Pages

Saturday 13 December 2014

தமிழின் அடையாளம் தமிழ் எழுத்தே! TAMIL LANGUAGE IS ALIVE?


தமிழின் அடையாளம் தமிழ் எழுத்தே!
TAMIL LANGUAGE  IS ALIVE?
புதுக்கவிதை
மதுரை கங்காதரன்
 
மாமதுரை கவிஞர் பேரவை மற்றும் உலகத் தமிழாய்வு சங்கம்
நடத்திய கவிதை அரங்கம்

நாள்: 7.12.14   இடம்: மகாஜன மேன்சன், மதுரை.

 
தமிழ் மொழி தெரிந்தவர்கள்  எல்லாம் தமிழர்களா?
தமிழ்நாட்டில் வாழ்பவர்களெல்லாம் தமிழர்களா?
தமிழை உதட்டளவே உச்சரிப்பவர்   தமிழர்களா?
தமிழ் மொழியை கலப்பில்லாமல் பேசி வளர்ப்பவர்களே தமிழர்கள்!

 முக்கடல் சங்கமத்தில் பிறந்த மொழி தமிழ்
முச்சங்கம் போற்றி வளர்த்திட்ட உன்னத மொழி தமிழ்
முத்தமிழைக் கொண்ட முத்தான மொழி தமிழ்
மூவரசர்கள் கட்டிக் காத்த மொழி எங்கள் தமிழ்

 
தமிழ் அமுதமாய் அனைவருக்கும் விருந்து படைத்தது அன்று
தமிழ் பாலாய் மகழ்ச்சி பொங்கச் செய்த்து அன்று
தமிழ் அட்சயப் பாத்திரமாய் அள்ளி அள்ளத் தந்தது அன்று
தமிழ் பிற மொழி பிறப்பதற்கு ஆதாரமாய் இருந்தது அன்று


இன்றோ தமிழ் எழுத்துக்கள் எத்தனை? எனக்கேளுங்கள்!
'மூன்று' எனச்சொல்லி உயிர் மூச்சை நிற்கச் செய்திடுவான்!
தமிழிலில் தாலாட்டு பாடினால் தூங்கலாம்
தழிழில் பாடம்  நடத்தினால் தூங்கலாமா?

தாய்மையின் அடையாளமாய் அறிவிப்பது குழந்தைப்பேறு
மலரின் அடையாளம் தென்றலில் மிதக்கும் மணம்
தமிழனின் அடையாளம் தமிழ் மொழி
தமிழ் மொழியின் அடையாளம் தமிழ் எழுத்தே! 


மனிதனுக்கு அறிவு ஓராறு
தமிழுக்கு உயிரெழுத்து ஈராறு
அஃதோடு மெய்யெழுத்து மூவாறு
உலகமே தமிழின் வரலாறு!

அறுசுவை ஆறாய் பெருக்கெடுக்க
தனித்தமிழ் பேசுவோம்
தமிழை வளர்ப்போம்
தமிழைக் காப்போம்!

444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444



1 comment:

  1. அன்புள்ள நண்பர் கவிஞர் கங்காதரன் அவர்களுக்கு வணக்கம் .தங்கள் கவிதை மிக நன்று .பாராட்டுக்கள் .

    ReplyDelete