அனுபவ பொன்வரிகள்
மதுரை கங்காதரன்
'வெற்றி ' இடத்திற்குச் சென்ற அனுபவங்கள் -
AN EXPERIENCE TO REACH 'SUCCESS' PLACE
'வெற்றி ! வெற்றி ' பலர் சொல்கிறார்களே! அதை அடைய வேண்டுமென்ற ஆசை இருக்கின்றது . ஆனால் வழி தன் தெரியவில்லை என்று பலர் ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள் ! அதற்காக அந்த வெற்றியே உங்களுக்கு வழியை காட்டுவதோடு அது தன்னுடைய அனுபவத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறது.
நான் தான் வெற்றி! வெற்றி பெறுவது என்பது சற்று கடினம் தான். அதை நீ பார்க்கும் அல்லது சந்தித்த கஷ்டங்கள் அல்லது பிரச்சனைகள் மூலம் எளிமையாக விளக்குகிறேன். முதலில் இந்த வெற்றி அறிமுகமாவது பிரச்சனை எதிர்கொள்ளும்போது அல்லது வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தும் போது .
நான் பிரச்சனை அல்லது கிடைத்த வாய்ப்பில் வெற்றியடைவதற்கு ஆர்வத்துடன் ஓட ஆரம்பித்தேன். அதற்கான வழியை தேட ஆரம்பித்தேன். சிறிது தூரத்தில் அதன் வழியில் ஒரு திசை காட்டியை பார்த்தேன். அது வலது மற்றும் இடது என்று இரண்டு வழியைக் காட்டியது. இடது பக்கம் திசைகாட்டியில் 'வெற்றி (குறுக்கு வழி)' என்றும் வலது பக்கம் திசை காட்டியில் 'வெற்றி நேர் வழி ' என்றும் இருந்தது. வலது பக்கம் செல்வதா? இடது பக்கம் செல்வதா? என்று முடிவு எடுக்க முடியாமல் தவித்தேன்.
என்னானாலும் சரி என்று இடது பக்கம் அதாவது வெற்றி(குறுக்கு வழி ) தேர்ந்தெடுத்தேன். அதன் பாதை பளபளவென்று அருமையாக இருந்தது. இவ்வளவு எளிதாக இருகின்றதே! என்று ஆச்சரியப்பட்டேன். ஆனால் அது சில நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை. திடீரென்று ஒரு பெரிய பள்ளம் (அதாவது அது தோல்வியை குறிக்கும்). அதற்கு பக்கத்தில் எச்சரிக்கை பலகை ஓன்று இருந்தது! அதில் 'இதேபோல் சில பள்ளங்களை தாண்டிச் சென்றால் வெற்றி யை அடையலாம் ' என்று எழுதி இருந்தது. இந்த ஒரு பள்ளத்தை தாண்டவே சிரமம். மேலும் சில பள்ளங்களை எப்படித் தாண்டுவது ! அடி ஆத்தாடி! இந்த குறுக்கு வழியே வேண்டாம். தப்பித்தேன் . பிழைத்தேன். அந்த வலது பக்கம் நேர் வழியிலேயே வெற்றிப் பயணம் செய்யலாம் என்று அவசரம் அவரமாக ஓடினேன். ஆரம்பத்திலேயே முடிவு சரியாக எடுத்திருந்தால் இந்த கஷ்டம் வந்திருக்காதே! என்று மனதில் நொந்துகொண்டேன்.
வலது பக்கம் ஆரம்பமே கரடுமுரடான கற்களும் முட்களும் நிறைந்திருந்தது. (இவைகள் அனைத்தும் வெற்றியை அடையவிடாமல் தடுக்கும் இடையூறுகள்). இருந்தாலும் அவற்றை பொருட்படுத்தாது அதனை விலக்கியும் , தாண்டியும் சென்றேன். அந்த வழியில் செல்ல செல்ல கற்களும் முற்களும் மறைந்தன.(அதாவது இவைகள் கடின உழைப்பினால் கிடைத்த பலன்). 'இனி இதுபோல் எந்த கஷ்டம் வந்தாலும் தைரியமாக, துணிச்சலாக சமாளிப்பதற்கு தயாராக வேண்டும்' என்று மனதில் உறுதி கொண்டேன்.
இப்படியே சென்றுகொண்டிருக்கும் போது கடுமையான வெயில் உடலை வாட்டி எடுத்தது. தண்ணீர் தாகம் அதிகமாக எடுத்தது. பக்கத்தில் தண்ணீர் இருப்பதாக தெரியவில்லை. ஆனாலும் விடாமுயற்சியினால் தண்ணிரை தேடி அலைந்தேன் . அதோ ஒரு அழகான சுனை. ஆஹா.. என்ன அருமையான தண்ணீர். இப்போது எதையும் தாங்கும் மனமும், புது தெம்பும் கிடைத்துவிட்டது. இனி அடுத்த படி கடப்பதற்கு தயாராகி விட்டேன்.
அந்த பாதை மீண்டும் எவ்வித கஷ்டம் கொடுக்காமல் சென்றன. ஆனால் சிறிது நேரத்தில் உடலை நடுங்கவைக்கும் கடுமையான குளிர் தாக்க ஆரம்பித்தது. எனது மன உறுதி அதைக்கண்டு அஞ்சவில்லை. சலிக்காமல் அந்த பாதையை கடந்தேன். அதன்பிறகு இளம் வெயில் எனக்கு சற்று ஆறுதல் தந்தது.
மீண்டும் பயணத்தை தொடர்ந்தேன். சட்டென்று எதிர்பாராத பலத்தகாற்றுடன் ஒரு சூறாவளி எனது பயணத்தை தடுக்கபார்த்தது. ஆனால் அதைகண்டு எனது வெற்றி லட்சியத்தில் பின் வாங்காமல் பொறுமையாக உறுதிமிக்க மரத்தை இறுக்கமாக பிடித்துக் கொண்டேன். சிறிது நேரத்தில் அனைத்தும் காணாமல் போய்விட்டன. அந்த இடமே அமைதியாக திகழ்ந்தது.
இப்போது எதையும் தாங்கும் தன்னம்பிக்கை வந்தது. அந்த வழியில் முன்னேறிச்செல்லும்போது ஒரு 'அறிவிப்பு பலகை' ஒன்று இருந்த்து. அதில் இன்னும் 10 நிமிடத்திற்குள் 'வெற்றி ' இடத்திற்க்குச் செல்லும் படகு புறப்படத் தயாராக இருக்கிறது. அங்கு செல்ல விரும்புவோர் அதற்குள் சென்றால் தான் படகை பிடிக்கமுடியும். அதன்பின் படகு எப்போது வரும் என்று சொல்லமுடியாது.இந்த படகை விட்டுவிட்டால் மீண்டும் நீங்கள் வந்த வழியே திருப்பிச் செல்ல வேண்டியிருக்கும்.என்று இருந்தது. இவ்வளவு கஷ்டப்பட்ட பிறகு திரும்பிச் செல்வதா! கூடவே கூடாது!
பத்து நிமிடம் இருக்கின்றதே ! எனது ஆற்றல் அனைத்தையும் கொண்டு அந்த தூரத்தை அதற்கு முன்னமே கடந்தேன். அங்கே எனக்காக காத்திருந்த அந்த அழகான படகில் ஏறினேன். இன்னும் சிறிது நேரத்தில் 'வெற்றி' இடத்தை அடையப் போகிறோம் என்கிற மகிழ்ச்சியில் இருந்தேன். ஆனால் மீண்டும் புயல் மற்றும் மழையில் படகு தத்தளித்தது. கடைசியில் தாக்கு பிக்க முடியாமல் கவிந்தது. நான் எனது அறிவையும், திறமையும் கொண்டு ஒரு மரக்கட்டையின் உதவியால் 'வெற்றி ' இடத்தை அடைந்தேன்.
அங்கு நான் கண்ட காட்சி , அந்த சொர்க்க லோகத்தின் ஒருபகுதி தனியாக பிரிந்து வந்ததுபோல் ஒரு ஆனந்தம். அங்கு பூத்து குலுங்கும் வண்ண மலர் சோலைகள், அருவிகள், இதமான காற்று , மனதிற்கு குளிர்ச்சி தரும் அருமையான சூழ்நிலை, ஆரோக்கியமான உணவு வகைகள், அன்பான உபசரிப்பு, கண்கவர் மாளிகை இன்னும் பலவற்றை கொண்டிருந்தன. ஓஹோ .. இது தான் வெற்றி இடமா! இதுவரை எவ்வளவு கஷ்டப்பட்டாலும் இங்கு வரும்போது அனைத்து கஷ்டங்களையும் மறக்கச் செய்துவிட்டன. எங்கு எந்தவித கஷ்டமில்லாமல் சுதந்திரமாக, ஆனந்தமாக இருக்கலாம்!
இது தான் எனது வெற்றிப் பயணத்தின் கதை.
கஷ்டங்கள் எது வந்தாலும் கலங்காதீர்கள்!
உங்கள் இலக்கை நோக்கி முன்னேறுங்கள்!
வெற்றி அடைவீர்கள்.
அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
நன்றி!
இன்னும் வரும்...
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் /
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்
வரவே ற்க்கப்படுகின்றன
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்
மிகநன்று அல்லது
நன்று அல்லது
பரவாயில்லை அல்லது
இன்னும் தெளிவு தேவை
ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து அனுப்பலாம் ..
பத்திரிகை, வார இதழ் , மாத இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய
கீழ்க்கண்டவற்றில் தொடர்பு கொள்ளவும்.
+91 9865642333 அல்லது
e.mail id : gangadharan.kk2012@gmail.com
No shortcut to success.
ReplyDelete