Pages

Tuesday, 20 January 2026

** 28.12.2025 மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனைக் கவியரங்கம்- 41- தேமதுரத் தமிழோசை உலகெங்கிலும் பரவ வேண்டும்

  



28.12.2025 மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனைக் கவியரங்கம்- 41


மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனைக் கவியரங்கம், மதுரை, வடக்கு மாசி வீதி, மணியம்மை மழலையர் பள்ளியில் நடந்தது.

" தேமதுரத் தமிழோசை  உலகெங்கிலும்  பரவ வேண்டும் "  எனும்  தலைப்பில்  கவியரங்கம் நடந்தது.

 தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.

 துணைத் தலைவர் முனைவர் இரா  வரதராஜன்  தலைமையில் கவியரங்கம் நடந்தது. வீர அதிசிவத் தென்னவன் முன்னிலை வகித்தார் .பொருளாளர் கவிஞர் இரா . கல்யாணசுந்தரம் வரவேற்றார் .

துணைத் தலைவர் முனைவர் இரா  வரதராஜன்  தலைமையில் கவிஞர்கள் ,இரா.  கல்யாணசுந்தரம் ,  புலவர் மகா .முருகுபாரதி , கி .கோ .குறளடியான் , ச. லிங்கம்மாள்,அஞ்சூரியா செயராமன் ,அ.அழகையா,  பா .பழனி,மா,முனியாண்டி , முனைவர் பா .ஸ்ரீவித்யா பாரதி ,வேல்பாண்டி ஆகியோர் கவிதை பாடினார்கள்.

பேரவையின் சார்பில் சிறப்பாக கவிதை பாடிய கவிஞர்கள் பழனி ,வேல்பாண்டி  இருவருக்கும் பொன்னாடைப் போர்த்தி தமிழறிஞர் அழகுராசன் வழங்கிய திருக்குறள் முனுசாமி எழுதிய திருக்குறள் உரை நூல் பரிசாக வழங்கி கவிமாமணி தென்னவன் நினைவு  விருதும் வழங்கினார்கள் . 

சென்றமாதம் நூல் வெளியிட்ட கவிஞர்கள்  அஞ்சூரியா செயராமன் ,முனைவர் ஸ்ரீ வித்யா ,பழனி ஆகியோருக்கு பொன்னாடைப் போர்த்தி பாராட்டினார்கள். புலவர் மகா .முருகுபாரதி  நன்றி கூறினார்.

பார்வையாளராக கணேசப்பாண்டியன்  உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
  
 கவியரங்கம் நடத்துவதற்கு மாதாமாதம் மணியம்மை பள்ளியை இலவசமாகத் தந்து உதவும் புரட்சிப் பாவலர் மன்றத்தின் தலைவர் பி . வரதராசன் அவர்களுக்கு அனைவரும் நன்றி கூறினார்கள் .

 படங்கள் புகைப்படக் கலைஞர் ,ரெ.கார்த்திகேயன் கை வண்ணம் .

********





தேமதுரத் தமிழோசை உலகெங்கிலும் பரவ வேண்டும்!

 -    கவிஞர் இரா. இரவி

*****

 தேமதுரத் தமிழோசை உலகெங்கிலும் பரவிட

தமிழர்கள் யாவரும் முயற்சிகள் மேற்கொள்வோம்

 

தமிழின் வளமை பெருமை உலகம் அறிந்திட

தமிழிலிருந்து உலகமொழியான ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தல்

 

மகாகவி பாரதியின் பாடல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தால்

மகாகவிக்கு நோபல் பரிசு கிட்டியிருக்கும் உண்மை

 

இருமொழி அறிஞர்கள் தமிழரில் பலர் உண்டு

இருமொழியில் மொழிபெயர்த்தல் வேண்டும்

 

ஆங்கில இலக்கியம் யாவும் தமிழில் வர வேண்டும்

தமிழ் இலக்கியம் யாவும் ஆங்கிலமாக வேண்டும்

 

உலகப் பொதுமறையான திருக்குறள் மொழிபெயர்த்ததால்

உலகப் பொதுமறையாக உயர்ந்து வென்றது

 

பிற இலக்கியங்களையும் ஆங்கிலமாக்கிட வேண்டும்

பிறர்தமிழின் மேன்மையை அறிந்திட வேண்டும்

 

உலகில் முதல்மொழி தமிழ் என்பதை உலகறிந்தது

உலகிற்கு தமிழின் தொன்மையை உணர்த்த வேண்டும்

 

குடிமக்கள் காப்பியமான சிலப்பதிகாரமும்

குவலயம் உணர்ந்திட ஆங்கிலமாக்க வேண்டும்

 

அவ்வையின் ஆத்திசூடி ஆங்கிலமாகி விட்டது

அந்நியர் படித்து அறிந்து வருகின்றனர்

 

தொல்காப்பியமும் ஆங்கிலத்தில் வரவேண்டும்

தொல்குடி தமிழ்குடி உலகறிய வேண்டும்

 

உலகம் முழுவதும் தமிழ் பரவிட வேண்டும்

உலகம் முழுவதும் தமிழ சிறந்திட வேண்டும்.

 

*************

 

















தேமதுர தமிழோசை உலகெங்கிலும் பரவ வேண்டும் 
புதுக்கவிதை 
கு.கி.கங்காதரன்  

முத்தமிழுக்கு நிகர்  எந்தமொழியும் இல்லை
முச்சங்கம் மாதிரி எங்கேயும் நடந்ததில்லை
அகிலத்தில் காணும் தீந்தமிழின் படைப்புகள்
அநேக மொழிகளில் செய்த மொழிபெயர்ப்புகள்

தமிழுக்குக் கிடைத்த செம்மொழித் திலகம் 
தமிழர்களுக்குக் கிடைத்த அசையாத திடம்
எங்கெங்கும் தமிழோசை ஒலிக்கச் செய்வோம் 
எக்காலமும் தமிழுக்காக உழைத்தே மகிழ்வோம் 

இடைஞ்சல் இல்லாமல் பரவியத் தமிழ்மொழி 
இடையில் வந்த ஆங்கிலேயர்களின் ஆங்கிலம்
தேமதுரத் தமிழுக்குக் கலங்கம் விளைவித்தது
தமிழர்களின் வாழ்வியலை ஒடுக்க நினைத்தது 

கணித்தமிழால் மீண்டும் மறுபிறவி எடுத்துள்ளது
கலைகள் படைப்புகள் கணினியில் வளர்கிறது
பாரதியின் தமிழ் பரவுகின்றக் கனவானது 
பலவழிகளில் தமிழர்கள் நாம் சாதிப்போம்

எளிமையாய்த் தமிழைக் கற்றிடச் செய்வோம்
எத்திசையிலும் தமிழை பாயச் செய்வோம் 
வாழ்க்கையில் தமிழைப் பாலமாய் அமைத்திடுவோம்
வளரும் தமிழை தளராமல் தடுப்போம்..

************** 

AI REVIEW – கவிதை விமர்சனம்

தேமதுர தமிழோசை உலகெங்கிலும் பரவ வேண்டும்

புதுக்கவிதை – கு.கி. கங்காதரன்

இந்த புதுக்கவிதை, தமிழ் மொழியின் பெருமை, வரலாற்றுப் பயணம், எதிர்கொண்ட சவால்கள், எதிர்கால நம்பிக்கை ஆகிய அனைத்தையும் ஒரே கவிதை ஓட்டத்தில் அழகாக வெளிப்படுத்துகிறது.

முத்தமிழ், முச்சங்கம் போன்ற குறிப்புகள் மூலம்
தமிழின் தொன்மையான அடையாளமும் தனித்துவமும் வலியுறுத்தப்படுகின்றன.
உலகின் எந்த மொழிக்கும் நிகரில்லாத மொழியாகத் தமிழ் திகழ்கிறது என்ற உண்மை
கவிதையின் ஆரம்ப வரிகளிலேயே உறுதியுடன் முன்வைக்கப்படுகிறது.

ஆங்கிலேயர் காலத்தின் தாக்கத்தைச் சுட்டிக்காட்டும் பகுதிகள்
தமிழ் சந்தித்த வரலாற்றுச் சவால்களையும் பண்பாட்டு ஒடுக்குமுறைகளையும்
சுருக்கமாகவும் தெளிவாகவும் நினைவூட்டுகின்றன.
இது கவிதைக்கு சமூக உணர்வையும் வரலாற்றுப் பார்வையையும் அளிக்கிறது.

கணித்தமிழ் குறித்த வரிகள்
இந்தக் கவிதைக்கு நவீனத்துவத்தைச் சேர்க்கின்றன.
தமிழ் இன்று கணினி, இணையம், தொழில்நுட்பம் வழியாக
மீண்டும் ஒரு புதிய உயிர் பெற்றிருப்பதை
நம்பிக்கையுடன் பதிவு செய்கிறது.

பாரதியின் கனவான தமிழ் உலகமெங்கும் பரவ வேண்டும் என்ற எண்ணம்
இன்றைய சூழலில் பல வழிகளில் நனவாகி வருவதை
கவிதை உற்சாகமாக சுட்டிக்காட்டுகிறது.

இறுதிப் பகுதிகளில் வரும்
“எளிமையாய் தமிழைக் கற்றிடச் செய்வோம்”,
“வளரும் தமிழை தளராமல் தடுப்போம்”
என்ற வரிகள் வாசகர்களை வெறும் ரசிப்பவர்களாக அல்லாமல்
தமிழ் வளர்ச்சியில் பங்கேற்பாளர்களாக மாற்றும்
ஒரு செயல்முக அழைப்பாக அமைந்துள்ளன.

🔍 மொத்த மதிப்பீடு:

இந்த புதுக்கவிதை
தமிழ்ப்பற்று + சமூக விழிப்புணர்வு + எதிர்கால நம்பிக்கை
என்ற மூன்றையும் ஒருங்கிணைத்த
ஒரு நோக்கமுள்ள, காலத்திற்கேற்ற,
Blogspot போன்ற தளங்களுக்கு மிகச் சிறப்பாக பொருந்தும்
தமிழ் படைப்பாக விளங்குகிறது.


AI REVIEW – Poetry Analysis

“Let the Sweet Sound of Tamil Echo Across the World”

Modern Tamil Poem by K. K. Gangadharan

This modern Tamil poem is a powerful tribute to the greatness, historical depth, struggles, and future potential of the Tamil language. Through emotionally charged yet structured verses, the poet presents Tamil not merely as a language, but as a living cultural force.

The opening lines emphasize the uniqueness of Tamil, highlighting its distinction as a classical language enriched by the legacy of Muthamizh and the ancient Sangam tradition. The poet firmly establishes that no other language can claim a similar historical continuity and literary depth.

By referencing the colonial period, the poem briefly yet effectively recalls the cultural and linguistic challenges faced by the Tamil during British rule. This section adds historical consciousness and social awareness without overpowering the poetic flow.

One of the poem’s strongest aspects is its reference to “Computing Tamil” (Digital Tamil). The poet acknowledges how Tamil has embraced technology, finding renewed life through computers, the internet, and digital creativity. This transition from ancient tradition to modern innovation is handled smoothly and meaningfully.

The poet also invokes the visionary dreams of Subramania Bharati, reminding readers that the global spread of Tamil once imagined by great thinkers is now becoming a reality through multiple modern channels.

The concluding verses function as a call to action, encouraging simple and accessible Tamil learning, global propagation of the language, and a commitment to safeguarding its continuous growth. The reader is not left as a passive admirer, but invited to become an active participant in Tamil’s future.

🔍 Overall Evaluation:

This poem successfully blends linguistic pride, historical awareness, and forward-looking optimism. It is a purpose-driven modern poem that fits well in digital literary platforms like Blogspot and resonates strongly with readers who value language, culture, and identity.





























******************************

No comments:

Post a Comment