Pages

Monday, 3 June 2019

உள்விதி மனிதன் பாகம்: 43 போலி ஆசாமிகளிடத்தில் ஏமாறாதே! - BEWARE OF FALSE PEOPLE!உள்விதி மனிதன்
சமமனிதக் கொள்கை 
மதுரை கங்காதரன் 
பாகம்:43 போலி ஆசாமிகளிடத்தில் ஏமாறாதே!
BEWARE OF FALSE PEOPLE
Image result for BEWARE OF FALSE PEOPLE

மனிதா! இப்போது புரிகின்றதா? சொர்க்கம், நரகம் உலகில் வாழ நீ செய்யும் செயலில் மட்டுமே பேசும். அதை நீ உன் வாழ்க்கையிலே அனுபவிக்கலாம். பெருமை மனிதா! முன் ஜென்மம் செய்த பாவ புண்ணியம் ஏற்ப உனது இந்த பிறவி அமைகிறது என்று எடுத்துக்கொண்டால் பச்சிளம் குழந்தைகள் ஏன் இறக்க வேண்டும்? வாழ்வைத் தொடங்குமுன் வாழ்வின் அர்த்தத்தைக் காணும் முன் அவர்கள் வாழ்க்கை முடிவுற யார் காரணம்? திடீரென்று வெள்ளம், எரிமலை, வறட்சி, சூறாவளியால் கூண்டோடு அடித்து பலரின் ஜீவ ஓட்டத்தை நிறுத்தப்படுகின்றதே அதற்கு காரணம் என்ன?

Image result for BEWARE OF FALSE PEOPLE

நன்மை தரும் மனிதா! ஒரு தலைவனின் தவறான எண்ணங்களினாலும் அதன் செயல்களினாலும் எத்தனைத் தலைகள் உருண்டிருக்கின்றன? என்பதை நீ சரித்திரத்தில் படித்திருப்பாய். அதாவது ஒருவனின் திமிர், அதிகார வர்க்கம், ஆணவம், தலைக்கணம், பேராசை போன்ற காரணத்தினால் பலரை துன்புறுத்தும் செயல் செய்கின்றபோது அதை யாராலும் தடுக்க முடியாது. அதன் பலனை அனுபவித்தே ஆகவேண்டும். ஏனெனில் அப்படிப்பட்டப் பாம்பை உன்னைப் போன்றோர்கள் தான் பாலூட்டி வளர்க்கிறார்கள்! இன்று நீ அனுபவிக்கிறாய். நீயே ஒரு பாம்பை, சிங்கத்தை, புலியை, கரடியை நரியை தேர்ந்தெடுத்து அதைக் கூட்டத்தோடு வளர்க்க துணைபோனதுமில்லாமல் அவர்களுக்கு வேண்டிய சகல வசதிகளையும் செய்து கொடுத்து அதன் பலனாக நான் உனக்குக் கொடுத்த அனைத்து செல்வத்தையும், வளத்தையும் அவர்களிடத்தில் இழந்து இப்போது அவர்களுக்கு அடிமையாக அல்லவா இருக்கிறாய்? அதன் பலன் இப்போது நீ இருக்கும் நிலைமை!

சிறப்புமிக்க மனிதா! உனது வலிமை உனக்குச் சோதிப்பதற்கு பல சந்தர்ப்பங்கள் கொடுத்தும் உன் அறிவிலி தன்மையால் உன் வாழ்வை நீயே நாசமாக்கிக் கொண்டு வருகிறாய். அதோடு உன்னுடன் ஒட்டியிருக்கும் என்னைக் கூட மதியாமல் பல சந்தர்ப்பங்களில் பலருக்குத் தீய செயல்கள் செய்தோ அல்லது தீய செயல்களைச் செய்யத் தூண்டவோ செய்யும்போது நான் இனி அதைப் பார்த்து சும்மா இருக்க மாட்டேன். உனக்குள் ஆன்ம ஓட்டமாய் இருக்கும் நான் பெரும் புரட்சி செய்துவிடுவேன். இனி போகப்போக என் ஆற்றலைப் பாரும்! நீ ஒரு பாம்பை வளர்த்தாயானால் அதேபோல் மற்றொரு பாம்பை உருவாக்கி அவர்கள் இருவரையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்கப் போகிறேன். இறுதியில் இரண்டுமே சாகப்போகும் காட்சியை நீ பார்க்கத் தான் போகிறாய்? அதில் நல்ல செயல் புரியும் நல்லவர்களே தப்பிப்பார் ! இது உறுதி.   

Image result for BEWARE OF FALSE PEOPLE

தன்னம்பிக்கை மனிதா! இந்த உலகில் கோடிக்கணக்கான ஜீவராசிகள் பல ரூபத்தில் பலவித இடங்களில் பரந்து விரிந்து இருக்கின்றன. ஆனால் அனைத்து ஜீவராசிகளில், இந்த பிரபஞ்சத்தில் வாழும் மனிதன் மட்டும் தான் அவன் தன் குணம், எண்ணம், சிந்தனை, செயல்களை எளிதாக சந்தர்ப்பத்திற்குத் தகுந்தாற்போல் சட்டென்று மாற்றிக்கொள்ளும் வரம் பெற்றிருப்பவன். மற்ற அனைத்து ஜீவராசிகள் அனைத்தும் அன்று முதல் இன்று வரையும், இனிமேலும் ஒரே மாதிரி செயல்களையும், குணங்களையும் கொண்டதாக இருக்கின்றது / இருக்கும்.

நல்லெண்ணம் கொண்ட மனிதா! மாமரத்தை ஒரு போதும் கொய்யா மரமாக மாற்ற முடியாது. அதன் வித்து முதல் முடிவு வரை அவற்றின் பலனாக மாமரம் ஒருபோதும் மாம்பழத்தைத் தவிர வேறொன்றும் தரும் குணம் அதற்கில்லை.

அதேபோல் மானின் குணம் ஒரு போதும் புலியின் குணமாய் மாறும் வாய்ப்பு கொஞ்சம் கூட இல்லை. மானின் குணம் கடைசி வரைக்கும் சாந்தமாய், புலி போன்ற பிராணிகளுக்கு பயப்படுமாயும் வளர்ந்து வீழ்கிறது.

நல் சிந்தனை மனிதா! பறவைகள் ஒருபோதும் மீன்களாக மாறாது. மீன்கள் ஒருபோதும் பறவைகளாக மாறது. ஆனால் தன்னம்பிக்கை மனிதா! இந்த ஜட, ஜந்து பிரபஞ்சங்களில் எல்லாம் இறைவனாக இந்த உள்விதி மனிதன் இருக்கின்றான். என் எண்ணப்படியே எல்லாம் நடக்கிறது என்று நினைக்கலாம். ஆனால் சிறப்பு மனிதா! இந்த அனைத்து ஜடம் மற்றும் ஜீவராசிகள் எப்போதும் இந்த உலகம் பிறந்தது முதல் இன்று வரையில் அதன் குணம்  மாறாமல் இருக்கின்ற காரணத்தினால் உனக்குத் தீங்கு ஏற்படாதவாறு உன்னைக் காத்து வருகிறேன்.

ஆனால் என் இனிய மனிதா! இறைவனான இந்த உள்விதி மனிதனுக்கு மிகப்பெரிய வேலை மனித உருவத்தில் வந்துள்ளது! என்றால் அதில் ஆச்சரியப்படுவதில் ஏதுமில்லை. ஏனென்றால் மனிதனின் எண்ணம், செயல்கள் எப்போதும் மாறக்கூடியவையாய் இருக்கின்றது.

இன்னும் பலவித வேளைகளில் செயல்களில், இயக்கங்களில், கட்சிகளில், ஆன்மீகத்தில், சாதி சமயங்களில் ஏன்? ஆதிவாசிகளில் கூட அவர்களுக்கென்று ஒரு கூட்டம் இருக்கின்றது. மனிதர்களுடைய எண்ணங்கள் செயல்பாடுகள் மேலும் பல மாற்றங்கள் நாம் பார்க்கலாம். ஏன் அவைகள் அழியும் வரைப் பார்க்கலாம்.

Image result for BEWARE OF FALSE PEOPLE

அதனால் பெருமை கொண்ட மனிதனே! உன்னை ஆட்டிப் படைப்பதற்காகத்தான் மனித உடலில் மட்டும் விஷேசமாக நான் உனக்குள் உள்விதி மனிதனாக ஆன்மீக இயக்கமாய், ஜீவ இயக்கமாய் இருக்கிறேன். இதுவரை நான் உன்னை என்னவோ என்று நினைத்தேன். ஆனால் எப்போது உன் எண்ணமும் செயலும் என்னோடு ஒத்துபோகாமல் இருக்க ஆரம்பித்ததோ, அதேபோல் உன்னை சூழ்நிலைக்குத் தகுந்தவாறு எப்போது உன்னை மாற்றிக் கொண்டாயோ அப்போது முதல் நான் உன்னிலும் மேலான ஆதிக்கம் செய்ய ஆரம்பித்துவிட்டேன்.

மேன்மை மனிதா ! போலியாக, நடிக்கும் பெரிய பெரிய தலைவர்கள், ஆன்மீகவாதிகள் போன்றோர்கள் எல்லாம் உனக்கெதிரே நடந்து கொள்வதை 'சரி' என்று எண்ணிவிடாதே. அவர்கள் உன் எண்ணத்திற்குத் தகுந்தவாறு உன்னைக் கவர அவர்கள் போடும் வேஷம் தான்.

Image result for BEWARE OF FALSE PEOPLE

ஆனால் நீ சென்ற பிறகு அவர்கள் போட்ட வேஷத்தைக் கலைத்துவிடுவார். பாவம்! அது உண்மையென நம்பி அதற்காக நீ ஏமாந்து அவர்களுக்கு அடிமையாயிருப்பாய். அதாவது போலியானத்  தலைவர்கள், ஆன்மீகவாதிகள் போன்றவர்கள் எப்போதும் மாறி மாறி பேசிக்கொண்டேயும், தாங்கள் பரம யோக்கியர்கள் போலவும் காட்டிக் கொள்வார்கள். ஆனால் மறைவில் அவர்களின் லீலை உனக்குத் தெரியாமல் பலவித தீயச் செயல்களில் ஈடுபடுவார்கள் ஜாக்கிரதை!
&&&&&&&&&&&&&&&&

1 comment: