Pages

Monday 13 February 2017

காதலர்கள் தினச் சிறப்புக் கதை - காதலைக் காப்பாற்றிய 'மை'


காதலர்கள் தினச் சிறப்புக் கதை 


காதலைக் காப்பாற்றிய 'மை'
மதுரை கங்காதரன்  

"இன்ஸ்பெக்டர் சார், இதோ நிக்கிறானே இவன், என் மகளை ஏமாற்றி இழுத்திட்டு வந்திருக்கிறான். உடனே இவனைக் கைது செய்யுங்க சார். என் மகளை அவனிடமிருந்து மீட்டுத் தாருங்க சார். அதில்லாமே என் மகள் பதினெட்டு வயது நிரம்பாத மைனர்!"
"சார். எங்கப்பா பொய் சொல்லுறாரு. நான் ஒரு மேஜரான பெண். நான் விரும்பித்தான் இவரோடு வந்திருக்கிறேன். இவரு கைநிறையச் சம்பாதிக்கிறார். இருவரும் ஒரே சாதி,, வரதட்சனை வேண்டாம்னு சொன்னவரு. ஆனா அப்பாப் பார்த்த பையனோ பெரிய இடமா இருந்தாலும் வேலை வெட்டி இல்லாதவன். எனக்குக் கொஞ்சம் கூட பிடிக்காத பையனை வலுக்கட்டாயமாக கட்டி வைக்கப் பார்க்கிறாங்க. நீங்கதான் சார் எங்களைச் சேர்த்து வைக்க வேண்டும்"
"ஏம்மா, பார்த்தா சின்னப் பொன்னு போல இருக்கே. நீ மேஜர்னு நான் எப்படி நம்புறது? ஏதாச்சும் அடையாள அட்டை இருக்குதா?"

"எல்லாமே வீட்டிலே இருக்குது சார். நான் வீட்டுக்குப் போனா எங்கப்பா என்னைப் பிடிச்சு வைச்சுருவாரு சார். என்னை நம்புங்க சார்"
"இதோப் பாரம்மா, நீ மேஜர்னு நிரூபிச்சாத்தான் நான் ஏதாச்சும் செய்ய முடியும். இல்லாட்டி நீ உங்கப்பாக் கூடப் போக வேண்டியதுதான். இனி இவரை மறந்து, உங்கக் காதலை மறந்து உங்கப்பாப் பார்த்த வரனைக் கல்யாணம் பண்ணிக்க வேண்டும்" என்று கறாராகப் பேசினார் இன்ஸ்பெக்டர்.
"இனிமே யோசிக்கிறதிலே எந்த ஒரு பிரயோசமும் இல்லை. சும்மா முகத்தைக் கையாலே மூடிட்டு அழுதா பிரச்சனைத் தீராது. இப்பவே சாட்சி வேண்டும்" என்று அடம்பிடித்த இன்ஸ்பெக்டருக்கு சட்டென்று சற்றும் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு சாட்சிக் கிடைத்தது.
"நீ மேஜரானப் பொண்ணுதான். அதற்குச் சாட்சி எனக்குக் கிடைச்சிருச்சி"
"சாட்சி கிடைச்சிருச்சா! என்னா சார் சொல்றீங்க?"
"அந்தப் பொண்ணோட இடதுகை ஆட்காட்டி விரல்லே ஓட்டு போட்ட மைதான் சாட்சி. இதுவே போதும்" என்று சொல்ல பெண்ணின் அப்பா வாயடைத்துப் போக இளங்காதலர்கள் வாயில் புன்னகை அரும்பியது.
*****
காதலைக் காப்பாற்றிய மை
காதலைக் காப்பாற்றிய மை

No comments:

Post a Comment