Pages

Saturday 25 January 2014

75. Five types of human lives - 75. ஐந்து வகையான மனித வாழ்க்கைகள்

HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN

75. Five types of human lives


1 . Dividends life :

Always these people are selfish . They do any work / job / solve task  for other with profits orient and it should be only their goal . They are always  giving important to their selfishness / family benefits. Even though they are having money ,they will not think to help others. They will make profit by helping others . Kindness , patience , love are rare to see with these people. They will not believe others so easily. They do all their works  themselves . By frank to say, they have no plan what work ? when they will do? You should have extra alert with this people . They keep anyone them-self up to their task fulfilled . After finished their work, they will through away  who ever he may be. Rare to see good qualities with this people. So we can't expect anything from them. They may be called as 'cunning' people.


2 . With profit and service to life :

This type of people will serve others to earn good name in society . They must expect lower profit / gain . Each deed in his work in the community for profit also. They will help , but with a slight margin . Even though they are having good qualities, but they do not hurt others. They believe others depending upon  the basis of long period working with them.


3 . Service life :

In fact , they may called 'God's Sons / Daughters'. They don't bather them-self and having interest to help others. Why ? Even if they do not care about their family . Dedicated their life to others . They will be ready to help others at any time who ever, where ever, when ever may be . Even they are not having sufficient money to help others, they will collect from others and do their work. Easily believe anyone. Because of their service mind ,  poor people are living some extend . If we have many people like them, very soon the world will become a paradise. 


4 . Waste Life :

This type of people do not able to stand by their own legs. They ride with the help of other's backs . They speak well rather than doing.  They create problems everyday . It is very difficult to change their characters . Do not  do worth full . They are busy with roaming , slashed spending and scolding others. It is possible they can live best life . But they have to try for that. Giving love, will be the best medicine for them. But those who are having taste in this life is very difficult to change them. We must care our self before change this type of life. 


5 . Dead life :

Their lives are not capable of anything . They are No Use.  It is very difficult to run the life with them. They don not accept anything . They are a burden to others .

What about your life  1 or 2 or 3 or 4 or 5

However, we think about how life can change for the better . The transition is in our hands .

Live a good life ..


******************************************************************************************

வாழ்கையின் வெற்றிப்படிகள்
 
மதுரை கங்காதரன் 

75. ஐந்து வகையான மனித வாழ்க்கைகள் 


1. லாப வாழ்க்கை :

இவ்வகையான மனிதர்கள் பெரும்பாலும் சுயநலவாதிகளாக இருப்பார்கள். எந்த வேலை / காரியம் / தொழில் செய்தாலும் 'லாபம்' ஒன்றே குறிக்கோளாக இருப்பார்கள். அதாவது தன்னலம் / குடுமபநலம் மட்டுமே அவர்களுக்கு முக்கியமாகத் தெரியும். பணம் இருந்தாலும் பிறர்க்கு உதவி செய்வது மிகவும் அரிது. அப்படி செய்தாலும்  கொள்ளை லாபம் அடிப்பார்கள்.  இவ்வகையான  மனிதர்களிடம் ஈவு, இரக்கம் , பொறுமை , அன்பு பார்ப்பது அரிது. பிறரை அவ்வளவு எளிதாக நம்பமாட்டார்கள். எல்லா வேலைகளையும் தாங்களே செய்வார்கள். அவர்கள் எந்த நேரத்தில் எதைச் செய்வார்கள்  என்பது சொல்வது கடினம். அவர்களிடம் சற்று உஷாராக இருக்கவேண்டும். காரியம் கைகூடும் வரை யாரையும் வைத்துக்கொள்வார்கள். காரியம் முடிந்துவிட்டால் யாரையும் கழற்றி விடுவார்கள். அவர்கள் ஏதாவது செய்வார் என்று எதிர்பார்ப்பது நல்ல பலனைத் தராது. அவர்கள் 'காரியவாதிகள்' என்றே அழைக்கலாம். 


2. லாபத்துடன் சேவை வாழ்க்கை : 

இவ்வகையான மனிதர்கள் சமூகத்தில் நல்ல பெயர் எடுப்பதற்காக சேவைகளைச் செய்வார்கள். அதில் குறைந்த லாபம் / ஆதாயம் கட்டாயம் எதிர்பார்ப்பார்கள். ஒவ்வொரு செயலிலும் சமுதாயத்தில் தனக்கு புகழ் கிடைக்க லாபத்துடன் சேவையும் செய்வார்கள். இவர்கள்  உதவி செய்வார்கள் ஆனால் சற்று ஆதாயத்துடன். அதிகப்படியான நல்ல குணங்கள்  இல்லாவிட்டாலும் கெட்டதை செய்யமாட்டார்கள். நீண்ட நாட்கள் தன்னிடம் விசுவாசமாக வேலை செய்வதைப் பொறுத்து நம்புவார்கள்.  


3. சேவை வாழ்க்கை :

இவர்கள் உண்மையில் தெய்வப்பிறவிகள். தன்னலம் கருதாது பிறரின் நலம் கருதி வாழ்கை வாழ்வார்கள். ஏன்? தங்களுடைய குடும்பத்தைப் பற்றி கூட கவலை படமாட்டார்கள்.  பிறருக்காக தன்னை அர்பணித்துக் கொள்வார்கள்.  எந்த நேரத்திலும் உதவ தயாராக இருப்பார்கள். தங்களிடம் இல்லாவிட்டாலும் பிறரிடம் கேட்டாவது உதவுவார்கள் / சேவை மேற்கொள்ளுவார்கள். எளிதில் பிறரை நம்பிவிடுவார்கள். அவர்களால் தான் ஏழை எளியோர்கள் ஓரளவாவது வாழ்கிறார்கள். அவர்களைப் போல் பலரும் இருந்தால் இந்த உலகம் சொர்கமாக மாறும் என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இருக்க முடியாது. அவர்கள் 'தெய்வப்பிறவிகள்' என்றே அழைக்கலாம்.  


4. வெட்டி வாழ்கை :

இவர்கள் அனேகமாக பிறர் முதுகில் சவாரி செய்பவர்கள். வெற்று சவுடால் பேசுபவர்கள். அவர்களால் தினமும் பிரச்சனைகள் வரும். அவர்களை திருத்துவது சற்று கஷ்டமான வேலை. சொல்வதை செய்யாமல் தேவையில்லாமல் பலவற்றைச் செய்வார்கள். ஊர் சுற்றுவது, கண்டபடி செலவழிப்பது, வம்பிற்கு இழுப்பது இவர்களுடைய வேலையாய் இருக்கும். இவர்கள் மனது வைத்தால் நல்லபடியாக வாழ்க்கை வாழலாம். இவர்களிடம் தொடர்ந்து அன்பு காட்டினால் சிறந்தவர்களாக மாற வழியுண்டு.  ஆனால் இந்த வாழ்கையில் ருசி  கண்டவர்களை மாற்றுவது கடினம் தான். ஆகவே இந்த வாழ்க்கை மாறுவதற்கு முன் தக்க முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.       

5. நடைபிண வாழ்க்கை :

இவர்களின் வாழ்க்கை  எதற்கும் பிரயோஜனம் இல்லை. அவர்களால்  மற்றவர்களுக்கு சிரமம் தான். இவர்களை வைத்து வாழ்க்கைத் தள்ளுவது கடினம். எதை , எப்படிச் சொன்னாலும் அவர்கள் புரிந்து  கொள்ளமாட்டார்கள். அவர்கள் மற்றவர்களுக்கு  ஒரு சுமை தான்.

இதில் நீங்கள் எந்த ரகமோ ?

எப்படி இருப்பினும் வாழ்க்கையை நாம் நினைத்தால் நல்லபடி மாற்றிக் கொள்ளலாம். மாறுவது  நம் கையில் உள்ளது.


வாழ்க நல்வாழ்க்கை !

வெல்க உலகோர் மனங்களை !  !    


################################################################################

No comments:

Post a Comment