Pages

Monday 28 April 2014

மே தினம் - உங்கள் தொழிலின் வெற்றித்தடங்கள் - SUCCESS WAYS OF YOUR ORGANIZATION

              மே தினம் - உங்கள் தொழிலின் வெற்றித்தடங்கள்
                                    
             SUCCESS WAYS OF YOUR ORGANIZATION  
                                     புதுக்கவிதை 
                            மதுரை கங்காதரன் 
                         
                                     
இன்று எத்துறையிலும் வெற்றி பெறுவது  கடினமே 
எத்திசையிலும் எண்ணிலடங்காத போட்டிகள்
எளிதில் கணிக்க முடியாத விலையேற்றங்கள் 
கடந்து வந்த பாதையில் தான் எத்தனை முட்கள் 
பூகம்பம் போல் ஆடிய சூறாவளி வீசிய நாட்கள் தான் எத்தனை 
உறுதி கொண்டு அனைத்து இடர்களையும் தாண்டினோம்  

                                                


எங்கள் நிறுவனம் சாதாரண செடியாக இருந்தது அன்று 
கற்பக விருட்சகமாக மாறிவிட்டது இன்று 
வேர்களோ நமது அசராத  அசையாத உழைப்பு 
விழுதுகளோ தாங்கி பிடிக்கும் தொழிலாளர்கள் 
இலைகளோ மகிழ்ச்சி வாழ்வு தரும் விசிறிகள் 
கனிகளோ நமக்கு அனுபவிக்கும் பலன்கள் 
முழு மூச்சாய் உழைக்கும் வரம் 
முதன்மையான உற்பத்தி 
முத்தான தரமே எங்கள் தாரக மந்திரம்.

                              
தொழிற்சாலை தான் எங்கள் குடும்பம் 
நாங்கள் அதில் ஓர் அங்கம் 
எங்களுக்குள் இன வேறுபாடுகள் உண்டு 
ஆயினும் எங்களுக்குள் ஒருமித்த கருத்தே உண்டு 
எங்கள் முன்னேற்றமே இதற்குச் சான்று 
அனைவரும் நண்பர்களாய் பழகிடுவோம் 
நட்புக்கு இலக்கணமாய் நடந்திடுவோம் 
உற்பத்திக்கு உறுதுணையாய் இருந்திடுவோம் 
உற்பத்தித்திறனை பெருக்க பாடுபடுவோம்.

                                  

பாதுகாப்பின் மேல் அக்கறை உள்ளோம் 
அது தொழிலாளர்களின் வாழ்க்கைக்காக 
தொழிலாளர்களின் மேல் அக்கறை உள்ளோம் 
அவர்களின் குடும்ப மகிழ்ச்சிக்காக 
சுற்றுப்புற சூழலின் மேல் அக்கறை உள்ளோம் 
அது பூமி மாசுபடுவதைத் தவிர்ப்பதற்காக 
தொழிலின் மேல் அக்கறை உள்ளோம் 
அது நாட்டின் முன்னேற்றத்திற்கா 

                                 

நேர்மையாய் நடப்போம் 
சத்தியமாய் இருப்போம் 
உண்மையாய் உழைப்போம் 
நிச்சயமாய் பலன் அடைவோம்  
இதுவரை செய்திட்ட சாதனைகள் சாதாரணம் 
இன்னும் உள்ளதோ ஏராளம் 
முடியுமா? என்று கேள்விக்குறியாய் 
வளைந்து விடமாட்டோம் !
முடியும்! என்று நிமிந்து நிற்ப்போம் 
அதை ஆச்சரியக்குறியாய் மாற்றிடுவோம்

             

ஓங்கிய கைகள் ஓயாது 
எழுச்சி நடை பிசகாது 
இலட்சியப் பயணம் மாறாது 
நன்கு உழைப்போம் ! மென்மேலும் உயர்வோம் !

                             
உழைத்து உயர்ந்தவன் 
எந்நாளும் வீழ்ந்ததில்லை !
###########################################################        

No comments:

Post a Comment