Pages

Monday 13 January 2014

74. How do you know ? Is your career path is correct ? 74. உங்கள் வாழ்கைப் பாதை சரிதானா?

HAVE A NICE LIFE STEPS 
MADURAI GANGADHARAN 

74. How do you know ? Is your career path is correct ? 
 
* Your present life is without any problem or you can able to solve all problems  then make sure that your life path is right !  But If you are facing with new problems which cannot be solved in your daily life then you must be forced to change your life direction .
 
* Ordinary man can deceive in very small scale . But acting person only can cheat others in large scale.
 
* It is true that student are getting their life lessons or knowledge more from outside than  their currently studying books. 
 
* If you want to try the newest ! Leave that old . Try for new one ! Then you must get it surely. 
 
* If you want to give somethings to others then hundred arms bearers come towards you. If you start to give,  that will become even a thousand . But when he's in trouble himself and to ask for some help ! Nobody will not be helped . This is today's world.

Success steps continuous next ...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இனிய வாழ்க்கையின்  வெற்றிப்படிகள் 
மதுரை கங்காதரன் 


74. உங்கள் வாழ்கைப் பாதை சரிதானா? எப்படி தெரிந்து கொள்வது?
 
* நீங்கள் வாழும் இப்போதுள்ள வாழ்க்கை எவ்வித     பிரச்சனை இல்லாமல் அல்லது வரும் பிரச்சனைகளை தீர்த்து வைக்கக் கூடியதாக இருந்தால் உங்கள் வாழ்க்கை சரியான 
பாதையில்  போய்க் கொண்டிருக்கின்றது என்பது உறுதி கொள்ளலாம். அதில்லாமல் 
தினமும் புதுப்புது தீர்க்க முடியாத பிரச்சனைகளை எதிர்கொண்டால் உங்கள் வாழ்க்கை 
திசையை கட்டாயம் மாற்றியே தீர வேண்டும்.
 
* சாதாரண மனிதனால் மிகச் சிறிய அளவில்தான் ஏமாற்ற முடியும். ஆனால் நடிப்பினால் மட்டுமே மிகப்மிகப் பெரிய அளவில் ஏமாற்ற முடியும்.
 
* தற்போது படிக்கும் ஒரு மாணவனுக்கு அவனுடைய வாழ்க்கைத் தேவையானவைகள் 
பெரும்பாலும் அவன் படிக்கும் புத்தகத்தில் கிடைப்பதைக் காட்டிலும் வெளியில் தான் 
அதிகம் கிடைக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.
 
* முயற்சி இருந்தால் புதியவை உனக்கு வேண்டுமென்றால் அல்லது அடைவதென்றால்
இப்போது பிடித்துக்கொண்டு இருப்பதை விட்டு விட்டால் தான் அது சாத்தியமாகும். அதாவது  பழையது  விட்டு விடு. பிறகு முயற்சி செய் ! புதியது தானாக கிடைக்கும். புத்திசாலிகள்  கிடைத்த வாய்ப்புகளை வைத்துக்கொண்டு புதியனவற்றிற்கு முயற்சி செய்கிறார்கள். கிடைத்தவுடன் பழையதை விட்டு விடுகிறார்கள்.
 
* நீங்கள் கொடுக்க நினைத்தால் உங்களைகளை நோக்கி நூறு கைகள் ஏந்தும். கொடுத்தால் அதுவே ஆயிரம் கூட ஆகும். ஆனால் அவர் சிரமப்படும் சமயத்தில் அவரே வாய்விட்டு உதவி கேட்டால் கூட ஒரு கை கூட உதவ வராது. இது தான் இன்றைய உலகம்.   


 வாழ்க்கையின் வெற்றிப்படிகள் இன்னும் உயரும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
     

No comments:

Post a Comment