Pages

Monday, 7 January 2013

SWOT இருந்தால் உங்களுக்கு பெரிய பதவி கிடைப்பது உறுதி - YOU CAN GET GOOD POSITION WITH 'SWOT'

SWOT (கடின உழைப்பு) இருந்தால் 
உங்களுக்கு பெரிய பதவி கிடைப்பது உறுதி 
YOU CAN GET GOOD POSITION WITH 'SWOT'
அனுபவப் பொன்வரிகள் 
மதுரை கங்காதரன் 



இன்றைய இளைஞர்கள், மாணவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் நன்றாக படித்து நல்ல மதிப்பெண்கள் எடுத்துவிட்டால் யார் வேண்டுமானாலும் வேலைக்கு எடுத்துக்கொள்வார்கள் என்று. அது அந்தக்காலம். 


இன்றைக்கு நல்ல மதிப்பெண்களோடு SWOT (கடின உழைப்பு) இருந்தால் தான் நீங்கள் நினைக்கும் வேலை கிடைக்கும். முதலில் SWOT என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளவேண்டும்.


S  -  SPEAKING       (பேச்சாற்றல்)
W - WRITING         (எழுத்தாற்றல்)
O -  OBSERVING    (உற்று நோக்குதல்)
T -  THINKING      ( சிந்தனை)


ஏன் மேற்க்கூரியவைகள் வேண்டும் என்று கேட்கிறார்கள். அவைகள் இருந்தால் தான் ஒருவரால் எந்த ஒரு வேலையையும் நன்றாக புரிந்து கொண்டு சிறப்பாக செய்ய முடியும். அதோடு நில்லாமல் அவர்கள்  புரிந்துகொண்ட தகவல்களை மற்றவர்களுக்கு தெளிவாக எடுத்துரைக்க முடியும் அல்லது பரிமாறிக்கொள்ள முடியும். இவ்வகையான திறமைகள் இல்லாது போனால் உங்களுக்கு பெரிய வேலை கிடைப்பது அரிதான காரியம் தான். 


SWOT என்பது கடின உழைப்பு என்பது பொருள். வெறும் கடின உழைப்பு மட்டும் இருந்தால் போதாது. மேற்கூறிய நான்கும் இருந்தால் உங்களுக்கு கூடுதல் மகிப்பு கிடைக்கும்.


வேலைக்கு மட்டுமில்லாமல் , சிறந்த நிர்வாகத்திற்கும், ஒரு நிறுவனத்தை சிறப்பாக நடத்த்துவதற்க்கும், பெரிய பொறுப்பில் இருப்பவர்களுக்கும்  தேவையான ஒன்று. குறிப்பாக பெரிய  பதவியில் இருப்பவைகள் மேற்கூறிய திறமைகள் இருந்தால் தான் அந்த பதவியில் தக்கவைத்துக் கொள்ளமுடியும். 


ஒரு வேளை இத்தகைய திறமைகள் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக பெரிய நிர்வாகப் பதவி கிடைத்துவிட்டால் உடனே அந்த நான்கு திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் அத்தகைய திறமைகள் உள்ளவர்களை தங்கள் பக்கத்தில் வைத்துக்கொள்ளவேண்டும்.  அவர்களிடம் மூலம் இந்த திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் ஒவ்வொரு சிறிய வேலைக்கும் அவர்களுடைய தயவு எதிர்ப்பார்த்து நிற்க வேண்டியிருக்கும். ஒருகட்டத்தில் அவர்களே உங்களுக்கு போட்டியாக வந்து உங்களுடைய பதவியை பறித்துக்கொள்ளும் அபாயம் ஏற்படும். 


ஒரே நாளில் இந்த ஆற்றல்கள் வந்துவிடாது. சிறுக சிறுகத் தான் வரும். அதற்கு தினமும் இரண்டு அல்லது மூன்று புதிய கடிமான சொற்களை அகராதியின் மூலம் அர்த்தம் தெரிந்து கொண்டு, அதைக்கொண்டு இரண்டு அல்லது மூன்று வாக்கியங்களை அமைத்து பழக வேண்டும். தவறுகள் இருந்தாலும் பரவாயில்லை. தினமும் முயற்சி செய்து வரவேண்டும். அதேபோல் பத்திரிகை வாசிப்பு மிகவும் அவசியம். ஐந்து நிமிடங்கள் இருந்தால் போதுமானது. அவ்வாறு வாசிக்கும்போது தெரியாத சொற்களுக்கு அகராதியின் மூலம் அர்த்தம் தெரிந்து கொள்ளவேண்டும்.


முதலில் அதை பின்பற்றுவது கடினமாகவும், சோம்பேறித்தனமாகவும், இதெல்லாம் தேவையா? என்றும் தோன்றும். ஒன்றை புரிந்துகொள்ளுங்கள். உங்களுடைய நேரம் ஏதாவது ஒரு வகையில் உங்களுடைய வாழ்க்கைக்கு தேவையானவற்றிற்கு செலவிட்டுப் பழகிக்கொள்ளுங்கள். நீங்கள் தவறவிட்ட நேரம் திரும்ப வராது.


இவ்வாறு செய்துகொண்டு வந்தால் நீங்கள் நினைக்கும் பெரிய பதவி கிடைப்பதோடு அதில் நிலையாக நிலைத்து நிற்கவும் முடியும். 

   

1 comment: