Pages

Sunday, 13 April 2014

100% மக்களை ஓட்டு போட வைக்கும் எளிய வழி - WAY TO 100% ELECTION POLLING

100% மக்களை ஓட்டு போட வைக்கும் எளிய வழி 
WAY TO 100% ELECTION POLLING

 

விழிப்புணர்வு கருத்து

 

மதுரை கங்காதரன்

          

காலம் காலமாகவே மக்களை ஓட்டு போட வைப்பதற்கு அரசாங்கமும் , அரசியல் கட்சிகளும் பலவிதமான யுக்திகளை கையாண்டு வருகின்றது. பொதுவாக சில கட்சிகள்  ஓட்டு  போட்ட  மக்களுக்கு பிரியாணி விருந்து. சில கட்சிகள் பணம் பட்டுவாடா (தெரியாமல்) செய்கிறது. சில கட்சிகள்  இலவசங்களை  அள்ளித் தருகிறது.  அதையெல்லாம்  தாண்டி  இப்போது புதுப்புது யோனைகள்  முளைத்திருக்கின்றன. அதாவது ஓட்டு போட்டால்  ஒரு  ஹோட்டலில்   அவருக்கு  ஐம்பது சதவீதம் தள்ளுபடி. சிலர் கட்சிகள் கைபேசியில் 'ரீ-சார்ஜ்' செய்கின்றனர். சில  கட்சிகள்  வாங்கும்  பெட்ரோலில் சில ரூபாய் தள்ளுபடி. இன்னும்  இந்த பட்டியல்  நீண்டு கொண்டே போகலாம்.
         


சரி இது தான் வழியா? வேறு ஏதாவது வழி இருக்கின்றனவா ? என்று யோசிக்கும்போது எனக்கு ஒரு யோசனை தோன்றியது. அதாவது ஒவ்வொரு தொகுதியிலும் மக்கள் ஓட்டு போடும் போது அவர்களுக்கு 'தேர்தல் குலுக்கல் பரிசு எண் '  தேர்தல் முடிவு வெளியானவுடன் ஒரு குறிப்பிட்ட நாளில் குலுக்கல் முறையில் ஒவ்வொரு  தொகுதியிலும்  மூன்று அதிர்ஷ்ட நபர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.  அந்த பரிசை  ஒவ்வொரு  தொகுதி  வெற்றி பெற்ற வேட்பாளர் கையால் வழங்க வேண்டும் . அதை டி.வி யில் நேரடியாக ஒளிபரப்ப  வேண்டும்.  


      

முதல் பரிசு ஒரு லட்சம். (அரசு ஊழியராக இருந்தால்)
 
இரண்டாவது பரிசு  ஐம்பதாயிரம்  (அரசு ஊழியராக இருந்தால்)மற்றும் 
 
மூன்றாம் பரிசு இருபத்தைந்தாயிரம் (அரசு ஊழியராக இருந்தால்).
 
அரசு ஊழியராக இல்லையென்றால் வெற்றிபெற்ற  மூன்று நபர்களுக்கு மட்டும் கல்வித் தகுதி / அனுபவம் இருப்பின் குறைந்தபட்ச அரசாங்க வேலை தரலாம்.

மூத்தகுடிமகன்களுக்கு / ஐம்பது வயது கடந்தவர்களுக்கு அரசு ஓய்வூதியம் தரலாம்.
 
 
இப்படி செய்யும்போது மக்களுக்கு தானாகவே முன் வந்து ஓட்டுப் போடும் ஆர்வம் வரும். 100% வாக்குப்பதிவு கட்டாயம் நடக்கும்!
 
                


இது எப்படி இருக்கு?   
உங்கள் கருத்துக்களை இங்கே பதியலாமே?  
நன்றி ... வணக்கம் !!
**************************************************************************************************************************

No comments:

Post a Comment