21.10.18 மின்படங்கள் - தமிழ்ப்பட்டறை இலக்கியப் பேரவை -
10வது கிளை - புதுக்கோட்டை
தனித்தமிழைப் போற்றுவோம் -
தமிழ்மொழியை அரியனையில் ஏற்றுவோம்
மதுரை கங்காதரன்
புதுக்கவிதை
உனைத் தாங்குவது தமிழ் தமிழா
அதை காப்பது கடமை தமிழா
பிறமொழி கலப்பது மடமை தமிழா
பிறழாமல் பேசுவது தூய்மை தமிழா.
தனித்தமிழ் தங்கமென அறிவாய் தமிழா
தரத்தில் அங்கமென உணர்வாய் தமிழா
தனித்தமிழ் சங்கமெனப் பதித்தாய் தமிழா
தடுத்தால் சிங்கமெனப் பாய்வாய் தமிழா.
எம்மொழியும் நன்மொழி அன்றோ தமிழா
நம்மொழியும் செம்மொழி அன்றோ தமிழா
எம்மொழியிலும் மூத்தமொழி அன்றோ தமிழா
தம்மொழியும் தமிழ்மொழி அன்றோ தமிழா.
காணும் காட்சியெல்லாம் காட்சியாகாது தமிழா
கலப்பு மொழியெல்லாம் மொழியாகாது தமிழா
பேசும் பேச்செல்லாம் பெருமையாகாது தமிழா
பிறமொழி எல்லாம் தாய்மொழியாகாது தமிழா.
தமிழின் பெருமையினை உயர்த்திடு தமிழா
தரணியில் சிறப்பினை நிலைத்திடு தமிழா
தனித்தமிழ் மதிப்பினை பரப்பிடு தமிழா
தாய்மொழி சிந்தனை வளர்த்திடு தமிழா.
நல்லாசிரியர் கவிஞர் பேராசிரியர்.மு.க.பரமசிவம்
1-1-92இ1 கருப்பணசாமி கோவில்தெரு,
பேரையூர் நகர் பேரையூர்
அஞ்சல், பேரையூர் வட்டம்,
மதுரை
மாவட்டம்
தமிழ்நாடு - 625703
அலைப்பேசி
எண் : 9786519558
புதுக்கோட்டை தமிழ்ப்பட்டறை இலக்கியப் பேரவை கிளை துவக்கவிழா கவியரங்கம்
தாய்த்தமிழை அரியணையில் ஏற்றுவோமே
அமுதமொழித்
தமிழினையே அமைப்பினிலே உயர்ந்ததையே
இமயமென
இருப்பதையே இயங்கிவரும் உயிர்ப்பதையே! தமிழினத்தின் மூச்சதையே தன்மானப் பேச்சதையே
எமதுநாட்டின்
அரியணையில் ஏற்றிடுவோம் ஒருங்கிணைந்தே!
உருவாகிச்
சிறந்திருக்கும் உருப்படியாய் மலர்ந்திருக்கும்
பெருவாரித்
தமிழினத்தின் பிறப்பினிலே கலந்திருக்கும்!
மருவற்ற
தனித்தமிழாய் மாண்புடனே எழுந்திருக்கும்
அருந்தமிழை
நம்தாயை அரியனையில் ஏற்றிடுவோம்!
புலவர்தம்
நாவினிலே புனிதர்தம் மனதினிலே
இலக்கியத்தின்
வடிவினிலே இசைத்தமிழின் ஒலியினிலே! வலம்புரியாய் பிறந்தெழுந்த வனப்பான தமிழ்த்தாயை
நிலம்புகழ
அரியணையில் நிறுத்திவைத்துத் தொழுவோமே!
பிறர்நாட்டார் போற்றுகிற பழகுதமிழ் இலக்கியங்கள்
சிறப்பாலே
சிலிர்த்திருக்கும் செம்மொழியாய் நிறைந்திருக்கும்! உறவான தமிழ்மொழியை உயிரான
தமிழ்மொழியை
அறிவுடனே வணங்கிடுவோம் அரியணையில் ஏற்றுவோமே!
தேமதுரத்
தமிழாகி திகட்டாத தேனாகி
பாமரரும்
படித்தவரும் பருகுகிற அமுதாகி!
மாமதுரைத்
தமிழ்ச்சங்கம் முடியரசி எனஇருந்த
ஆம்இன்றே ஒருங்கிணைவோம் அரியணையில் ஏற்றுவோமே!
****************
நன்றி