'காலம்' நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடங்கள்
Life lessons that you learn from Nature
Life lessons that you learn from Nature
புதுக்கவிதை
மதுரை கங்காதரன்
* தெரியாததை தெரிய வைக்கின்றது
புரியாததை புரிய வைக்கின்றது
* கிடைக்காததை கிடைக்கச் செய்கின்றது
கிடைத்தை தொலைக்க / இழக்கச் செய்கின்றது
* சோகத்தை துடைத்து மகிழ்ச்சி கொடுக்கின்றது
தோல்விகளை சமாளித்து வெற்றி தருகின்றது
* இல்லாத உறவுகளை புதிதாக கொடுக்கின்றது
இருக்கும் உறவுகளை மறக்கச் செய்கின்றது
*அனுபவமில்லாததை அனுபவிக்க வைக்கின்றது
பழகாததை பழக்க வைக்கின்றது
* எதையும் தாங்கும் இதயத்தை கொடுக்கின்றது
கொடுத்ததை திருப்பி எடுத்துக் கொள்கின்றது
* நினைவுகளை மறக்கச் செய்கின்றது
மறந்ததை நினைக்கச் செய்கின்றது
* நிலையானதை மாற்றச் செய்கின்றது
மாற்றியதை நிலையாக நிற்க வைக்கின்றது
* விரும்புவதை வெறுக்கச் செய்கின்றது
வெறுப்பதை விரும்பச் செய்கின்றது
* உண்மைகளை பொய் என்று சொல்ல வைக்கின்றது
பொய்களை உண்மையென சித்தரிக்கின்றது
* கண்ணால் காண்பதை நம்பச் சொல்கின்றது
காதால் கேட்டு ஏமாறச் செய்கின்றது
* கஷ்டத்திற்கு பிறகு வளமான வாழ்க்கை தருகின்றது
நல்ல வாழ்க்கைக்குப் பிறகு கஷ்டம் பல தருகின்றது
* நல்லவர்களை அழ வைத்து வேடிக்கை பார்க்கின்றது
அழுபவர்களுக்கு சிரிப்பை பரிசாக கொடுக்கின்றது
* அன்புள்ளவர்களை அரக்கர்களாக மாறச் செய்கின்றது
அரக்கர்களின் இதயத்திலும் ஈரம் பிறக்கச் செய்கின்றது
* கோழைகளை வீரனாக்குகின்றது
வீரர்களை கோழைகளாக்குகின்றது
* உங்களை எனக்கு அறிமுகப் படுத்துகின்றது
நான் படைத்ததை படிக்கச் செய்கின்றது
* காலத்தின் பிடியில் நாம் கை பொம்மைகள்
ஆட்டுவிட்டபடி ஆட வேண்டும்
* காலம் ஒரு தாயாக அன்பைக் கொடுக்கின்றது
காலம் ஒரு ஆசானாக நமக்கு அறிவைக் கொடுக்கின்றது
* காலம் ஒரு நண்பனாக நமக்கு பாதுகாக்கின்றது
காலம் ஒரு வழிகாட்டியாக நமக்கு இருக்கின்றது
* காலம் காற்றும் மழையும் தருகின்றது
காலம் கல்லையும் கனியச் செய்கின்றது
* காலம் முல்லையும் மலரையும் படைக்கின்றது
காலம் உன்னையும் என்னையும் சந்திக்கச் செய்தது
* காலத்தை வெல்ல நாம் பிறக்கவில்லை
காலத்தை அனுபவிக்க நாம் பிறந்திருக்கிறோம்
* நாம் வாழ்கையில் நம்பிக்கை கொண்டால் உதவுகின்றது
வாழ்க காலம் !
அது வரும் காலத்தில் நமக்கு நல்லதை தருமென்று நம்புவோமாக!
நன்றி, வணக்கம்..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ @@@@@@@@@@@@@@@@@
No comments:
Post a Comment