உன்னால் முக்காலத்தையும் வெல்ல முடியும்
YOU CAN DEFEAT TIME
அனுபவப் பொன்வரிகள்
மதுரை கங்காதரன்
இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் இறந்த காலத்தை அதாவது கடந்த காலத்தை வென்றவர்கள் தான். கடந்த காலத்தில் எத்தனையோ தோல்விகள், வெற்றிகள், அவமானங்கள், விமர்சனங்கள், நிறைவேறாத ஆசைகள், அடிகள், மகிழ்ச்சிகள், எதிர்பாராத திருப்பங்கள், சந்திப்புகள், உறவுகள் , நட்புகள், எதிரிகள் இன்னும் பலவற்றை சந்திருக்கலாம். அவ்வளவையும் கடந்து நிற்பது ஒரு சாதனையே.
இவ்வளவு தடைகளையும் தாண்டிய நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கும் தடையையும், வருங்காலத்தில் வரும் தடையையும் தகர்த்தெறிய நிச்சயம் உங்களால் முடியும்.
நிகழ்காலத்தை வெல்வதும், வருங்காலத்தை உங்கள வசமாக்கிக் கொள்வதும் உங்கள் கையில் தான் இருக்கின்றது. ஆனால் அவற்றிக்கு குறுக்கே இருப்பது சந்தேகம், பயம், கவலை ஆகியவைகள்.
இன்றைய பொழுது எப்படி கழியுமோ என்றும், நாளை பொழுது எவ்வாறு விடியுமோ என்கிற சந்தேகம் தான் உங்களை அலைக்களைக்கச் செய்கிறது. அந்த சந்தேகம் அதிகமாக அதிகமாக பயம் தொற்றிக்கொள்கிறது. பயம் கூடக்கூட கவலை பரவுகின்றது. அதனால் உங்களுக்கு தோல்வி மட்டுமே உண்டாகின்றது.
அதற்கு முழுமுதற்காரணம் தன்னம்பிக்கை இன்மையே.இன்றும், நாளையும் எனதே என்று நீங்கள் எப்போதும் தன்னம்பிக்கை கொள்ளுங்கள். சந்தேகம் உங்களை தொடமுடியாமல் ஓடிவிடும். அதனால் பயம் இருக்கிற இடம் தெரியாமல் பறந்துவிடும். பிறகு கவலை மறைந்துவிடும். இப்போது உங்களுக்கு கிடைப்பது வெற்றி ஒன்றே!
தன்னம்பிக்கை கொள்வீர் !
சந்தேகம், பயம், கவலை போன்ற தடைகளை வெல்வீர்.
Good
ReplyDelete