Pages

Monday, 30 January 2017

எண்ணும், எழுத்தும் தமிழின் இருகண்கள்

 
நடை பெற்ற தேதி : 29.1.2017
இடம் : மணியம்மை மழலையர் பள்ளி , மதுரை.
நேரம்: காலை 9.00 மணி முதல் 
மதியம் 1.00 மணி வரை  




எண்ணும், எழுத்தும் தமிழின் இருகண்கள்
புதுக்கவிதை 
மதுரை கங்காதரன் 

ஆகாயம் மண் இல்லாத உலகேது
ஆண் பெண் இல்லாத வாழ்வேது
உயிர் மெய் இல்லாத பிறப்பேது
எண்ணும் எழுத்துமில்லாத மொழியேது.

மொழியின்  எழுத்துகளே சக்தி
மொழியின் எண்களோ சிவம்
சக்தியும் சிவமும் சரிபாதி
சமமாய்க் கொண்டதே மொழி.

ஆறுமுக் கடவுளே தமிழின் வடிவம்
ஈராறு பன்னிரண்டு கண்கள் உயிரெழுத்துகள்
ஈராறு கரமும் ஓராறு முகமோ மெய்யெழுத்துகள்
ஏந்திருக்கும் வேலோ ஆயுத எழுத்து.

ஒரு நாளைக்கு 24மணி நேரம்
ஒரு வாரத்திற்கு 7 நாட்கள்
எந்நேரமும் எந்நாளும் குறிப்பதோ 24X7
எம்தமிழில் உள்ள எழுத்துகளோ 247.

வான்புகழ் பெற்ற வள்ளுவரும் பாரதியும்
தேன்தமிழ் தந்த கம்பரும் இளங்கோவும்
செந்தமிழ் வளர்த்த முத்தமிழும் முச்சங்கமும்
செம்மொழி சிறப்பானதே தமிழ் எழுத்துகளாலே. 
  
அந்நிய எண்களை அரியணையில் ஏற்றியதால்
அருந்தமிழ் எண்கள்  அனாதையாய் கிடகின்றது
அயல்மொழி எழுத்துகளை தமிழில் கலப்பதால்
அன்னைத் தமிழை அடியோடு புதைத்துவிடாதே.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&