அனுபவ பொன்வரிகள்
மதுரை கங்காதரன்
'கரும்பு ' உணர்த்தும் நமது வாழ்க்கை பாடம்.
A LIFE LESSON FROM SUGARCANE
வாழ்க்கை சிலருக்கு இனிக்கின்றது. சிலருக்கு கசக்கின்றது. ஏன்? எதற்கு இந்த வேறுபாடு! அதாவது ஆசை கொண்ட வாழ்கை அனுபவித்து முடிந்தவுடன் அடங்கிவிடுகின்றது. அதன் பிறகு வாழ்கை கசந்துவிடுகின்றது. ஆனால் அக்கறையுள்ள வாழ்க்கை ஆயுள் முழுவதும் இனிமையாக அனுபவிக்கச் செய்ய உதவுகின்றது.
வாழ்க்கை சிலர் மேலிருந்து கீழாக ஆரம்பிப்பார்கள். சிலர் கீழிருந்து மேலே செல்வார்கள். என்ன புதிராகத் தெரிகின்றதா? இங்கு தான் 'கரும்பு ' நமக்கு வாழ்கை பாடத்தை உணர்த்துகின்றது. அதாவது சிலர் கஷ்டமான (கசப்பான) செயல்களான கடின உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கையை கையில் கொண்டு வாழ்க்கையை கரும்பின் மேலே கசப்பிலிருந்து ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் கீழே வர வர 'வெற்றி ' என்ற இனிப்பை வாழ்க்கை முழுவதும் அனுபவிக்கிறார்கள். பலர் கேளிக்கை, வெட்டிப்பேச்சு, சிரிப்பு , கேலி, கூத்து, கும்மாளம் என்பவற்றில் கவனம் செலுத்தி வாழ்கையை கரும்பின் கீழ்பகுதி இனிப்பிலிருந்து துவங்குகிறார்கள். அவர்கள் வாழ்க்கை போக போக கசந்து வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கு உதாரணம், படிக்கும் இளைஞர்கள் பலர் படிப்பில் கவனம் செலுத்தாமல் சினிமா, பாட்டு, கேலி பேசி பொழுதை கழித்துக்கொண்டிருக்கும் போது சில இளைஞர்கள் மட்டும் தீவு போல் தனியே பொறுப்புடன் படித்துக் கொண்டிருப்பதை நாம் பார்த்திருப்போம். அவர்களுக்கும் வெட்டி பேச்சு, அரட்டை அடிக்கவேண்டுமென்று நினைப்பு வராதா! ஆனால் அவர்களின் மனதில் 'இப்படி அரட்டை அடிப்பதற்கு இது சமயமல்ல!' என்று நன்றாக உணர்ந்தவர்கள். படிக்கும் வாய்ப்பை இப்போது விட்டுவிட்டால் பரீட்சையில் தேறும் வாய்ப்பு பிரகாசமாக இருக்காது. அதன் பிறகு வாழ்கை முழுவதும் முன்னேறும் வாய்ப்பு பறிபோய்விடும். ஆகவே படிப்பு கசந்தாலும் போக போக இனிப்பான பல வெற்றிகள் கிடைக்கும் என்று உறுதிகொண்டவர்கள்.
அலுவலகத்தில் சிலர் தங்களுடைய வேலை முடிந்த பிறகும் பக்கத்தில் உள்ளவர்கள், எதிரில் உள்ளவர்கள் என்னென்ன வேலை செய்கிறார்கள் என்று ஆர்வத்துடன் கற்றுக்கொள்வார்கள். விளையாட்டாய் ஆர்வத்துடன் கற்றுக்கொண்ட வேலைகள் , பின்னாளில் அதுவே அவருக்கு ஒரு சிறந்த மேலாளராக ஆகும் வாய்ப்பு கிடைக்கின்றது. அவர்கள் நினைத்திருந்தால் பத்தோடு பதினொன்றாக இருந்துகொண்டு பொழுதை கழித்திருக்கலாம். அவர்களுக்கு வாழ்கையில் முன்னேறவேண்டுமென்ற அக்கறை இருப்பதால் இது கசப்பாக இருந்தாலும் அவர்களின் ஆர்வம் செய்யச் சொல்கின்றது. வருங்காலத்தில் கிடைக்கப்போகும் இனிப்பான வாழ்க்கைக்கு அவர்கள் தங்களை இப்போதிலிருந்து தயார்படுத்திக் கொள்கிறார்கள். வெற்றியும் காண்கிறார்கள்.
வாழ்கையில் முன்பகுதியை அனுபவிக்க நினைப்பவர்கள் பின் பகுதியில் பத்து மடங்கு கஷ்டப்பட நேரிடும்.
ஆனால் முன்பகுதியில் கஷ்டப்படுபவர்கள் பின்பகுதியில் நூறு மடங்கு சுகத்தை அனுபவிப்பார்கள்.
நீங்கள் உங்களுக்குள்ள கரும்பான வாழ்கையை கீழிருந்து மேலாக செல்லப் போகிறீர்களா? அல்லது மேலிருந்து கீழாக வரப்போகிறீர்களா?
முன் கஷ்டம் (கசப்பு)! பின் சுகமா? (இனிப்பா?)
அல்லது
முன் சுகம் (இனிப்பு) பின் கஷ்டமா? (கசப்பா?)
(கரும்பு) முடிவு உங்கள் கையில்.
இன்னும் வரும் ...
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் /
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்
வரவே ற்க்கப்படுகின்றன
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்
மிகநன்று அல்லது
நன்று அல்லது
பரவாயில்லை அல்லது
இன்னும் தெளிவு தேவை
ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து அனுப்பலாம் ..
பத்திரிகை, வார இதழ் , மாத இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய
கீழ்க்கண்டவற்றில் தொடர்பு கொள்ளவும்.
+91 9865642333 அல்லது
e.mail id : gangadharan.kk2012@gmail.com
No comments:
Post a Comment