Pages

Thursday, 18 February 2016

'கடகதேசமும் மேசகிரியும்' (குறுநாவல்) பாகம் :4 இறுதி பாகம்

'கடகதேசமும் மேசகிரியும்'  (குறுநாவல்)
மதுரை  கங்காதரன்
இக்குறுநாவலில் வரும் முக்கிய கதா பாத்திரங்கள்

இறுதி பாகம்  ....
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


                                     பாகம் :4
"மிதுனமதிஇதுவரையிலும் நடந்த சம்பவங்களையும் இனிமேலும் நடக்கப்போகின்ற ஆபத்தை கூறினாய். அதை முறியடிக்கும் வழியை நான் கூறுகிறேன்ஆனால் அதற்கு உங்களுடைய ஒத்துழைப்பும் எதையும் செய்யும் துணிச்சலும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்இதனால் உங்களுக்கு அவபெயரும் அவமானமும் கூட தற்காலிகமாக ஏற்படலாம்அதைத் தாங்கிக்கொள்ளும் மனோதைரியம் வேண்டும்"
"தனுசுமல்லரேஎது செய்தாலும் எனக்கு பூரணச் சம்மதம்மேற்கொண்டு நடக்கவேண்டியவைகளை தாமதப்படுத்தாமல் செய்வோம்"அப்படியானால் இதோ எனது அடுத்த திட்டம்என்று இரகசியமாக தனுசுமல்லர் மிதுனமதியின் காதில் ஏதோ கூற அவளுக்கு சற்று பயம் கலந்த நடுக்கம் ஏற்படுவதை கவனித்தவர்
"இதற்கே இப்படி பயப்பட்டால் போகப்போக இதை விட ஏற்படும் பயங்கரத்தை எவ்வாறு சமாளிப்பாயோ?"
"நான் எதற்கும் பயப்படவில்லைஉங்களுக்குள் இருக்கும் இராஜதந்திரத்தை நினைத்துப் பார்த்தேன்அவ்வளவு தான்"
"முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும்தந்திரத்தை தந்திரத்தால் தான் வெற்றி அடையமுடியும்நான் சொல்லியபடி ..."
"நான் இப்போதே இறங்கிவிட்டேன்"
"ஆகட்டும் புறப்படுஉன்னைக் கைதியாக அரசவைக்கு அழைத்துச் செல்லும் முன் உனது இதயத்தை இரும்பாக்கிக் கொள்என்று தனுசுமல்லரின் சொல்லை ஆணையாய் ஏற்றுக்கொண்டு அதன்படி நடக்கலானாள்.
அரசவையில் கூடியிருக்கும் அனைவரின் முன்பாக ஒரு கைதியாக மிதுனமதியை தனுசுமல்லர் அழைத்துவர அவையில் உள்ள அனைவரும் பார்த்து பரபரப்பு அடைந்தனர்முக்கியமாக சேனாதிபதி சிம்மசேனர் விழி பிதுங்கியபடி அவளைப் பற்றிய ஆயிரம் சிந்தனை அவரது மனதில் ஓடியதுஅழகும் கம்பீரமும் கொண்ட பெண்ணை இப்போதுதான் முதன்முதலாக பார்க்கிறார்.
"தனுசுமல்லரேஏன் ஒரு பெண்ணை கைதியாக இழுத்து வந்துள்ளாய்அப்படியென்ன அவ்வளவு பெரிய குற்றம் செய்துவிட்டாள்?"

"இளவரசேநான் சொல்லப்போகும் செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியை தரும்இருப்பினும் சொல்கிறேன் கேளுங்கள்இப்பெண்ணின் பெயர் மிதுனசுந்தரிஒற்றர்களின் மூலம் எனக்குக் கிடைத்த செய்தி யாதென்றால்தங்களை கொலை செய்வதற்காக இப்பெண் இங்கு வந்துள்ளார் என்பதை அறிந்துகொண்டேன்எப்படியோ என் கண்களில் அகப்பட்டுவிட்டாள்இப்பெண்ணால் இந்த கடகதேசத்திற்கு ஆபத்து ஏற்படலாம்தாங்கள்தான் இப்பெண்ணை நன்கு விசாரித்து தகுந்த தண்டனையை விரைந்து கொடுக்கவேண்டுகிறேன்என்று கர்ஜிக்க அங்குள்ள அனைவரும் 'இவளுக்கு மரணதண்டனை கொடுங்கள்என்று சலசலப்புடன் கூச்சலிட்டனர்.

அப்போது மிதுனமதி ஒருகணம் அவமானமடைந்தாலும் தன் நாட்டை காப்பாற்றவும் இளவரசி மீனாம்பிகையையும் கண்டுபிடித்தாக வேண்டுமென எண்ணி மனதில் வைராக்கியம் கொண்டு நடப்பவைகளை அனைத்தையும் சகித்துக்கொண்டாள்.
"அமைதிஅமைதிஎன்று இளவரசர் துலாவர்மர் கூறியவுடன் அரச சபை அமைதியானது.

"பெண்ணேஎமது தனுசுமல்லர் சொன்னதை நீ மறுக்கிறாயா? அல்லது ஏற்கிறாயா?"
"அவர் சொன்னது எல்லாம் உண்மைஉங்களது மூதாதையர்களால் எங்களது குடும்பம் அழிந்துவிட்டதுஉங்களைக் கொல்வதற்காகவே என் உயிரை தக்கவைத்துக் கொண்டதோடு இவ்வளவு வருடங்கள் காத்திருந்தேன்நேரம் கைகூடும்வேளையில் தனுசுமல்லர் சாமர்த்தியமாக தடுத்துவிட்டார்நீங்கள் என்ன தண்டனை கொடுத்தாலும் எனக்குச் சம்மதம்தான்என்று துணிவுடன் பதிலளித்தாள்.

"பெண்னேஉனது வீரத்தை நினைத்து நான் பூரிப்படைகிறேன்என்ன தான் உணர்ச்சிகரமாக பேசினாலும் நீ சொல்லும் காரணம் எனக்கு சரியாகப்படவில்லைஉனக்கு வேறு ஒரு உள்நோக்கம் இருக்கின்றது என்று நம்புகிறேன்ஒருவேளை உனக்கு நாங்கள் தவறாக தண்டனை கொடுத்துவிட்டால் இம்மக்கள் கொதித்துவிடுவார்கள்அது மட்டுமா இதையே எதிரிகள் தங்களுக்குச் சாதகமாக்கி கலவரம் உண்டுபண்ணி பெரும் பிரச்சனையாக மாற்றிவிடுவார்கள்ஆகவே இப்பெண்ணின் குற்றம் நிரூபணமாகும் வரை நமது சேனாதிபதி சிம்மசேனர் கண்காணிப்பில் இருக்கட்டும்.இவளது வீரம் நமக்கு எப்போதாவது கட்டாயம் தேவைபடும்என்ன சொல்லகிறீர்கள் ஜோதிடர் மகரகுரு அவர்களேஎன்று கேட்க அவர்மட்டுமில்லாது அனைவரும் இசைந்தனர்.
சிம்மசேனருக்கு பழம் நழுவி தேனில் விழுந்தது போல் துள்ளினார்ஏனெனில் 'எதிரிக்கு எதிரி நண்பன் என்பது விதியல்லவாமிதுனசுந்தரியைக் கொண்டு தனது பாதாள அறையில் இருக்கும் இளவரசி மீனாம்பிகையை தன் எண்ணங்களுக்கேற்ப பணிய வைக்க வேண்டும்முடிந்தால் இவளின் மூலம் இந்த கடகதேசத்து இளவரசர் துலாவர்மரின் கதையை முடிக்கவும் தயங்கக் கூடாது என்று உறுதி கொண்டார்.
வீரர்கள் அவளை கைதிகோலத்துடன் அழைத்து வருவதைப் பார்த்த சிம்மசேனர் "வீரர்களே முதலில் இவளை விடுவித்து சுதந்திரமாக என்னோடு வரட்டும்என்று அவர் மாளிகையினுள் இருக்கும் பாதாள அறைக்கு அழைத்துச் சென்றார்.  

"என்ன மிதுனசுந்தரி இவ்வளவு ஆச்சரியமாகப் பார்க்கிறாய்இன்னொரு அதிசயத்தையும் நான் காட்டுகிறேன். வா...என்று அங்கு அடைத்து வைத்திருந்த இளவரசி மீனாம்பிகையைக் காட்டினார்.
மீனாம்பிகை, மிதுனமதியைப் பார்த்த மாத்திரத்தில் நடந்தவற்றை  அறியாமல் "துரோகிநீயுமா இவர்களோடு சேர்ந்து என்னையும் என் நாட்டையும் காட்டிக்கொடுக்கவும் பழிவாங்கவும் துணிந்துவிட்டாய்எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கும் என்பதை அறிந்திடாமல் வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பி ஏமாந்துவிட்டேன்என்று புலம்பித்தள்ளினாள்.
மேசகிரியில் மதிமந்திரி விருச்சிகர் அரசரவையில் கட்டிவிட்ட கதை அனைவரையும் நம்பவைத்ததுஅதாவது தன்னையும் சகவீரர்களையும் கடகதேசத்தவர்கள் சிலர் தாக்கிவிட்டு இளவரசி மீனாம்பிகையையும் மிதுனமதியையும் தூக்கிச் சென்றுவிட்டனர் என்று புழுகினார்அதோடு நிற்காமல் மேசகிரியை மதிக்காமல் வரும் பௌணர்மியன்று கடகதேசத்து மக்கள் மட்டும் கலந்துகொள்ளும் வகையில் ஆதிபகவன் கோவிலுக்கு கும்பாபிசேகமும்   தங்கத்தேர்  ஊர்வலத்திற்கும் ஏற்பாடு செய்துவருகிறார்கள் என்கிற செய்தியை கேட்டு பொறுக்க முடியாமல்"விருச்சிகரே! கோழைகள்! இரவுநேரத்தில் கேவலம் பெண்களிடத்திலா அவர்களின் வீரத்தைக் காட்டுவதுஅவர்களை சும்மா விடக்கூடாது.தக்கப்பாடம் கற்பித்தே தீரவேண்டும்இவ்வேளையில் தாங்கள்தான் நல்ல யோசனை கூறவேண்டுகிறேன்என்று அரசர் ரிசபவேந்தர் கேட்க'இதுதான் நல்ல சந்தர்ப்பம்எரிகின்ற தீயில் எண்ணெய் விடுவதற்குஅதை மதிமந்திரி விருச்சிகருக்கு சொல்லியாத் தரவேண்டும்அப்போதுஅவர் தன் நாட்டின் மீது அதிக அக்கறையுள்ளவராக நடித்தார்.

"வேந்தேயாவையும் நினைக்கும் போது நெஞ்சம் பதறுகின்றதுபழிவாங்க மனம் துடிக்கின்றதுபோர்முரசு கொட்ட உத்தரவு கொடுங்கள்என்று குமுறினார்.

"விருச்சிகரேபொறுங்கள்பொருத்தார் பூமியாள்வார்எதுவும் நிச்சயமாகத் தெரியாதவரைக்கும் நாம் எந்த ஒரு முடிவுக்கும் வந்துவிடக் கூடாது.ஆனால் எதற்கும் நாம் தயாராக இருக்கவேண்டும்அதற்கு முதற்கட்டமாக ஆண்டுதோறும் நடைபெறும் சிறந்த வீரர்களை தேர்ந்தெடுக்கும் போட்டியை நடத்தி அதில் தேர்வாகும் வீரர்களை நமது படையில் சேர்த்து அவர்களை போருக்குத் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்அதோடு வழக்கம்போல் வெற்றிபெறும் வீரனை என்னுடன் தனியாக சிறப்புவிருந்திற்கும்  ஏற்பாடு செய்யவேண்டும்என்றுஆணையிட "அப்படியே ஆகட்டும் அரசேஎன்று கூறி விடைபெற்றார் மதிமந்திரி விருச்சிகர்.

போட்டித்திடல் கவர்ச்சியாக அலங்கரிக்கப்பட்டுயிருந்ததுமேசகிரி மக்கள் வீரத்திற்கு சோடை போகிறவர்கள் கிடையாது என்பதை நிரூபிக்கும்வண்ணம் போட்டியை கண்டுகளிக்க வந்திருக்கும் கூட்டத்திற்கு இணையாக வீரர்களும் இருந்தனர்அந்தக் கூட்டத்தில் தனுசுமல்லர், ‘தனுசுசுந்தரர்’ என்ற பெயரில் மக்களோடு மக்களாக அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.
போட்டிகள் ரம்பமாயினமக்கள் தங்கள் ஆரவாரங்களை கைதட்டல்கள் மூலம் வெளிப்படுத்தினர்மலைகள் உயிர்பெற்று மோதிக்கொண்டதுஇருந்தது அந்த போட்டித்திடல்அனைத்துப் போட்டிகள் நடந்து ஒரு முடிவுக்கு வந்ததுவழக்கம்போல் எப்போதும் வெற்றிபெறும் வீரனேஇம்முறையும் வெற்றிபெற்றான்அதைப்பார்த்த மேசகிரி அரசர் ரிசபவேந்தர்இவ்வீரனை வெல்ல இக்கூட்டத்தில் யாரேனும் இருக்கிறீர்களா?"என்று அரைகூவல் விடுக்க , இதுதான் தக்கசமயம் என்று தனுசுமல்லர் "ஏன் இல்லைநான் இருக்கிறேன்!" என்று கர்ஜிக்க அரசர் முதற்கொண்டுஅனைவரும் அவரை வியப்புடன் பார்த்தனர்அந்த சவாலை ஏற்றுக்கொண்ட வீரன் தனுசுமல்லரின் வீரத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் கீழே வீழ்ந்தான்மிக்க மகிழ்ச்சியடைந்த ரிசபவேந்தர் "வீரனே உன் வீரம் என்னை மெய்சிலிர்க்க வைத்துவிட்டதுஇன்று நீ எனது விருந்தாளிஎனதுஅரண்மனையில் உனக்கு தனியாக ராஜவிருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளேன்அதில் கலந்துகொள்ள வேண்டுகிறேன்என்று கேட்டுக்கொள்ள "அதை கௌரவரமாகக் கருதுகிறேன்என்று பதிலளிக்க அன்றைய இரவில் இருவரும்  சந்தித்தனர்நேரத்தை வீணாக்காமல் வந்த காரணத்தை சொல்லிமுடித்துவிடுவதில் குறியாக இருந்தார் தனுசுமல்லர். "இவ்விருந்தில் கலந்துகொள்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகின்றதுஇருந்தாலும்அரசே, முதலில் தாங்கள் என்னை  மன்னிக்கவேண்டும்இந்த சந்திப்புக்கு காரணகர்த்தா யாறென்றால் இளவரசி மீனாம்பிகையின் தோழி மிதுனமதிஎன்று கூற ரிசபவேந்தரின் முகம் பிரகாசமடைந்தது.

"அப்படியென்றால் நீங்கள்...."
தன் வேடத்தை களைத்து "நான் தான் கடகதேசத்தின் இளவரசர் துலாவர்மரின் மெய்காப்பாளர் தனுசுமல்லர்என்று சொன்னவுடன்
".. நீங்கள் தானா அவர்இளவரசி மீனாம்பிகையைப் பற்றி..." என கேட்டதுதான் தாமதம் "இளவரசியார் பத்திரமாக சேனாதிபதி சிம்மசேனரின் கண்காணிப்பில் மிதுனமதி கவனிப்பில் இருக்கிறார்"

"அப்படியென்றால் நீங்கள்...."
என்று நடந்தவற்றையும் அதோடு இருநாட்டில் நடக்கும் பின்னனி சதியையும் எடுத்துக் கூறினார் தனுசுமல்லர்.
"அப்படியாஇனி இளவரசி பற்றிய எனது பொறுப்புகள் குறைந்தது"
"குறைந்ததாஅரசேஇனிதான் தங்கள் பொறுப்பு கூடியிருக்கிறது!"
"என்ன தனுசுமல்லரே புதிர்போடுகிறீர்கள்?"

"ஆம் அரசேஎன்று இளவரசியின் மூன்று மச்சத்திற்கு உரியவரான தனது இளவரசர் துலாவர்மரைப் பற்றி கூற மகிழ்ச்சியின் உச்சத்தை அடைந்தார்அடுத்து என்ன செய்வதென்றறியாது திகைத்தார்மீண்டும் இயல்புநிலைக்கு திரும்ப அவசரமாய் அவர் காதில் ஏதோ கடித்தார். "..."என்று தன்னையறியாமல் அலறினார்.

"அரசேபாம்பின் கால்தடம் தெரிந்துகொள்ளவேண்டுமென்றால் என்னையும் பாம்பாக மாற்றுங்கள்என் தேசத்தில் உலாவும் பாம்பை(சிம்மசேனரை) கொல்ல ! பிறகு நடப்பது எல்லாம் நன்மையில் முடியும்இதேபோல் மிதுனமதிக்கும் ஒரு வேலையை கொடுத்திருப்பார்கள்.இங்குள்ள பாம்பை (விருச்சிகரை) கொல்வதற்கு ...."
"....எனக்கு எல்லாம் புரிந்துவிட்டதுஇப்போது பார்" என்று தனது இருகைகளைத்தட்டி "யாரங்கேஉடனே மதிமந்திரி விருச்சிகரை அழைத்து வாருங்கள்என்று ஆணையிட உடனே அரசர் முன் நின்றார். "அரசேதாங்கள் அழைத்த காரணம் யாதாயினும் அதை சிரமேற்று முடிக்கிறேன்"

"ஒன்றுமில்லைநம் இளவரசி மற்றும் அவளது தோழியை கடகதேசத்தவர் சிம்மசேனர்தான் கடத்தியிருப்பார் என்று நான் சந்தேகிக்கிறேன்எது எப்படி நடந்தாலும், யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை அக்கொடியோனின் தலையை இவ்வீரன் மூலம் கொண்டுவருவதற்கு ஏற்பாடுசெய்யவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்அதைக் கேட்ட விருச்சிகரின் இரத்தம் உறைந்ததுகாலடி எடுத்துவைக்க முடியாதபடி சிலைபோல் நின்றார்.
'தன் விணை தன்னைச் சுடும்' 'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்என்கிற பழமொழிகள் அவர் நினைவிற்கு வந்திருக்கும்.

ஒப்புக்காக அவர் வாயளவில் "ஆகட்டும் அரசேஇதோ அந்த காரியத்தை முடித்து வெற்றியோடு வருகிறேன்" என்று சொல்லி விடைபெற்ற பிறகு அவர் மனதில் 'இச்செய்தியை  உடனே  சேனாதிபதி சிம்மசேனரிடம் சொல்லி எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதற்காக தனுசு சுந்தரர்வேடத்தில் இருக்கும் தனுசுமல்லரை அங்கு சற்று ஓய்வு எடுக்கச்சொல்லிவிட்டு எவர் கண்ணிலும்படாமல் வழக்கமாக வயோதிகர் வேடமிட்டுசிம்மசேனரை சந்திக்க விரைந்தார்பதற்றமாய் வரும் அவர் வரவை சற்றும் எதிர்பார்க்காதவராய் "விருச்சிகரேநல்லவேளை வந்தீர்கள்!உங்களுக்கு ஆபத்து காத்திருக்கின்றது' என்கிற செய்தியினை உடனே கூறிவிட வேண்டுமென்று துடித்தேன்என்று பதறினார் சேனாதிபதி சிம்மசேனர்விருச்சிகரோ அதை காதில் வாங்கிக் கொண்டு
"முதலில் இளவரசி மீனாம்பிகை எங்கு இருக்கிறார் என்பதைச் சொல்லுங்கள்?"
"என் மாளிகையில் இருக்கும் பாதாளயறையில் இருக்கிறார்"

"அப்பாடாஇப்போது 'என்னுடைய ஆபத்துஎன்னவென்று சொல்லுங்கள்"
"நான் முன்னமே சொல்லியிருந்தேனே வீரப்பெண் மிதுனசுந்தரி!"
"ஆமாம்நீங்கள் கூட அவளையும் நம் திட்டத்திற்கு உபயோகித்துக் கொள்ளலாம் என்று கூறியிருந்தீர்களேஅதற்கென்ன இப்போது?"

"எந்தத் தடை வந்தாலும் தகர்த்தெறிந்துவிட்டு அவள் உதவியோடு ங்களைக் கொல்ல வேண்டுமென்று இளவரசர் துலாவர்மர் எனக்கு ஆணையிட்டுள்ளார்அதை நினைக்கும் என்மேனி நடுங்குகிறதுஎன்று பயத்துடன் கூறியதைக் கேட்ட விருச்சிகர் " அட இவ்வளவுதானா"

"உங்களுக்கு எல்லாமே எளிதாய் தெரிகிறது"
"வீண் பயம் வேண்டாம்அறிவாளிகளுக்கு எதுவுமே தடையாய் இருக்காதுநமது அடுத்த திட்டம்…"
"என்ன என்ன சீக்கிரம் சொல்லுங்கள்திட்டங்கள் போட்டே நாம் அரசர்களாகும் காலம் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கின்றது"
"அவசரம் கூடாதுஇச்சமயம் நிதானம் தேவைஅதாவது என்னிடத்தில் இருக்கும் தனுசு சுந்தரர் மூலமாக உங்களுக்கு ஆபத்தும், உங்கள் கண்கானிப்பில் இருக்கும் மிதுனசுந்தரியால் எனக்கு ஆபத்தும் இருக்கின்றதல்லவாஅவர்கள் மூலம் நமக்கு வந்திருக்கும் ஆபத்தை எய்தவர்களின் பக்கமே திருப்பிவிட்டால் ..."
"தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?"

"புரியவில்லைஅவர்கள் இருவரும் நம் பேச்சைத்தான் கேட்பார்கள்மிதுனசுந்தரி ஏற்கனவே இளவரசர் துலாவர்மரை கொல்லவேண்டும் என்று லட்சியமுள்ளவள்அதை இப்போது நமக்கு சாதகமாக பயன்படுத்தி.."
"அதாவது..."
"ஆம்அவளைக்கொண்டு துலாவர்மரை கொன்றுவிடவேண்டும்அதேபோல் என்னிடத்தில் இப்போது இருக்கும் தனுசு சுந்தரரைக் கொண்டு ரிசபவேந்தரை கொன்றுவிடவேண்டும்"
"அவர்கள் மறுத்தால்..."
"பதவிக்கு மயங்காதவர்கள் உண்டோபெரியபதவி தருகிறோம் என்று ஆசைகாட்டுவோம்கட்டாயம் அடிபணிவார்கள்பிறகென்னஇன்று இரவில் ஈருயிர்களின் மரணம்நாளை காலை நம் இருவரின் அரசபதவி ஏற்புஎன்று மகிழ்ச்சி பொங்க பேச
"நம் திட்டம் வெல்லுமாகனவு பலிக்குமா?" என்று சந்தேகத்துடன் கேட்க
"அது எப்படி பலிக்கும்என்று அசரீரி குரல் வரும் திசையை தெரிந்துகொள்ள சுற்றும் முற்றும் பார்க்க அங்கே அவர்கள் கண்டகாட்சி இருவரையும் உயிரோடு கொன்றுவிட்டது எனலாம்.

"மிதுனசுந்தரிஇளவரசர் துலாவர்மர்ஜோதிடர் மகரகுரு..நீ... நீங்கள் .." என்று உளறினார் சேனாதிபதி சிம்மசேனர்அதேநேரத்தில் "தனுசு சுந்தரர்,ரிசபவேந்தே.. ...தா.. தாங்களா?" என்று திக்கினார் விருச்சிகர்.

"நாங்களே தான்இதுவரையில் பகையாய் இருந்தவர்கள் இப்போது ஒரே இடத்தில் இருப்பது ஆச்சரியமாக இருக்கின்றதா?"
இருவரும் 'ஆமாம்என்பதுபோல் தலையாட்டினார்கள்.

"உங்களது சதித்திட்டம் எங்களுக்கு முன்னமே தெரியும்உங்கள் வாயால் வெளிவரச்செய்யவே நாங்கள் நடத்திய நாடகம் இதுஇதோ இவள் மிதுனுசுந்தரி அல்லஇளவரசி மீனாம்பிகையின் தோழி மிதுனமதிஇதோ இவர் தனுசு சுந்தரர் இல்லைஎன் மெய்க்காப்பாளார் தனுசுமல்லர்"என்கிற உண்மையை உடைத்தார்கள்"
'தாங்கள் கையும்களவுமாய் பிடிபட்டுவிட்டோம்' என்றும் பாராமல் ஆரவாரமில்லாமல் அமைதியாக இருந்தனர்.

"இவர்களின் மூலம் ஒர் உண்மை புரிந்ததுஅதாவது அரசரிடமோ அல்லது தலைவரிடமோ பிடிவாதம்கோபம்பொறாமை போன்ற குணங்களில் ஏதாவது ஒருகுணம் இருந்துவிட்டால் அதை வைத்துக்கொண்டு நமக்குகீழ் இருப்பவர்கள் பல பலனடைவார் என்பது தான்.இதெற்கெல்லாம் நாம் நன்றி சொல்ல வேண்டியவர்கள் மிதுனமதியும் தனுசுமல்லரும் தான்என்றார் ரிசபவேந்தர்.
"மகரகுரு கூறியது போல் ஒரு பெண்ணால் அனைத்து பிரச்சனையும் சுமூகமாக தீர்ந்துவிட்டதுகடகதேசமும் மேசகிரியும் ஒன்றுசேர்ந்துவிட்டதால் திட்டமிட்டபடி வரும் சித்திரை திங்கள் பௌர்னமியன்று ஆதிபகவன் கோவிலுக்கு கும்பாபிசேகமும் தங்கத்தேர் பவனி வருவதற்கு ஏற்பாடு செய்திடவேண்டும்என்றார்  துலாவர்மர்.
"ஒன்றை மறந்துவிட்டீர்கள்மச்சக்கன்னி இளவரசி மீனாம்பிகைக்கும் இளவரசர் துலாவர்மருக்கும் திருமணம் அதே நாளில் நடந்தால் மக்கள் ஆனந்தப்படுவார்கள்என்றார் ஜோதிடர் மகரகுரு.

"மீண்டும் ஒன்றை மறந்தீர்கள்அன்றைய தினமே மிதுனமதிக்கும் தனுசுமல்லருக்கும் திருமணம் முடித்துவைத்தால் எல்லோரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதப்பார்கள்என்று ரிசபவேந்தர் பரிந்துரைக்க அவர்கள் வெட்கத்தில் முகத்தை மூடிக்கொண்டனர்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++