அனுபவ பொன் வரிகள்
மதுரை கங்காதரன்
அக்கரை பச்சை - கடலா - கானல் நீரா-
LOOKING OTHER BANK OF THE RIVER GREENER
IS A MIRAGE
மனிதனின் வாழ்கையில் நடைபெறும் நிகழ்சிகள் யாவற்றில் பலவும் அவரவர் விருப்பத்திற்கு உட்பட்டு நடைபெறுவதைக் காட்டிலும் , விபத்தில் நடைபெறும் நிகழ்சிகளே அதிகம். அதாவது எதிர்பாராத சம்பவங்களே நிறைந்து இருக்கும். அதனால் நிராசைகள் (நிறைவேறாத ஆசைகள்) எப்போதும் மனதில் இருக்கும். காரணம் , பலர் சுயமாக சிந்திக்கும் மனோபாவம் இல்லாமையும், குறிகோளற்ற வாழ்க்கை வாழ்வதாலும் தான்.
மனிதனின் மனம் எப்படி இருக்கின்றதென்றால் ஒரு ஆசை நிறைவேறிவிட்டால் மற்றொன்றை அடைய தயார் செய்துகொள்ளும். அது அடையாவிட்டாலும் அதைபற்றிய சிந்தனைகளை சிந்திக்கும் தன்மை கொண்டது. உதாரணமாக மோட்டார் வாகனம் வாங்க ஆசையுள்ளவன் கஷ்டப்பட்டு அதை வாங்கிவிட்ட உடனேயே கார் வாங்க ஆசைப்பட ஆரம்பிப்பான். மேலும் காரைபற்றிய கனவு, காரை பார்க்கும்போதெல்லாம் வரும். தனது ஆசை நிறைவேறாமல் போனாலும் அதைபற்றிய கனவு காணுவதில் அவனுக்கு அலாதியான இன்பம் கிடைகிறது என்றே சொல்லலாம்.
உடுத்தும் உடையிலும் சரி, அணியும் அணிகலன்களிலும் சரி, உபயோகிக்கும் பொருட்களிலும் சரி, கட்டிய வீடும் சரி, வாழும் வாழ்க்கையிலும் சரி இருப்பதில் திருப்தி அடையாமல், இல்லாதவற்றிக்கும், மற்றவர்களிடம் இருக்கும் , உபயோகப்படுத்தும் பொருட்களில் அதிக ஆசை இருக்கும். அதாவது தான் இருக்கும் இடத்தின் செழுமையான பச்சை பசுமையினால் திருப்தி அடையாமல் தூரத்தில் இருக்கும் பச்சையினை பற்றியே மனம் ஏங்கும்.
அது தூரத்தில் இருக்கும் மலைக்கு அல்லது கானல் நீருக்கு சமம் என்றே கொள்ளலாம். அதாவது தூரத்தில் இருக்கும் மலையானது நமக்கு மிருதுவாகவும், வள வளப்பாகவும் தெரியும். ஆனால் அதை நெருங்க நெருங்கத்தான் செழுமையான பச்சை பசுமைக்கிடையில் அங்கே இருக்கும் கரடுமுரடான கற்களும், முட்களும் தென்படும் அல்லது இருப்பதை கவனிக்க முடியும். அதில் இருக்கும் ஆபத்தும் அப்போது தான் தெரியும்.
அதுபோலத்தான் கானல் நீர். பாலைவனத்தில் அதிக வெயில் இருக்குமென்பது எலோருக்கும் தெரியும். அனால் அந்த வெப்பமே சில சமயங்களில் நீர் இருப்பது போல் ஒரு தோற்றத்தைக்கொடுக்கும். ஆனால் நிஜத்தில் அங்கு நீர் இருக்காது. அதுபோலத்தான் அக்கரையில் தெரியும் பச்சை.
அதாவது மனிதனின் மனம், மற்றவர்கள் வாழும் வாழ்க்கையில் தான் அதிக மகிழ்ச்சி உள்ளதாகவும் , தாங்கள் வாழும் தற்போதைய வாழ்க்கை கஷ்டங்கள் உள்ளதாகவும் நினைக்கும்.
மனிதனின் மனம் தூக்கத்தில் தவிர மற்ற நேரத்தில் மாறி மாறி அல்லது அங்கே இங்கே என்று தாவும் குணம் கொண்டது. அதுவும் மற்றவற்றில் அல்லது மற்றவர்களுடன் ஒப்பிடுவதில் அதிக அக்கறை கொண்டது. அதற்கு காரணம் ஆசை வார்த்தைகள், ஆடம்பரமான வாழ்க்கை, பகட்டான வேஷம் போன்றவை அந்த கரைக்கு தாவ ஆசைபடும். ஆனால் அதில் எவ்வளவு தூரம் போலியும் , ஆபத்தும் இருப்பதை அதை அனுபவிக்கும்போது தான் தெரியும். அடைந்துவிட்ட மனம் இந்த பச்சையை விட (இந்த புதிய வாழ்கையை விட) பழைய அல்லது இதற்குமுன் இருந்த பச்சையே மேல் என்று உணரும். அதுதான் பட்டு தெரியும் அனுபவம் என கொள்ளலாம்.
ஆகவே நாம் அக்கரையில் தான் பச்சை என்கிற நினைப்பை அகற்றுவோம். அக்கறை இருந்தால் எக்கரையும் பச்சை என்று இதன் மூலம் உங்களுக்கு நன்கு விளங்கும்.
அக்கரை பச்சை என்பது வாழ்கையில் எப்போதும் அக்கறை இல்லாதவர்களுக்கு!
எக்கரையும் பச்சை என்பது வாழ்கையில் என்றும் அக்கறை உள்ளவர்களுக்கு!
இன்னும் வரும் ....
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் /
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்
வரவே ற்க்கப்படுகின்றன
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்
மிகநன்று அல்லது
நன்று அல்லது
பரவாயில்லை அல்லது
இன்னும் தெளிவு தேவை
ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து அனுப்பலாம் ..
பத்திரிகை, வார இதழ் , மாத இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய
கீழ்க்கண்டவற்றில் தொடர்பு கொள்ளவும்.
+91 9865642333 அல்லது
e.mail id : gangadharan.kk2012@gmail.com
எக்கரையும் பச்சைதான்.. அக்கறை உள்ளவர்க்கு.
ReplyDelete