Pages

Sunday, 13 April 2014

நாலும் நடந்து முடிந்த பின் வரும் ஞானோதயங்கள் - REALIZE AFTER LOOSING ALL POWERS

நாலும் நடந்து முடிந்த பின் வரும் ஞானோதயங்கள்
REALIZE AFTER LOOSING ALL POWERS
 
புதுக்கவிதை
 
மதுரை கங்காதரன்

 

தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் வாங்கிய பின்னே
நன்றாக படித்திருக்க வேண்டும் என்று தோன்றுவது
 
உறவுகள் முறிந்த பின்னே
இழந்த உறவுகளின் முக்கியத்துவம் தெரிவது
 
கொடுத்த கடன் வராமல் இருக்கும்போது
கடன் கொடுத்ததைப் பற்றி யோசிப்பது
 
தேர்தலில் தோற்ற பின்னே
தேர்தலில் நின்றதைப் பற்றி நினைப்பது

 

காதலில் தோற்ற பின்னே
காதலில் விழுந்ததைப் பற்றி யோசிப்பது
 
வாங்கிய கடன் கட்ட முடியாத போது 
கடன் வாங்கியதைப் பற்றி யோசிப்பது
 
வேலையை ராஜனாமா செய்து தொழில் தொடங்கிய பின்னே
பார்த்த வேலையைப் பற்றி யோசிப்பது
 
கூட்டணியில்லாமல் தேர்தலில் தோற்ற பின்னே
கூட்டணியைப் பற்றி யோசிப்பது

 

ஒரு கடையில் பொருள் வாங்கிய பின்னே
மற்றொரு கடையைப் பற்றி யோசிப்பது
 
ஒரு பள்ளி / கல்லூரியில் சேர்ந்த பின்னே
வேறொரு பள்ளி / கல்லூரியைப் பற்றி யோசிப்பது
 
ஒரு பாடப்பிரிவு எடுத்த பின்னே
மற்றொரு பாடத்தைப் பற்றி யோசிப்பது
 
தொழிலில் நஷ்டம் வந்த பின்னே
தொழில் தொடங்கியதைப் பற்றி யோசிப்பது

 

ஒருவர் நம்பிக்கை துரோகம் செய்த பின்னே
அவரை நம்பியதைப் பற்றி யோசிப்பது
 
குழந்தையைப் பெற்ற பின்னே
அதன் வளர்ப்பைப் பற்றி யோசிப்பது
 
வழக்கு வெகுநாட்கள் முடியாமல் இருக்கும் பின்னே 
தொடர்ந்த வழக்கைப் பற்றி யோசிப்பது 
 
காலத்தை சரியாக பயன்படுத்தாத பின்னே 
வீணாக்கிய நாட்களைப் பற்றி யோசிப்பது 

 

சேர்த்த செல்வங்கள் செலவழித்த பின்னே 
சேமிப்பைப் பற்றி யோசிப்பது 
 
வாழ்கையில் தோற்ற பின்னே 
அதன் காரணங்களைப் பற்றி யோசிப்பது 
 
விபத்து நடந்த பின்னே 
விழிப்புணர்வைப் பற்றி யோசிப்பது 
 
தண்ணீர் கஷ்டம் வரும் பின்னே 
மழைநீர் சேகரிப்பைப் பற்றி யோசிப்பது 
 
மின்சார வெட்டு வந்த பின்னே 
மின்சிக்கணம் கடைப்பிடிப்பதைப் பற்றி யோசிப்பது 
 
விவசாயம் அழிந்த பின்னே 
பசுமையைப் பற்றி யோசிப்பது 
 
உலகமயமான பொருளாதாரம் சீர்கெட்ட பின்னே 
சீர்திருத்தங்களைப் பற்றி யோசிப்பது

 

கெட்ட பழக்கத்திற்கு அடிமையான பின்னே
கெட்ட பழக்கம் ஆரம்பித்ததைப் பற்றி யோசிப்பது
 
நிலநடுக்கம், பூகம்பம், புயல் வரும் பின்னே 
புவியியலைப் பற்றி யோசிப்பது 
 
தேவையானவைகளை வாங்க முடியாத போது 
தேவையற்ற பொருட்களை வாங்கியதைப் பற்றி யோசிப்பது 
 
திரைப்படம் எடுத்து ஓடாத போது 
திரைப்படம் எடுத்ததைப் பற்றி யோசிப்பது 
 
பங்குச்சந்தை, ஊகவணிகத்தில் பணம் இழந்த பின்னே 
அதில் நுழைந்ததைப் பற்றி யோசிப்பது 
 
போட்ட பணம் கிடைக்காத பின்னே
நிதிநிறுவனத்தின் உண்மைத் தன்மையைப் பற்றி யோசிப்பது
                   
அரசியல் கட்சித் தலைவர் வாக்குறுதியை நிறைவேற்றாத பின்னே
அவர்களுக்கு ஓட்டு போட்டதைப் பற்றி யோசிப்பது  
 
நகை பணம் போலிச்சாமியாரிடம் இழந்த பின்னே
சாமியாரின் ஏமாற்று வேலையைப் பற்றி யோசிப்பது
  
எதிலும் ஏமாந்த பின்னும் நஷ்டம் வந்த பின்னும் 
மீண்டும் மீண்டும் புதிதாக ஏமாறுவது தான் மக்களின் விதியோ?
 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 

No comments:

Post a Comment