அனுபவ பொன்வரிகள்
மதுரை கங்காதரன்
மனிதனின் வெற்றி மனிதனாக மாறுவதில் ?-
SUCCESS OF HUMAN IS BEHAVE LIKE A HUMAN ?
மனிதன் சமீப காலமாக கற்பனைக்கு எட்டாத பல சாதனைகளையும், வெற்றிகளையும் குவித்துக் கொண்டும் தன்னுடைய ஆற்றலையும், திறமையும் பல வழிகளில் நிரூபித்து வருகிறான் என்பதை யாராலும் மறுக்கமுடியாத உண்மை. ஏன்? ஒவ்வொரு மனிதனும் தான் எதாவது ஒரு வகையில் சாதனைபுரிய வேண்டுமென்று ஒரு குறிக்கோளுடன் இருக்கின்றனர்.
அதனால் ஒரு சிலர் அகிலம் போற்றும் விஞ்ஞானியாக திகழ்கின்றனர். ஒரு சிலர் உலகை ஆளும் கணிப்பொறியை உருவாக்குகின்றனர். மிகப் பெரிய தொழிலதிபர், கோடீஸ்வரர், சிறந்த நிர்வாகி, அரசியல்வாதி, ஞானி, ஆன்மீகவாதி ஏன் ஒரு சிலர் தெய்வங்களாக மாறி மனிதகுலத்திற்கு பெருமை சேர்த்திருக்கின்றனர். இன்னும் மிகைபடுத்தி சொல்லவேண்டுமென்றால் அவன் மிருகமாகவும் மாறிவிட்டான்.
அவனுடைய அறிவும், ஆற்றலும் பூமியில் பாதாளம் முதல் விண்ணிற்கும் வரையிலும் தன்னுடைய சாதனைகளை விரித்துக் கொண்டு வருகிறான், இவ்வளவு சாதனைகள் செய்தாலும் அவனால் செய்ய இயலாத சாதனை ஒன்றே ஓன்று தான்! அது என்னவென்றால் மனிதன் மனிதனாக இருப்பது தான் !?
மனிதனுக்கு பகுததறிவோடு ஆறறிவு இருப்பதை ஏற்றுக் கொண்டாலும் மனிதன் உருவில் இருக்கும் மனிதன் எப்படி மனிதனுக்குரிய குணத்துடன் மாறுவது ? என்று தெரியாமல் விழித்துக்கொண்டு இருக்கிறான். மனிதப் பண்புகள் என்னவென்றால் எப்போதும்
பிறரிடத்தில் அன்பு செலுத்துவது,
அவர்களுக்கு தகுந்த நேரத்தில் உதவிகள் செய்வது,
இரக்கத்தை காட்டுவது,
மனிதர்களுடைய கஷ்டத்தை போக்கி சுகத்தை கொடுப்பது,
சத்தியமான வழிகளில் நடப்பது,
இருப்பதை பகிர்ந்து கொடுப்பது,
நேர் வழியில் நடப்பது,
அறியாமையை அகற்றுவது,
வாழ்க்கைக்கான கல்வி வழங்குவது,
சிறிய தவறுகளை மன்னிப்பது,
பொறாமை போக்கி பொறுமை காப்பது,
கோபத்தை அழிப்பது ????
மேற்கூறியவற்றில் மனிதன் யாராவது சாதனை படைத்தால் தான் உண்மையான சாதனையாக ஏற்றுக்கொள்ளலாம்.
இன்று முதல் மனிதனாக மாற புதிய சபதம் எடுத்துக் கொள்வோம்.
வாழ்க மனிதன் !
வளர்க மனித சமுதாயம் !
இன்னும் வரும் ....
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் /
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்
வரவே ற்க்கப்படுகின்றன
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்
மிகநன்று அல்லது
நன்று அல்லது
பரவாயில்லை அல்லது
இன்னும் தெளிவு தேவை
ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து அனுப்பலாம் ..
பத்திரிகை, வார இதழ் , மாத இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய
கீழ்க்கண்டவற்றில் தொடர்பு கொள்ளவும்.
+91 9865642333 அல்லது
e.mail id : gangadharan.kk2012@gmail.com
Super..O...Super..
ReplyDelete