Pages

Wednesday 5 June 2019

உள்விதி மனிதன் பாகம் : 45 இறைவன் - அசலும் நகலும்! GOD - REAL AND FAKE!



உள்விதி மனிதன்
சமமனிதக் கொள்கை 
பாகம் : 45 இறைவன் - அசலும் நகலும்! 
GOD - REAL AND FAKE!

Image result for GOD - REAL AND FAKE!

மேன்மை கொண்ட மனிதா! ஆன்மிகம் புனிதமானது. மனிதகுலத்திற்கு மிகவும் அவசியமானது. ஒருவகையில் மகிழ்ச்சி வாழ்க்கை வாழ்வதற்கு உதவி செய்வது. தன்னை உணர்வது, எப்படி ஒரு முறையான நல்ல வாழ்க்கை வாழ்வது? போன்ற பல சிறப்பு அம்சங்கள் ஆன்மீகத்தில் இருக்கின்றன. ஆனால் இன்றைய கால கட்டத்தில் ஆன்மீகவாதிகள் சிலர் இவ்வாறு போதிக்கிறார்கள். அதாவது ஆன்மீகப் பற்று உள்ளவர்களின் கடமைகளை மறக்கச் செய்வதே, அல்லது அரிய மனித வாழ்க்கையை வாழத்தவிர்ப்பதே, தனக்குச் சொல்லாத, சம்பந்தம் இல்லாதாக்  கடமையைச் செய்வதே தான் ஆன்மீகம் என்று தவறான வழியில் போதிப்பவர்களாகத் தெரிகிறது. அரசாங்கச் சட்டத்தில் எந்த ஒரு பிரிவிலும் கடவுள் பிரார்த்தனை, கோவிலுக்குச் செல்லுதல், பஜனை செய்தல் போன்றவை சொல்லப் பட்டிருக்கின்றதா? அவையெல்லாம் விளையாட்டு, பொழுதுபோக்குப் பிரிவு போல ஆன்மீகமும் சேர்ந்துவிட்டதா? என்கிற சந்தேகம் எழுகிறது. 

அன்பு மனிதனே! உனக்குப் பல கடமைகள் வாழ்க்கையில் இருக்கின்றது. அதை முதலில் தவறாது செய்துவிட்டாலே பாதி ஆன்மிகம் உங்களுக்கு கிடைத்துவிட்டது என்று அர்த்தம். மீதி பாதிஉனக்குப் போகப்போக தெரிந்துவிடும். அதை விட்டுவிட்டு குடும்பத்தை மறந்து, குடும்பத்தைத் துறந்து, பலரைப் புண்படுத்தி உன்னை நீயே பலவகையில் கஷ்டப்படுத்திக் கொள்வது தான் உண்மை ஆன்மிகம் என்பது உண்மைக்குப் புறம்பானது ஒன்று என்றே தோன்றுகின்றது.


Related image

பெருமை மிக்க மனிதா! உன்னுள் இருக்கும் இந்த ஜீவ ஓட்டமாய் உண்மையாய் இருக்கும் உள்விதி மனிதனை மறந்து வெளியில் இருக்கும் பொய்யான தோற்றத்தில் நீ தினமும் ஆடி, பாடி, நடித்துக் கொண்டு இன்னும் எத்தனை காலம் உன்னை நீயே ஏமாற்றிக்கொள்வாய்? அதோடு நீ, என்னையுமல்லாவா ஏமாற்றுகிறாய்? 

ஒருவர் கோவிலில் இருக்கும் இறைவனை எந்நாளும் பஜனை, ஆராதனை செய்து வந்தார். அவரைப் பார்த்தவுடன் அவரிடத்தில் ஏதோ ஒன்று எனக்கு கேட்கத் தோன்றியது.

"சுவாமி! நீங்கள் தினமும் இறைவனை வழிபாடு செய்கின்றீர்களே! ஆராதனை செய்கிறீர்களே ! அது எதற்காக?" என்று கேட்டேன்.

அவரோ "இறைவனைக் காண்பதற்காக!" என்று பதிலளித்தார்.

"ஆனால் நான் இறைவனை எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கின்றேனே, நீங்கள் பார்க்கவில்லையா?" என்றேன்.

"அப்படியா?" என்று ஆச்சரியப்பட்டு 'எங்கே? எங்கே?" என்று ஆர்வமாய்க் கேட்டார்.

நான், எதிரில் இருக்கும் இறைவனைக் காட்டி இது தான் தெய்வம். எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் இறைவனைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன்" என்று பதிலளித்தேன்.

அதற்கு அவரோ "இதுவா தெய்வம்? அவர் உருவமற்றவர். அவரை உணர்வின் வடிவமாக உள்ளவர். அவரின் செயல் மூலம் தான் உணர முடியும்" என்றார்.


Related image

"இறைவன் இங்கு சிலையாகக் காட்சி தருகிறார். இந்தச் சிலைக்கு செயல் இல்லை. ஆனால் நாம் எப்போதும் நினைத்துக்கொள்ள, மறந்துவிடாமல் இருக்க மறந்துவிடாமல் இருக்க, ஒரு  அடையாளத்திற்காகத் தான் இந்தச் சிலை. பிறகு அசலுக்கும் நகலுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?" என்று கேட்டேன்.

அவருக்கு பதில் தெரியாமல் முழித்தார்.

"நகல் சிலை. அசல் செயல். நீ நகல். உன் செயல் அசல். நீ நகலாய் இருப்பதால் இருக்கிறாய். ஆனால் உன் செயல் அசலாய் இருப்பதால் அழியாமல் இருக்கிறது" என்று விளக்கிச் சொன்னவுடன் 'புரிந்துவிட்டது' என்று தலையாட்டினார்.

செம்மை மனிதா! இந்த சிலை நகல் என்றால் உனக்குள் இருக்கும் இந்த உள்விதி மனிதனைத் தாங்கியவன் தான் அசல். யார் செயலைச் செய்து, கடமையை கண்ணும் கருத்துமாய் தன் வாழ்க்கைக் கடமையினைச் செய்வதோடு மனிதர்களுக்கும் அவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்பவர்கள் தான் அசல் மனித தெய்வங்கள். அதை விட்டுவிட்டு செயலைச் செய்யாமல் சிலைக்கு முன் நின்று பாட்டு பாடி, பஜனை செய்வதால் உன் கடமைகளை மறந்து நகலாக மாறிவிடுகின்றாய்.

அதாவது ஒருவனை தனது அன்றாட வாழ்வாதாரத்திற்குத் தேவையான வேலைகளைச் (கடமைகளை) செய்யுமாறுக் கட்டளையிட வேண்டும். அப்போது தான் அவனுக்கு வருமானம் கிடைக்கும். அவன் வாழ்கையும் குடும்பமும் செழிக்கும். அதை விட்டுவிட்டு அவனை நீ உனது வாழ்க்கைக் கடமையிலிருந்து வெளியில் வா! அந்த கடமையைச் செய்யாதே. இதோ என் கடமையைச் செய். இப்படி அவனுடைய கடமையை மறக்கச் செய்துவிடுகின்றது இன்றைய ஆன்மிகம்.

Image result for GOD - REAL AND FAKE!

இது எப்படி இருக்கிறதென்றால் "நீ சினிமாவுக்குப் போ" என்றால் அந்த கடமை செய்வதற்கு அவனுடைய பணமல்லாவா செலவாகும். பிறகு அவனது கடமைக்குப் பணம்? மீண்டும் உழை! நீ தான் உழைக்க வேண்டும். நீ கேளிக்கைக்காக, விளையாட்டுக்காக செலவழித்த பணம் உனக்கு திரும்ப கிடைக்குமா? கிடைக்கவே கிடைக்காது. அது மட்டும் நினைவில் வைத்துக் கொள்.

நம்பிக்கை மனிதா! நீ உழைத்தால் தான் உனக்கு நிம்மதி வந்து சேரும். அல்லது நீ உழைத்த பணத்தில் உன் கடமைக்கு உதவாத காரியத்தில் உன் சுயநல இன்பத்திற்காகச் செலவழித்தால் முடிவில் நீ பிச்சைக்காரனாக அலைய வேண்டும். அது தேவையா?
Related image

ஆகையால் மேன்மை மனிதா! நீ உழைத்த காசு உனக்குள் இருக்கும் இந்த உள்விதி மனிதனைச் சேர்ந்தது. அது எவ்வகையில் செலவழித்தால் அசலான ஆன்மீகத்தை அனுபவிப்பாய்' என்று நான் சொல்கிறேன். அந்த செலவின் மூலம் பலரை வாழ வைப்பாய்!
@@@@@@@@@@@ 

1 comment: