HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN
65 . Who is having the destiny of a country ?
* One way 'Hunger' is making benefit to us. Because some time it helps to forget our worries and avoid to think unnecessary thoughts.
* A person who is involved very much in science is very difficult to accept ' God ' ideology . Because each thing in science is having proof . But God's philosophy depends upon everyone's sense of realization.
* A nation's destiny is in it's top twenty rich people as well as political leaders hand. They won't be affected if their country is trapped in a tense state of the economy , financial crisis or bankrupt etc., but many of us are not aware of this.
* Making of multiple best instruments like flute, veena , tabela are not having capable of playing such instruments, You tell me ! why?
* If you want to be succeeded in your philosophy then it's words and actions should be accepted by irrespective of age , gender, distinction and any where it should be fit for human life .
SUCCESS STEPS CONTINUES NEXT ...
############################## ############################## ################################
இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள்
மதுரை கங்காதரன்
65. ஒரு நாட்டின் தலையெழுத்து யாரிடம் உள்ளது?
* பசியும் ஒரு வகையில் நமக்கு நன்மை செய்கிறது. ஏனெனில் சில சமயங்களில் பசியானது கவலைகளை மறக்கச் செய்வதோடு தேவையற்றவைகளை நினைக்கவிடாமல் செய்துவிடுகின்றது.
* அறிவியலில் / விஞ்ஞானத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்களுக்கு 'இறைவன்' சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்வது மிகவும் கடினம். ஏனெனில் அறிவியலில் ஒவ்வொன்றும் நிரூபணம் கொண்டவை. ஆனால் இறைவனைப் பொருத்தமட்டில் அவரவர் உணர்வைப் பொறுத்ததாகும்.
* ஒரு நாட்டின் தலையெழுத்து அந்த நாட்டில் இருக்கும் முதல் இருபது பணக்காரர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் கைகளில் உள்ளது. ஒரு நாடு பொருளாதாரத்தில் சிக்கித் தவித்தாலும், நிதி நெருக்கடியில் தத்தளித்தாலும் அல்லது நாடே திவாலாகிவிட்டாலும் அவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுவதில்லை என்பது பலருக்குத் தெரியாத விஷயம்.
* பலவகை சிறந்த புல்லங்குழல், வீணை, தபேலா போன்ற இசைக்கருவிகளைத் தயாரிக்கும் வல்லமை கொண்டவனுக்கு அதை வாசிக்கும் ஞானம் இல்லாமல் இல்லாது போவது ஏனோ? என்பதை நீங்களே சொல்லுங்கள்!
* உனது தத்துவம், கொள்கை வெற்றிபெற வேண்டுமானால் உன்னுடைய வார்த்தைகள் மற்றும் செயல்கள் ஒவ்வொன்றும் வயது வித்தியாசம் இல்லாமல், பால் வேற்றுமை இல்லாமல், நாடு வேறுபாடு இல்லாமல் அனைவரும் எக்காலத்திலும், எந்த இடத்திலும் மனித வாழ்க்கைக்குப் பொருந்தும்படி இருக்கவேண்டும்.
வெற்றிப் படிகள் இன்னும் உயரும்
)))))))))))))))))))))))))))))) )))))))))))))))))))))))))))))) )))))))))))))))))))))))))))))) ))))))))))))))))))))))))))))))
No comments:
Post a Comment