ்க்கைக் கனியை முழுவதும் ருசிக்காதவன்
நான் திருக்குறள் ஆலமரத்தை அசைத்துப் பார்ப்பதா?

தங்கத்தை உரசிப் பார்த்தால் தரம் தெரியும்
திருக்குறளை அலசிப் பார்த்தால் வாழ்வியல் புரியும்
வானுக்கு வானவில் சிறப்பு
தமிழுக்கு திருக்குறளே சிறப்பு

தேனில் எப்பகுதி சுவை மிகுதி?
முக்கனியில் எக்கனி இனிமை அதிகம்?
முப்பாலில் எப்பால் வாழ்விற்குச் சிறந்தது?
திருக்குறளில் எக்குறள் சிறப்பு மிக்கது?

விழா நாயகர் திருக்குறள் செம்மலின் அகவையோ எழுபது!
எழுபதாவது குறளே இவ்வவைக்கு ஏக பொருத்தம்
மகன் தந்தைக்குச் செய்யும் கைமாறு யாதெனில்
ஆன்றோர் அவையில் சான்றோராய் விளங்குவது!

ஏன் பிறந்தாய் மகனே? எனப் புலம்ப விடாமல்
'இவன் என் மகன்' என்று பெருமைபட பேசுவது
ஊர் போற்றும் நன்மகனாய் நற்பெயரை எடுப்பது
கல்வி ஒழுக்கத்தில் சிறந்தவனாய் விளங்குவது

தமிழ் தாய் கோவிலில் தங்கச் சிலையாய் இருப்பவர்
செவ்வாயில் திருக்குறளை அமுதமாய் சுரப்பவர்
செவிகளில் குறள்களை இனிமையாய் ஒலிப்பவர்
வாழும் காலத்தில் வள்ளுவத்தை வாழ்வியலாய் ஆக்கியவர்.

எங்கள் திருக்குறள் செம்மல் ந. மணிமொழியனார்
பிறவிப் பயனை திருக்குறளால் அடைந்தார்கள்
அவர்கள் வாழ்க பல்லாண்டு என வாழ்த்துவோம்
                        நன்றி வணக்கம்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&



No comments:

Post a Comment