Pages

Monday, 3 June 2019

உள்விதி மனிதன் பாகம் : 42. சொர்க்கம் அடையும் வழி A WAY TO REACH HEAVENஉள்விதி மனிதன் 
சமமனிதக் கொள்கை 
மதுரை கங்காதரன் 
பாகம் : 42. சொர்க்கம் அடையும் வழி 
A WAY TO REACH HEAVEN
Related image

மேன்மையான மனிதா! உன் ஜீவா ஓட்டம் நின்ற பிறகு உன்னைத்  தொட்டுக்கொண்டிருந்த அந்த ஜீவா ஆன்மா உன்னைப் பிரிந்து சென்ற பிறகு அது உன் செயலைப் பொருத்துத் தான் சொர்க்கமோ அல்லது நரகத்தைத் தொடும் என்கிற ஐதீகம் இருக்கின்றது. நன்றாக கவனிக்க வேண்டும். அதாவது நீங்கள் செய்யும் நல்ல செயல் பொருத்தே தவிர நல்ல எண்ணங்களைப் பொருத்தோ, நல்ல நினைப்பு பொருத்தோ அல்ல. இதில் 'செயல்' என்பதை எதற்காக அழுத்தத்துடன் சொல்லப்படுகிறதென்றால், ஒருவனின் செயல் தான் அவனை நல்லவன், கெட்டவன் என்று பிரித்துக் காட்டும். பலர் வெளியில் ஆயிரம் முறை 'நல்லதை செய்' என்றும், நல்ல எண்ணம், சிந்தனை கொள்ளவேண்டும் என்றும் பேசியும் முழங்கவும் செய்வார். ஆனால் திரை மறைவில் உள்ளே செய்கின்ற செயலிலோ  ஊழல், லஞ்சம் அல்லது பணத்திற்காகப் பேராசைப்பட்டு பல தீய செயலில் மறைமுகமாக அல்லது பிறரை மறைமுகமாகத்  துன்புறுத்தும் செயலில் ஈடுபடுவர். அவனுக்குத் தனியாக நரகம் என்று மேலோகத்தில் இல்லை. அப்படிப்பட்ட மனிதன் உனக்கு வேண்டுமானால் பகட்டாக, அந்தஸ்து மிகுந்தவனாக, பணக்காரனாகத்  தோன்றலாம். ஆனால் அவன் நிச்சயம் மரண அவஸ்தை தான் பட்டுக்கொண்டிருக்கிறான் என்று உங்களில் பலருக்குத் தெரியாது, அதாவது அவன் தனது சுயநலமிக்கச் சுகத்திற்காக அவனது தலைமுறையே காணாமல் போகும் அளவுக்குக் கஷ்டப்படுவான்.

Image result for A WAY TO REACH HEAVEN

ஏனெனில் அவனையும் அவனுக்குள் இருக்கும் உள்விதி மனிதன் நானல்லவா ஆட்டிப்படைக்கிறேன். அன்பு மனிதா! நான் நீதி தவறாத நீதிபதிஉனக்கு நீதி நல்ல வழியில் தேடித் தரவேண்டும். நிரந்தரமாக உன் மகிழ்ச்சி காத்திட வேண்டும். உன் பரம்பரைக்கும் நிம்மதி தரவேண்டும் என்கிற ஆசை எனக்கு உள்ளதால், நீ தவறு செய்யும்போதெல்லாம் உனக்கு யாராவது தீர்ப்பு வழங்கித் தண்டனை கொடுக்கிறார்களா? இல்லையே. குறுக்கு வழிகளில் முறைகேடாகச்  சொத்து சேர்த்தவன் எவ்வளவு தான் தன் பெயரில் தன்  குடும்ப, உறவின் பெயரில் சேர்ப்பான். ஐந்து தலைமுறை? பத்து தலைமுறை?அவைகளெல்லாம் நீ எவ்வளவு காலம் மறைமுகமாக பலரது வயிறெரிச்சல், சாபம் மற்றும் அசிங்கமானப் பேச்சுக்கு ஆளாகி அவமானப்பட்டு கஷ்டத்துடன் சேர்த்திருப்பாய்! இனிய மனிதா உன்னை நினைத்தால் பாவமாக இருக்கின்றது. நீ பட்ட அந்தக் கஷ்டம் அவர்களுக்குத் தெரியாது. நீ சேர்த்து வைத்த அந்த செல்வத்தை நீ யாருக்குத் தானமாகக் கொடுத்தாலும் அதை அவர்களால் மகிழ்ச்சியாக அனுபவிக்க இயலாமல், கூடிய விரைவிலே அவர்களிடத்தில் இருந்த கொஞ்சநஞ்சம் பணமும், செல்வமும் அதோடு இழந்து விரைவிலே அவர்கள் ஓட்டாண்டிகளாகிவிடுவார்கள்.

பேராசை கொண்ட பிரபலத் தலைவர்கள், நடிகர்கள், நடிகைகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், ஆன்மீகவாதிகள் இன்னும் பலர் இறக்கும்போது, தான் சேர்த்து வைத்த சொத்துடன் இறந்தார்களா?  சில நேரத்தில் அவர்கள் தற்கொலையும் செய்யுமளவிற்கு சென்றுவிடுகிறார்களே ஏன்? மனஅழுத்தம், மனஉளைச்சல், அவர்கள் தேடிய வினை, அவர்களை விட்டு அகலாமல் நான் அணைபோட்டுத் தடுத்து தண்டித்தது. அது மற்றவர்களுக்குத் தெரியாது!

Image result for A WAY TO REACH HEAVEN

வெற்றி மனிதா! நீ தேடிய மறைமுகத் தீய எண்ணத்துடன் வந்த செல்வங்கள் வேண்டுமானால் மற்றவர்களுக்கு கொடுக்கலாம். அத்துடன் இருமடங்கு பாவத்தையும் அவர்களுக்குக் கொடுக்கிறாய் என்று மறந்துவிடாதே! அந்த பாவம் உன்னை அழிப்பதோடு அவர்களையும் அழிக்கும் கருவியை கொடுக்கிறாய் என்று மறந்துவிடாதே!

ஒருசமயம் நீ கொடுத்த செல்வமே உனக்கு எமனாக வந்து உன்னையே உலை வைத்துவிடும். அது பாம்புக்கு பாலூட்டினால் அது உன்னையும் விடாது, சென்ற இடத்திலுள்ளவர்களையும் விடாது என்ற கதையாகிவிடும். 
********************

1 comment: