Pages

Monday 10 June 2019

உள்விதி மனிதன் பாகம்: 48 தவறுக்கு காரணம் பயமின்மையே! FEARLESS INDUCE PEOPLE TO DO WRONG



உள்விதி மனிதன்
சமமனிதக் கொள்கை 
பாகம்: 48, தவறுக்கு காரணம் பயமின்மையே! 
FEARLESS INDUCE PEOPLE TO DO WRONG
மதுரை கங்காதரன்   

இரக்கமுள்ள மனிதா! நீ நினைப்பது அனைத்தும் சரி தான். நீ என்ன என்ன நினைக்கிறாயோ அது கூட சரிதான். அந்த நினைவு ஆழமாய் பதியும்போது அந்தச் செயல்கள் திரும்பத் திரும்ப செய்ய வைக்கிறது. அதுவே பின்னர் பழக்கமாகி அடிமையாகிவிடுகிறது. இது நல்ல, கெட்ட செயல்களுக்கு நன்றாகப் பொருந்தும்.

சிந்தனை கொண்ட மனிதா! வருங்காலம், நிகழ்காலம் அறியும் ஆசை மனிதனுக்கு விட்டு வைக்கவில்லை. வருங்காலம் எப்படி இருக்கும்? என்கிற ஆசையை வளர்த்திட எப்படியெல்லாம் எந்த எந்த மக்கள் என்னவெல்லாம் பயன்படுத்தி வருகிறார்கள்? என்று பார்த்தோமானால் முதலில் 'ஜாதகம்' என்றார்கள், அதிலிருந்து பலன்களைக் கணித்தார்கள். பிறகு நாடி, ஏடு, கைரேகை, எண் ஜோசியம், கிளி ஜோசியம், சீட்டு ஜோசியம், வாஸ்து சாஸ்திரம், ராசிக்கல் போன்ற பலவகைகள் வந்துவிட்டன. அனைத்தும் சரி தான்.

ஏனென்றால் உன் மனது ஒன்றை மட்டும் உதாரணம் காட்டிச் சொன்னால் திருப்தி பெறாது. ஆகவே பலவற்றைச் சொல்லி உன் மனம் எது ஒத்துக் கொள்கிறதோ அதைத் தான் நீ ஏற்றுக்கொண்டு பின்பற்றுவாய். அதுவே உனக்கு முழு திருப்தி தரும். அதில் ஏமாற்றம் வந்தாலும் சமாதானம் அடைவாய். ஏனெனில் நீயாக விரும்பி ஏற்றுக்கொண்டாய் அல்லவா? 

நாளடைவில் அதுவே பழக்கமாகி விட, அதற்கு அடிமையாகி அதனையே பரம்பரைப் பரம்பரையாக பின் பற்ற ஆரம்பித்துவிடுவர். அப்படித்தான் முன்னோர்கள் சிலவற்றை சரியான காரணங்கள் என்னவென்றுத் தெரியாமல் பின் பற்றிப் பல காரியங்கள் செய்து வருகின்றனர்.

பேரன்பு மனிதா! எல்லாவற்றிற்கும் பொதுவாக பிறர்க்குத் திருப்தி  என்பது எதிலும் இருக்காது. ஆகவே எல்லோரும் தைரியமாக தங்களுக்கு பிடித்த ஒன்றை பின் பற்றி வருகின்றனர். அதேபோல் வித வித ரூபங்களில் விதவிதமான வகைகளில் கடவுள் வழிபாடுகள், பிரார்த்தனைகள் உண்டாகப்பட்டுள்ளன.

இனிய மனிதா! இந்த பலவீனத்தைப் பயன்படுத்தி பிறர்க்கு உன் மூலமாகவே சிலர் உன்னை தவறான வழியில் பழக்கப் படுத்திவிடுகின்றனர். அதைத் தடுக்கவே உனக்குள் உள்விதி  மனிதனாக வந்துள்ளேன். எக்காரணம் கொண்டும் என்னை மீறி அந்த மாதிரித் தவறான காரியங்களில் ஈடுபட்டு விடாதே. இது எனது கடைசி எச்சரிக்கை!

பிரியமுள்ள மனிதா! உன் மனம் பலவிதமான நிறங்களைக் கொண்டது. உனக்கு எது பிடிக்கும் என்பது நீயே தேர்ந்தெடுத்துக் கொள்.

சேவை எண்ண மனிதா! மனிதன் இந்த உலகில் பலவிதமான கெட்ட செயல்களைச் செய்யக் காரணம் பயமின்மை தான். ஏனென்றால் பலவித நூல்களில், சமயங்களில் சில சமயம் மனிதச் சட்டங்களில் 'பாவம்' செய்துவிட்டு மனதாக 'மன்னிப்பு' கேட்டால் உன் பாவம் நீங்கிவிடும் என்றும், காசியில் குளித்தால் பாவ தோஷங்கள் கரைந்துவிடும் என்றும், சிலர் பாவத்திற்கானப் பரிகாரங்கள் செய்தால் போதும் என்றும் கூறி வருகின்ற படியால் மனிதன் தைரியமாக பாவங்கள் செய்துவிட்டு 'மன்னிப்பு' கேட்டுவிடுவதோடு மீண்டும் பாவம் செய்யவும் துணிந்து விடுகிறான். இது நல்லதா!

நல்லெண்ண மனிதா ! சில விளையாட்டுகளில் ஒரு அணி தவறு செய்தல் எதிரணிக்கு வாய்ப்போ, பலனோ அல்லது கூடுதல் மதிப்போ கிடைக்கும். ஆனால் நடைமுறையில் ஒருவன் தவறு செய்தால் அவனுக்கு மன்னிப்பும், அவனால் பாதிப்பிற்குள்ளான எதிராளிக்கு கஷ்டமுமல்லவா வருகிறது. கொலை செய்தவன் தண்டனை பெறுகிறான். ஆனால் எதிராளிக்கு வாழ்க்கையல்லவா இழப்பு ஏற்படுகிறது. அவர்களைச் சார்ந்து இருப்பவர்களின் கதி என்னவாகும் என்பதை நீ யோசனை செய்கிறாயா?

மனிதனுக்கு பயம் எப்போது நீங்கியது? ஒருவன் தவறு செய்துவிட்டு தைரியமாக எவ்வித தொந்தரவும், கஷ்டமும் இல்லாமல் நடமாடுவதை பார்க்கும்போது, சிலர் நாமும் தவறு செய்யலாமே! என்கிற முனைப்பும், தவறு பற்றிய பயமும் இல்லாமல் போய்விடுகின்றது.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$ 

No comments:

Post a Comment