Pages

Sunday, 14 February 2016

'கடகதேசமும் மேசகிரியும்' (குறுநாவல்) பாகம் :3

'கடகதேசமும் மேசகிரியும்'  (குறுநாவல்)
மதுரை  கங்காதரன்
இக்குறுநாவலில் வரும் முக்கிய கதா பாத்திரங்கள்

சென்ற வார தொடர்ச்சி ...
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

                                          பாகம் :3

அங்கு புதிதாக நின்று கொண்டிருந்த குதிரைவண்டியைப் பார்த்த மாத்திரத்தில் இளவரசி மீனாம்பிகை  "மதிமந்திரி விருச்சிகரேவழக்கமாக வரும்வண்டி வரவில்லையாஇது புதிதாக இருக்கின்றனவே!" என்று தனது புத்திசாலித்தனத்தை காட்டினாள்சற்றுத் தடுமாறியபடி  "அது வந்து.... வந்து... "என்று அவரின் நாக்கு உளறியது.

"ஏன் இவ்வளவு திணறுகிறீர்கள்அதையும் நானே சொல்கிறேன்அதாவது இன்றோடு எனது பூஜை முடிகின்றதல்லவாஅதனால் தானே!" என்று விருச்சிகர் வாயால் உண்மையை சொல்லவிடாமல் இளவரசி முந்திக்கொண்டாள்.

அவரும் "....ஆமாம்ஆமாம்அதுமட்டுமல்லஇன்று நீங்கள் வழக்கமான பாதையில் செல்லாமல் சுற்றுப்பாதையில் செல்லப் போகிறீர்கள்"  என்றதற்கு"மதிமந்திரி விருச்சிகர் எல்லாமே என் நன்மைக்காக செய்வார்என்று பரிபூரண நம்பிக்கையோடு "ஆகட்டும்என்றாள் மீனாம்பிகை.
நடப்பவையெல்லாம் மிதுனமதி கூர்மையாக கவனித்தாள்

குதிரைவண்டியின் படியில் மீனாம்பிகை தனது வலது கால் வைத்து ஏறும் போது வண்டிக்கடியில் ஒளிந்திருந்த மிதுனமதி ஏதேச்சையாக காலைப் பார்த்தாள். அந்தக் குதிக்காலின் மேல் ஆயுத எழுத்து (போன்று பெரிய மூன்றுமச்சங்கள் அருகருகே பார்த்து சற்று ஆச்சரியப்பட்டாள். அதை ரசிக்கும் சூழ்நிலையில் இல்லாததால் மேற்கொண்டு நடக்கும் சம்பவத்தில் கவனம் செலுத்தினாள்.

அரண்மனைக்கு புறப்படுமாறு இளவரசி ஆணையிட்டார்அவரின் பின்னால் விருச்சிகர் வருவது போன்று பாவனை செய்து நடுவிலேயே பிரிந்து சென்றுவிட்டார்வண்டியின் வேகம் பன் மடங்கு அதிகரித்ததுஅதனால் மிதுனமதியின் கைப்பிடி மெல்ல மெல்ல தளர்ந்ததுஒரு வளைவில் வேகமாகத் திரும்பும்போது மிதுனமதி தூக்கியெறியப்பட்டாள். அவ்வண்டி அனைவரின் கண்களிலிருந்து தப்பித்து சேனாதிபதி சிம்மசேனரின் பாதாள அறையை அடைந்தது. அப்போது தான் இளவரசி மீனாம்பிகை தன்னை யாரோ கடத்திவந்துள்ளார்கள் என்று உணர்ந்தாள்சுதாரிப்பதற்குள் அங்கிருந்த பெண்ஒருவர் மீனாம்பிகையின் மூக்கருகில் ஒருவித பச்சிலை காட்ட அதை முகர்ந்தவுடன் மயக்கமுற்றாள்.

மறுநாள் காலை இளவரசரின் ஆணைப்படி தங்கத்தேரை சுத்தப்படுத்தி அதை மறுசெப்பனிடும் பணிகளின் முன்னேற்றத்தை கவனிக்க தனது குதிரையில் சென்று கொண்டிருந்த மெய்க்காப்பாளரும் சகலகலாவல்லவராகிய தனுசுமல்லர், சற்றுத் தொலைவில் யாரோ 'ஐயோ.. அம்மாஎன்று முனங்கல் ஒலி கேட்க அந்த திசையை நோக்கி விரைந்தார்.

அங்கு.... ஒரு பெண் தலையில் அடிபட்டும் அந்த இடத்திலிருந்து இரத்தம் கசிவதுடன் மெல்ல மெல்ல தன் சுயநினைவு இழந்து கொண்டிருப்பதைப் பார்த்தவுடன் 'யார் இந்தப் பெண்இங்கு எப்படி வந்தாள்இந்நிலை இவளுக்கு எப்படி வந்ததுஎந்த நாடாக இருக்கும்?' என்கிற பல கேள்விக்கு பதிலாகஅவளது நாடி பிடித்து பார்த்ததில் கிடைத்ததுஆம்அவளது மணிக்கட்டுப் பகுதியில் நட்சத்திரக்குறி ஒன்று இருப்பதைப் பார்த்து திடுக்கிட்டுப் போனார்.இவள்... தமது எதிரி நாடான மேசகிரியைச் சேர்ந்தவள்தங்கள் நாட்டைக் காக்க எதையும் செய்யும் துணிச்சல் உள்ளவர்கள்எதற்காக இங்கு வந்திருப்பார்?ஒருவேளை அரண்மனை ஜோதிடர் மகரகுரு செல்லியது போல்   இந்நாட்டிற்கு  ஆபத்து இவளால் வந்துவிட்டதோஅதேசமயத்தில் ஒரு பெண்ணால் தான்தடுக்க  முடியும் என்றும் சொன்னாரேஅந்தப் பெண் இவளாக இருக்குமோ?  இவளுக்கு வைத்தியம் பார்ப்பதாவேண்டாமாஇந்த அழகிக்குப் பின்னால் ஆபத்து இருக்குமோஎன்கிற குழப்பம் நிலவும் போது அவரது இரக்ககுணமே வெற்றி பெற்றது.

ஒரு துணியால் இரத்தம் கசிவதை துடைத்துவிட்டு பச்சிலை வைத்து கட்டிய போது முழுவதுமாக மயங்கி துவண்டு விழுந்தாள்யாரும் எவரும் இங்குஇல்லாத நிலையில் தானும் விட்டுச் சென்றால் உயிர் போகும் அபாயம்          உண்டாகலாம்எது எப்படி இருந்தாலும் தன் கண்காணிப்பில் சில தினங்கள்     இருக்கட்டும் என்று எண்ணி அப்பெண்ணின் பூப்போன்ற உடலை மெல்ல வாரியணைத்து தன் தோள் மீது சாய்க்கும் வேளையில் இதுவரையிலும் இல்லாதஉணர்வு ஏற்படுவதை தனுசுமல்லர் உணர்ந்தார்அப்படியே அவளோடு குதிரையில் அமர்ந்தவாறு தனது வைத்தியச்சாலைக்கு சென்று சகலவிதமான வைத்தியத்தைக் கொடுத்துக் முடிக்கும்வேளையில் ஜோதிடர் மகரகுரு அங்கு நுழைந்தார்மிதுனமதிக்கு சுயநினைவு மெல்ல மெல்ல திரும்பிக் கொண்டிருந்தது.

"ஏன் ஜோதிடரே இவ்வளவு வேகம்ஏதேனும் பிரச்சனையா?”
"அதெல்லாம் ஒன்றுமில்லைதனுசுமல்லரேஎல்லாம் நல்ல செய்தி தான்!"
இளவரசரின் மெய்க்காப்பாளர் என்கிற முறையில் ஒன்றைச் சொல்கிறேன்நம் இளவரசருக்குத் தகுந்த இளவரசி எப்படி இருப்பார்கள் என்று அங்கஇலட்சணங்களை அலசி ஆராய்ந்த போது அவரின் வலது காலில் மூன்று மச்சங்கள் அருகருகே இருக்கும் என்பது தான் தெரியவந்தது "
"அப்படியா ஜோதிடரேஅந்த அதிசய மங்கையை எங்கு தேடுவது?"

"தேடுவோம் கட்டாயம் கிடைப்பாள். இச்செய்தி வேறு யாருக்கும் தெரியக்கூடாது. ஏனென்றால் அவர்களின் காதுகளில் எட்டினால் அப்பெண்ணிற்கு அவர்களால் பல பத்துக்கள் ஏற்படலாம்"

"ஆகட்டும் ஜோதிடரேஎன்று விடைபெற்று செல்லும் வேளையில் தூங்கிக் கொண்டிருந்த அப்பெண்ணை பார்த்து "யார் இந்தப் பெண்?" என்று கேட்க"யாரோ வழி தவறி வந்த பெண்சற்று சுகமில்லாமல் இருக்கிறாள்மயக்கம் தெளிந்தவுடன் யார் என்று விசாரித்து அனுப்ப வேண்டும்என்கிறபதிலைக் கேட்டு வெளியேறினார் ஜோதிடர் மகரகுரு.

தனுசுமல்லர் கூர்மையாக அவளைப் பார்த்தார்கள்ளமில்லா முகப்பொழிவுஉறங்குவதிலும் நளினம் அகியவை அவரின் இதயத்தைத் துளைத்தது.அவளைப் பார்க்க பார்க்க உடலெங்கும் இனிமை பரவியதுஇப்படி ஆனந்தகனவில் லையித்தவர் சட்டென்று சுயநினைவுக்குத் திரும்பியவராய்தன் வைத்திய அறிவின் காரணமாக இப்பெண்ணிற்கு மயக்கம் தெளிந்துவிட்டது என்பதை அறிந்தவராய் "பெண்ணேபோதும் நடிப்பு! இனி எழலாம்என்று தனுசுமல்லர் கூறியதும் அப்பெண் சட்டென்று எழுந்துவிட்டாள்.

"தங்களுக்கு எப்படி.... எனது மயக்கம் தெளிந்துவிட்டது என்று தெரியும்?"
"பெண்ணேஅதுவாதங்களின் இதயத்துடிப்பு வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருப்பதை நான் கவனித்தேன்நாங்கள் பேசியதை நீங்கள் கேட்டுயிருப்பீர்கள்இப்போது சொல்லுங்கள்நீங்கள் யார்எங்கள் எதிரி நாடான மேசகிரியிருந்து இங்கு வந்தக் காரணம்?"

"இவ்வளவு விவரங்கள் தெரிந்தும் ஏன் என்னை  உங்கள் ஜோதிடர் மகரகுருவிடம் என்னைக் காட்டிக் கொடுக்கவில்லை?"
"பெண்ணேதாரம் இல்லாமல் அலசி ஆராயாமல் ஒரு பெண்ணின் மேல் அபாண்டமாய் பழிசுமத்தி அவபெயர் ஏற்படுத்துவதை நான் சிறிதும் விரும்பமாட்டேன்"
"உங்கள் கனிவான சொல்லிற்கும்இரக்க குணத்திற்கும்பெண்மையை உச்சமாக மதிப்பதற்கும் முதலில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.நானும் கடகதேசத்தவர்களை எதிரியாக இதுவரை நினைத்து வந்தேன்இன்று உங்களை சந்தித்த பிறகு என் மனம் மாறிவிட்டதுஇங்கு நானாக வரவில்லைஇந்த நாட்டில் உள்ள சிலர் இங்கு வரச் செய்துவிட்டார்கள்"

"அப்படியாஎன்னால் நம்ப முடியவில்லையேசற்று விளக்கமாகக் கூறுங்களேன்"
"என் பெயர் மிதுனமதிமேசகிரி இளவரசி மீனாம்பிகையின் உயிர்த்தோழிஎன்று தான் சதிகாரர்களிடமிருந்து இளவரசியைக் காப்பாற்ற குதிரை வண்டிக்கடியில் ஒளிந்து வந்தது முதல் தான் தூக்கியெறிந்தது வரை உணர்ச்சிகரமாகக் கூறினாள்.
அந்த பேசும் பதுமையின் அழகில் மயங்கியவர் சற்று விழிப்படைந்து "உனது வீரம் மிகவும் பாராட்டுக்குரியது"

"நீங்களும் 'வீராதி வீரர்என்பதை அறிவேன்இவ்வளவு முயன்றும் சதிகாரர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லைஆனால் ஒன்று மட்டும் உறுதி.விரைவில் இந்த கடகதேசத்திற்கு ஆபத்து வந்துவிட்டதுஎன்பதைக் கேட்ட உடனே தனுசுமல்லருக்கு ஜோதிடர் மகரகுரு சொன்னது ஞாபகம் வந்தது.அதோடு ஒரு பெண்ணால் தான் தடுக்க முடியும் என்ற போது மிதுனமதியை மனதில் இருத்தினார்.
"கவலைவேண்டாம் மிதுனமதிஉங்கள் மதிமந்திரி விருச்சகர் ஏன் இவ்வாறு செய்தார் என்பது புரியாத புதிராக இருக்கின்றதுநீங்கள் விழுந்த இடத்திற்குச் சற்று தூரத்தில் தான் எங்களது சேனாதிபதி சிம்மசேனரின் மாளிகை இருக்கின்றதுஅவர் நாட்டிற்கு துரோகம் செய்வாரா? என்கிற சந்தேகம் இருக்கின்றது?"

"ஏன் செய்யமாட்டார் தனுசுமல்லரேபதவி மோகம் பிறந்துவிட்டால் அதை அடைய மனிதர்கள் எதையும் செய்யத் தயங்கமாட்டார்கள் அல்லவா!"
"மிதுனமதி உங்களுக்கு ஏதேனும் விடை கிடைக்கின்றதா?"

"இப்போது தான் எனக்கு எல்லாமே புரிகின்றதுஅதாவது இளவரசி மீனாம்பிகையை நமது மதிமந்திரி விருச்சிகர் உங்கள் சேனாதிபதி சிம்மசேரின் உதவியால் கடத்தியுள்ளார்"

"அப்படி கடத்தினால்..."
"எதிரி நாடான கடகதேச இளவரசர்தான் மேசகிரி இளவரசி மீனாம்பிகையை கடத்தியிருக்கிறார் என்கிற வதந்தியை பரப்புவார்"
"பரப்பினால்..."
"இருவரின் பகை போராய் முடியும்கடகதேசத்தை மேசகிரி எளிதாக கைப்பற்றும்இளவரசர் துலாவர்மர் கைதாவார்அப்போது நல்ல பிள்ளை போல் தான் கடத்தி வந்த இளவரசியை இளவரசர் துலாவரமர் தான் கடத்தி சிறைபிடித்து வைத்திருந்தார் என்று மகா பொய் சொல்லி அனைவரையும் நம்ப வைப்பார்அவரே இளவரசி மீனாம்பிகையை விடுவிப்பது போல் நடிப்பார்அந்த சூழ்நிலையில்  இளவரசர் துலாவர்மரை அரியனையிலிருந்து தூக்கி எறிந்துவிட்டு சேனாதிபதி சிம்மசேனரை  அரசராக முடிசூட்டிக் கொள்ள ஒரு மனதாகச் சம்மதிப்பர்அதன் பின் சேனாதிபதி சிம்மசேனர்,   மதிமந்திரி விருச்சிகருடன் சேர்ந்து மீண்டும் சதி செய்து மேசகிரி அரசர் ரிசபவேந்தரைக் கொன்று மதிமந்திரி விருச்சிகரே மீனாம்பிகையை திருமணம்முடித்துக்கொள்வதோடு மேசகிரியின் அரசராகவும் ஆவார்என்று தனது புத்திக் கூர்மையை வெளிப்படுத்தினாள் மிதுனமதி.
"அடேயப்பாஒரு பெண்ணிற்கு இவ்வளவு திறமையாஉண்மையில் என்னை வியக்க வைக்கின்றது"

"மற்றுமோர் உண்மையான இரகசியம்உங்கள் ஜோதிடர் மகரகுரு கூறியதை நான் மயக்கத்தில் இருப்பது போல் நடிக்கும்போது கேட்டேன்அதாவது எங்கள் இளவரசி மீனாம்பிகையின் காலில் அந்த அதிசய மூன்று மச்சங்கள் உள்ளன!"

"அப்படியாபார்த்தாயா மிதுனமதிநல்ல எண்ணமுள்ளவர்களுக்கு தகுந்த உதவிகள் யார் மூலமாவது எப்படியாவது கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கைவீண்போகவில்லை. இனி தேடுகின்ற வேலை இல்லைஎன்றார் தனுசுமல்லர்.
"ஆனால் எங்கள் இளவரசியையும் உங்கள் இளவரசரையும் திருமணம் செய்து வைத்து நம் இரு நாடுகளுக்கிடையே நல்லுறவை வளர்த்திட வைக்கவேண்டும்என்று மிதுனமதி கூற அதற்கான திட்டத்தை தனுசுமல்லர் விளக்கினார்.

தொடரும் ......


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@