Pages

Monday 25 September 2017

தடையை உடைத்துத் தமிழை உயர்த்து! - புதுக்கவிதை

தடையை உடைத்துத் தமிழை உயர்த்து!
புதுக்கவிதை
மதுரை கங்காதரன்

தமிழெனச் சொன்னால் வாய் மணக்கும்
தமிழனெனச் சொன்னால் மெய் சிலிர்க்கும்
தமிழ்மொழி படித்தால் மொழி காக்கப்படும்
தமிழ்மொழி அழிந்தால் இனமே அழியும்.

கணினியின் ஆட்சி உலகெங்கும் பரவுது
கணினியில் உள்ள மொழிகள் வளருது
கணினியே கதியென இளைஞர்கள் இருக்குது
கணினியில் கற்றலே இத்தலைமுறை விரும்புது

பழந்தமிழ் சிறப்பையே மேடையில் பேசலாமா?
புதுமை கணினித் தமிழை ஏற்காமல் இருக்கலாமா?
தமிழை ஆங்கிலம் கலந்துக் கூசாமல் பேசலாமா?
தமிழ் வாழ்க! என வெட்கமில்லாமல் சொல்லலாமா?  

தமிழைத் தடுக்குது ஆங்கில மோகம்
தமிழைத் தடுக்குது ஆங்கில ஆதிக்கம்
தமிழைத் தடுக்குது ஆங்கில இணையம்
தமிழைத் தடுக்குது ஆங்கில வலைதளம்

கையும் கைப்பேசியுமாய் திரியும் மடமை
காலத்தின் கட்டாயமாய்  மாறும் மனநிலை
மொழித் தமிழ் விரைவில் அழியும் நிலைமை
கணினித் தமிழ் பயிலத் தமிழர்கள் விரும்பாமை! 

கணினித் தமிழை எளிமையாக்க வேண்டும்
கணினியில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்
தொடக்கக் கல்வியிலே தமிழ் புகுத்த வேண்டும்
தடையை தகர்த்துத் தமிழைக் கற்றிட வேண்டும்.

தற்பெருமைப் பேசுவதை நிறுத்திட வேண்டும்
தாய்மொழி தமிழ் வளர்ச்சியை நிரூபிக்க வேண்டும்
செழியப் படைப்புகள் கணினித் தமிழில் வேண்டும்
செம்மை மொழித் தமிழென பரப்பிட வேண்டும்.

இலக்கியத்திற்கு இயற்றமிழ் என்பது ஒன்று
இனியஇசைக்கு இசைத்தமிழ் என்பது இரண்டு
நாடகத்திற்கு நாடகத்தமிழ் என்பது மூன்று
நான்காய் கணினித் தமிழ் வளர்ப்பதே நன்று.  

நன்றிவணக்கம்.
&&&&&&&&

No comments:

Post a Comment